1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மனைவியின் கூற்று

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Feb 2, 2011.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    துணியினை விரித்து ஓடையில் மீன்
    பிடிப்பதைப் பற்றி நான் கேட்டதுண்டு.
    அவன் விழி விரிய அதிலே நான்,
    விழுந்ததை நீவிர் அறிந்ததுண்டோ?

    ஒரு முறை குழந்தையெனத் தோன்றும்,
    பின்னொரு முறை தந்தையாய்க் காட்டும்.
    கொஞ்சுகையில் கணவனென மாறும்,
    அம்முகமே ஒரு விந்தையெனத் தெரியும்.

    காதல் எனும் அம்மெல்லிய உணர்வு,
    என்னவென்று அறியாமல் இருந்தேன்.
    அவனிடம் நான் கொண்டுள்ள உறவு
    அது தானோ என இன்னும் அறியேன்.

    பிறருக்காக உழைப்பதில் சுகம் உண்டு,
    எனத் தெரிந்து கொண்டது அவனாலே!
    அவனுக்கென வாழ்வதில் சுகம் கண்டு,
    மகிழத் தான் முடிகிறது என்னாலே!

    என் முகம் கோண ஒரு வார்த்தை சொல்லாது,
    என் செயல்களில் ஒரு போதும் குறுக்கிடாது,
    எனை விட என்னை அதிகம் நம்புகிறவனை,
    என்றும் பிரிந்திடாது இருந்திடவே என்னை,

    படைத்தவனை நான் தினமும் வேண்டி,
    பணிகளைத் தொடங்குவேன் விரைவாய்.
    அவனை எனக்கு ஈந்ததற்காய் நன்றி
    கூறி நிறைந்திடுமே என் விழிகள் நிறைவாய்!
    -ஸ்ரீ
     
    Last edited: Feb 3, 2011
    Loading...

  2. hema76

    hema76 Silver IL'ite

    Messages:
    1,700
    Likes Received:
    46
    Trophy Points:
    90
    Gender:
    Female
    ரொம்பவும் அழகான கவிதை , எதார்த்தமா சொல்லிருகிங்க , ரொம்ப பிடிச்சிருக்கு
     
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி ஹேமா. -ஸ்ரீ
     

Share This Page