1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மரங்கள்

Discussion in 'Posts in Regional Languages' started by g3sudha, Jun 23, 2012.

  1. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    [​IMG]

    சுற்றுச் சூழல் போராளி கோவை ம.யோகநாதன். கோவையை சேர்ந்த பேருந்து நடத்துனரான இவர் கடந்த 25 வருடங்களில் ஒரு லட்சம் மரங்கள் நட்டு சாதனை தமிழராக வலம் வருகிறார். இவரின் சொந்த ஊர் மயிலாடுதுறை. கோவை அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார் . மரக் கன்றுகளை நடுவதொடு விட்டுவிடாமல் ஒரு ஆண்டுவரை மரங்களை பாதுகாத்து, பராமரிக்கும் விதத்தையும் சொல்லி கொடுக்கிறார். சுதேசியாக வாழும் இவர் வெளிநாட்டு மரக் கன்றுகளை தொடுவதில்லை என்பதில் வைராக்கியம் உள்ளவர். தனது வருமானத்தில் பெரும் பகுதியை இந்த பசுமை வேள்விக்கே செலவிடுகிறார். மரம் வெட்டும் கொடுமையை எதிர்த்து பல போராட்டங்கள் நடத்தியுள்ளார்.

    வார விடுமுறையான ஒவ்வொரு திங்கட்கிழமையும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் புகைப்படக்காட்சி(Slide Show) நடத்தி விழிப்புணர்வு புரட்சி செய்து வருகிறார். இதுவரை 3000 பள்ளிகளுக்கு மேல் விஞ்ஞான விளக்கப் படக் காட்சி நடத்தி இருக்கிறார். இவரின் இந்த சேவைக்காக, தமிழக அரசு, 2008ல் "சுற்றுச்சூழல் செயல் வீரர் விருது" , குடியரசு துணைத் தலைவரிடமிருந்து, 2010ல் "பசுமைப் போராளி விருது", "சிறந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் விருது' உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

    ஒவ்வொரு மாணவரும், தன் பிறந்த நாளன்று, ஒரு மரக்கன்றை நட்டு, பராமரித்து வளர்த்து வரும் வகையில், "உயிர் வாழ ஒரு மரம்'”என்ற திட்டத்தை உருவாக்கி, இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேலான பள்ளி, கல்லூரி மாணவர்களை சேர்ந்துள்ளார். இவரின் சேவையை கண்டு வெளிநாட்டவர் ஒருவர் இவருக்காக ஒரு இணணயதளம் இலவசமாக அமைத்து தந்திருக்கிறார்.( Thaagam)
     
    1 person likes this.
    Loading...

  2. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    தனி மரம் தோப்பாகாது, ஆனால், தனி மனிதன் தோப்பை உருவாக்க முடியும் னு சாதிச்சி காட்டும் யோகநாதன் சார், உங்களுக்கு ஒரு :bowdown:
    இந்த மாதிரி முன்னோடிகள் தான் நாட்டுக்கு தேவை.:yes:

    Sriniketan
     
  3. vidhu63

    vidhu63 Gold IL'ite

    Messages:
    719
    Likes Received:
    155
    Trophy Points:
    108
    Gender:
    Female
    Hats of to you Mr. Yoganadhan. Pesara ellaralum seiya mudiyadhu but pesama le ye seidhu katti irukeenga. Mikka magizhchi. Siram thaazhthi vanangugiren.
     

Share This Page