1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மனைவி - வீட்டில சும்மாதான் இருக்கிறேன்

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Jul 29, 2021.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,748
    Likes Received:
    12,565
    Trophy Points:
    615
    Gender:
    Male
    மனைவி
    அழகான மனைவிக்கு அன்பான கணவன் எழுதியது,

    நான் காலையில் படுக்கையிலிருந்து எழும்புகிறேன்
    *நீ* நெருப்புப் புகையோடு
    போராடிக் கொண்டிருக்கிறாய்.
    *நான்* பல் துலக்குகிறேன்
    *நீ* பாத்திரங்களை
    புதுப்பிக்கிறாய்.
    *நான்* செய்தித்தாளில்
    செய்திகளை சேகரிக்கிறேன்.
    *நீ* வீட்டில் குப்பைகளை
    பெருக்குகிறாய்.
    *நான்* உடலை சுத்தம் செய்கிறேன்.
    *நீ* ஆடைகளின் அழுக்குகளை
    பிரித்துக் கொண்டிருக்கிறாய்.
    .
    *நான்* பசியாற வயிற்றை நிரப்புகிறேன்.
    *நீ* பாத்திரங்களை
    நீரால் நிரப்புகிறாய்.
    *நான்* அலுவலகம் கிளம்புகிறேன்.
    *நீ* பிள்ளைகளை
    சீருடையில் அனுப்பி விட்டு என்முறைக்காக காத்திருக்கிறாய்.
    *நான்* இரவு வீடு திரும்புகிறேன்.
    *நீ* இன்னும் திரும்பவில்லை
    சமையலறையிலிருந்து.
    *நான்* தூங்கச்செல்கிறேன்.
    *நீ* கதவின் தாழ்ப்பாள்களையும்
    எரியும் மின்விளக்குகளையும்
    பிள்ளைகளின் போர்வைகளையும்
    சரிபார்த்து விட்டே
    படுக்கையில் விழுகிறாய்.
    ஒவ்வொரு ஞாயிறுகளும்
    ஒவ்வொரு பண்டிகைகளும்
    எங்களுக்கு ஓய்வு நாட்கள்
    *உனக்கு?*

    உறவு வீட்டு விழாக்களில்
    எங்களிடத்தில் *நீ!*
    கல்விக்கூடங்களின்
    கேள்விகளுக்கான பதில் *நீ!* சோக நிகழ்வுகளிலும்
    கண்ணீர் சிந்திய படி *நீ!*
    எங்களின் பிரதிநிதியாக
    கோவில்களிலும் *நீ!*
    என் வாழ்க்கை
    தோழியே!
    இப்போதெல்லாம்
    " நான் வேலைச்செய்கிறேன்''
    என்று சொல்லவே
    தயக்கமாக இருக்கிறது

    கழிந்தப் பொழுதின்
    உன் ஒற்றைப் பதிலால்..

    புள்ளிவிபரம் சேகரிக்க வந்த அரசு ஊழியர் உன்னிடம் கேட்டார்
    " வேலைப் பார்க்கிறீர்களாமா?"
    உன் பதில்..
    "இல்லங்க..நான் வீட்டில சும்மாதான் இருக்கிறேன்...".

    மனைவியை நேசிப்போம், ஒரு விதத்தில் அவளும் நம் தாய் தான்..
     
    vidhyalakshmid likes this.
    Loading...

Share This Page