1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மறக்க முடியுமா?..... என் உண்மை கதை..

Discussion in 'Stories in Regional Languages' started by sugamaana07, Aug 4, 2016.

  1. sugamaana07

    sugamaana07 Silver IL'ite

    Messages:
    104
    Likes Received:
    139
    Trophy Points:
    93
    Gender:
    Female
    மறக்க முடியுமா?..... என் வாழ்வில்....31.07.1996
    --------------------------------------------------------------------------------------
    20 வருடங்களுக்கு முன் ....

    சிசு எனது வயிற்றில்... ஒரு நாள் இரவு திடீரென்று அத்தனை நீரும் வெளி வந்துவிட்டது.... அதை என்ன என்று புரியாமல் குழப்பத்தில் நான்... ( சத்தியமாகத் தெரியாது பனிக்குடம் உடைந்துவிட்டது என்று) அந்த சமயத்தில் எனது தந்தை உடல் நலம் சரி இல்லாமல் இருந்ததால் இரவில் எனது அம்மா அந்த வேலையில் இதை கவனிக்க முடியவில்லை.... ஏனெனில்? அப்பொழுது வெறும் 28 வாரங்களே ஆன சிசுவை சுமந்த நிலையில் நான்...

    காலை 5 மணிக்கெல்லாம் தி. நகர் ஒரு தனியார் கிளினிக் குடும்ப மருத்துவரை அழைத்து விவரத்தைக் கூறினேன்.. அவர்கள் என்னை 10 மணிக்கு மேல்தான் வரச்சொன்னார்.... நான் எனது கணவருடன் 10 மணிக்கு அங்கு சென்றால் என்னை அவர் பரிசோதித்த நேரம் 11.20 .... உடனே ஸ்கேன் எடுக்க வேறொரு இடத்திற்கு செல்ல அங்குதான் கொஞ்சம் விவரம் தெரிந்தது.... உடனே என்னை கிளினிக் திரும்பும்படி ஆணையிட்டார் டாக்டர்...

    திரும்பினோம்.... அப்பொழுதுதான் அவர் பனிக்குடம் உடைந்து விட்டது..எப்பொழுது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம்... ஆனால் 28 வாரங்கள் ஆன குழந்தையை காப்பாற்றுவது மிகவும் சிரமம்... ..என்று கூறி மேலும் தொடர்ந்தார் ..." ஸ்கேன் ரிப்போர்ட்ல குழந்தை ஒரு குறைபாடும் இன்றி இருக்கு. அதை பத்திரமாக வெளிக்கொணர்ந்து காப்பாற்ற வேண்டும்... ஒன்று இப்பொழுது செய்கின்றேன்.... ஒரு இன்ஜெக்ஷன் ரூ . 600/- போட்டு முதலில் குழந்தை உயிருடன் இருக்க வைக்கின்றேன்... அப்புறம் யோசிப்போம் " என்று கூறி பத்து நிமிடத்தில் இன்ஜெக்ஷன் போட்டார்...

    எனது நெஞ்சு துடிக்க ஆரம்பித்தது...
    ஏன் இந்த சோதனை? என் அம்மாவிற்கு நான் பல வருடங்கள் கழித்துப் பிறந்தேன் அதுவும் மிக குறைந்த இடையில்... திரும்பவும் எனக்கா? பிறந்தாலும் காப்பாற்றுவது சுலபமில்லை இது உண்மை.... முதலில் நன்றாய் பிறக்குமா? மூளை வளர்ச்சி? சந்தேகம்தான்... ஒரு வேளை இறந்துவிட்டால்? கட்டாயம் எனக்கு தெரிந்து சுகப்பிரசவம் சாத்தியமிருக்காது.... சரி ... தத்து எடுத்துக்கொள்வோமா? என்ன இது? ஏதேதோ கற்பனைகள்.... இதோ திரும்ப டாக்டர் என் பக்கம் வந்தார்.. " நாளை வரை பாப்போம்.. வலி எடுக்கவில்லை என்றால்.... சிசேரியன்தான்... ஆனால் குழந்தை இங்கு பிறந்து வேறு ஒரு ஹாஸ்பிடல் சென்று incubator வைப்பதற்குள் குழந்தை இறந்துவிடலாம்... சாத்தியக்கூறு அதிகம்.... " சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

    அன்று முழுவதும் நரக வேதனைதான்.... வயிற்றில் குழந்தை இருக்கும் அசைவோ, பாரமோ முற்றிலும் மறைந்து விட்ட நிலையில் ... கடவுளை தவிர வேறு கதி இல்லை என்ற நிலை... அந்த பொழுது தள்ளுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது..... மறுதினம் மேலும் கொடுமை... ஆனால் ஏதோ டாக்டர் 2 மாதங்கள் குழந்தையை அப்படியே வைத்து காப்பாற்றலாம் என்று கூறியதால் சற்று மனது லேசானது... அது முடியுமா என்று எல்லாம் மூளைக்கு எட்டாத சூழ்நிலை..எப்படியோ அன்று நேரம் கழிந்தது..
    மறுநாள் காலை 31.07.1996.... 8.45 கர்ப்பப்பையில் இருந்த கொஞ்ச நீரும் வெளி வந்தது... உடனே டாக்டர்... " இனி தாமதிக்க முடியாது... ஒரு மணி நேரத்திற்குள் அடையாறில் உள்ள மலர் ஹாஸ்பிடல் கொண்டு செல்லுங்கள்....நான் கடிதம் தரேன்" என்று கூறி உடனே கடிதம் தந்தார்....

    வாகனம் வந்தது... மலர் ஹாஸ்பிடல் நோக்கி...
    முதல் முதலில் கண் கலங்கிய நிலையில் ஆனால் மனதில் உறுதி மட்டும் நிறைய இருந்தது... டாக்டர் நித்யா ராமமூர்த்தி அவர்களை பார்த்தேன்.... என்னே கனிவான முகம்.... " ஏன் இப்படி இருக்கிறாய் ? " என்று என்னைப் பார்த்துக் கேட்டார்.... " எப்படி இருக்க சொல்கிறீர்கள்? 48 மணி நேரமாக வயிற்றில் குழந்தை இருக்கிறதா இல்லையா? என்று தெரியாத நிலை" என்று கூறிய என்னை பரிசோதித்து விட்டு .... "இன்னும் 10 நிமிடங்களில் குழந்தையை வெளியே எடுத்தாக வேண்டும் ... ஒரு உயிரைத்தான் காப்பாற்ற முடியும் என்கிற நிலை... பாப்போம் ... நம்மை மீறிய சக்தி ஒன்று அவரை நம்புங்கள்" என்றார் பரிவோடு...... நான் பயப்படவில்லை.... எல்லோருக்கும் கை அசைத்து விட்டு சென்றேன்.... மாலையில் என்னை சுற்றி ஒரு 10 செவிலியர்கள்..... அரை மயக்கம்.... " உனக்கு குழந்தை பிறந்திருக்கு " என்றனர்.... குழந்தையின் எடை 1.35 கிலோ..

    1/2 மணி நேரம் கழித்து என் கையை தொட்டு " உன் பையன் நன்றாய் இருக்கிறான்" என்றார் டாக்டர்.. நித்யா ராமமூர்த்தி.... " ஓ! பிழைத்துவிட்டானா? இனி காப்பாற்ற முடியுமா?" என்று கேட்டேன். " கவலையை விடு ... டாக்டர் . பிரபாகர் இருக்கிறார் என்கிறார்....

    12 ஆம் நாள் வீட்டிற்கு அழைத்து வந்தோம்... எனது அம்மா 2 மாதங்கள் பாடு பட்டு என் சிசுவை வளர்த்தாள்...
    ஆம்...! இதோ 20 வயதில் அச்சிறு குழந்தை என் கண் முன்.. அழகாய்,, மிக கம்பீரமாய்....

    தெய்வம் மனுஷ ரூபே..... டாக்டர் நித்யா ராமமூர்த்தி அவர்களை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்...

    டாக்டர் பிரபாகர் அவர்களை பல வருடங்களாய் சந்திக்க முடியவில்லை... ஒரு நிகழ்ச்சிக்காக டாக்டர் நித்யா ராமமூர்த்தி (D.G.O.SENIOR CONSULTANT-Fortis Malar Hospitals, Adayar, Chennai) அவர்களை அழைக்க சென்ற பொழுது இவரை சந்தித்ததோம்.... என்னே ஒரு சந்தோஷம் அவர் முகத்தில்...

    பணத்தை விட உயிர்களுக்கு மதிப்பு கொடுக்கும் மருத்துவ மனை என்று நான் உறுதியாய் கூறுவேன் ...

    என் உயிரையும், எனது அன்பு மகனின் உயிரையும் காப்பாற்றிய டாக்டர் நித்யா ராமமூர்த்தி அவர்கள் பல பல ஆண்டுகள் எல்லா வளமும் பெற்று வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்....

    எனது ஒரு சிறு அன்பை வெளிப்படுத்த நான் எழுதிய " சவாலே சமாளி " என்கிற கட்டுரை புத்தகத்தை அவருக்கு காணிக்கை ஆக்கியுள்ளேன்... இதனை ஸ்ரீமதி. வாணி ஜெயராம் தலைமையில் டாக்டர் 26.06.2016 அன்று சென்னையில் வெளியிட்டார்...

    படிக்க விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள...
    மைதிலி ராம்ஜி
    9840591503
    email: myakshayramjee@yahoo.co.in

    புத்தகத்தின் விலை ரூ. 50/- ( தபால் செலவு தனி )
    =================================================
     

    Attached Files:

    Loading...

Share This Page