1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மனிதகுல மீட்சியின் விலை - Hiv

Discussion in 'Posts in Regional Languages' started by Tamildownunder, Nov 3, 2007.

  1. Tamildownunder

    Tamildownunder Bronze IL'ite

    Messages:
    921
    Likes Received:
    30
    Trophy Points:
    48
    Gender:
    Male
    <TABLE class=contentpaneopen><TBODY><TR><TD class=contentheading width="100%">மனிதகுல மீட்சியின் விலை - HIV </TD><TD class=buttonheading align=right width="100%"> </TD><TD class=buttonheading align=right width="100%"> </TD></TR></TBODY></TABLE><TABLE class=contentpaneopen><TBODY><TR><TD class=createdate vAlign=top colSpan=2></TD></TR><TR><TD vAlign=top colSpan=2>காலம் செல்லச்செல்ல புதிய கண்டுபிடிப்புகள் பெருகி கொண்டிருக்கின்றன. புதிய தொழில்நுட்பங்கள் அதிகமாக பயன்பாட்டிலுள்ளன. அதே வேகத்தில் புதிய நோய்களும் தோன்றிய வண்ணம்தான் உள்ளன. காய்ச்சல் என்று மட்டுமே தெரிந்திருந்த நமக்கு இன்று சாதாரண காய்ச்சல், எலி காய்ச்சல், சளி காய்ச்சல், மூளை காய்ச்சல், மலேரியா காய்ச்சல், வைரஸ் என்ற நச்சுயிரி காய்ச்சல், டெங்கு காய்ச்சல், சிக்குன் குனியா என பல வகை காய்ச்சல்கள் தெரியும்.

    பனாமா கால்வாய் வெட்டப்பட்டபோது அங்குள்ள கொசுக்களால் ஒருவகை காய்ச்சல் ஏற்பட்டு பலர் இறந்த பின்னர் தான் மலேரியா கண்டுபிடிக்கப்பட்டது. பல ஆண்டுகள் குணப்படுத்த முடியாத நோயாகவே மலேரியா இருந்து வந்தது. மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தான் மனிதகுலம் நிம்மதி பெருமூச்சு விட்டது.

    இன்று எயிட்ஸ் என்ற தேய்வு நோய் மனிதகுலத்திற்கே சவாலாக அமைந்துள்ளது. அதற்கு காரணமாகும் HIV நச்சுயிரின் வரவு பல மில்லியன் காலத்திற்கு முற்பட்ட வரலாறு உடையது என்ற ஆய்வை இங்கு அறிய இருக்கிறோம்.

    கோமாரி நோய் வீட்டுவளர்ப்பு கால்நடைகளை அதிகமாக பாதிக்கின்றது. இந்நோய் மனிதர்களை பாதிப்பது மிகமிக அரிதான ஒன்றே. வைரஸ் என்ற நச்சுயிரி ஒர் இனத்தின் மேல் நோய் ஏற்படுத்த காரணமாக இருக்குமே ஒழிய இன்னொரு இனத்திற்கு அதே நோய் ஏற்படுத்தும் காரணியாக இருக்காது என்பது அரைகுறையாக புரிந்து கொள்ளப்பட்ட உண்மையாகும்.

    மனிதரில் இல்லாத ஆனால் சிம்பன்ஸி மற்றும் கொரில்லா குரங்குகளின் மரபணுக்களில் எஞ்சியுள்ள நச்சுயிரியை அறிவியலாளர்கள் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர். பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இவ்வகை நச்சுயிரிகளிடமிருந்து மனிதர்கள் எதிர்ப்பு சக்தியை பெற்றிருக்கின்றனர். இதற்கு மாறாக, மனித உடலில் உயிரூட்டத்துடன் இல்லாத அவ்வகை நச்சுயிரிக்காக ஏற்பட்ட எதிர்ப்புசக்தியின் பரிணாம வளர்ச்சியே இன்றைய HIV தோதாக மாறியிருக்கலாம்.

    குரங்குகளும் மனிதர்களும் பல்வேறு நச்சுயிரிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவைகளில் சில ரெட்ரோ வைரஸ் எனப்படும் நச்சுயிரிகளாக மனித உயிரணுக்களில் கலக்கின்றன. இத்தகைய ரெட்ரோ நச்சுயிரியின் பரவல் அது பாதித்திருக்கும் குரோமசோம்களில் விட்டுச் செல்லும் எச்சங்கள் முன்னோர்களிடமிருந்து பரவும் ரெட்ரோ நச்சுயிரி என அழைக்கப்படுகிறது. இத்தகைய முன்னோர்களிடம் இருந்து பரவுதலுக்கு நமது மரபணுக்கள் சாட்சிகளாகும்.

    நமது செந்தக்காரர்களாகிய குரங்குகளின் குரோமசோம்களைப் போலவே நமது முன்னோர்களிடமிருந்து வந்த நச்சுயிரிகளின் எச்சங்களாக PtERV என்ற ரெட்ரோ நச்சுயிரி நமது மரபணுத் தொகுதியில் உள்ளது. மூன்று நான்கு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே சிம்பேன்சி மற்றும் கொரில்லா வகை குரங்கினங்களில் இவை எளிதாக பரவியுள்ளன என இவ்வகை நச்சுயியை பற்றிய ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. இருப்பினும், நமது முன்னோர்கள் இக்குரங்குகளுடன் ஆப்பிரிக்காவில் ஒரே வாழ்விடத்தை கொண்டிருந்தவர்கள் என்றாலும், மனித மரபணுத் தொகுதியில் இந்த PtERV காணப்படவில்லை.

    [​IMG]
    வாஷிங்டன் சியேற்றிலுள்ள ஃபிரெடு ஹச்சின்சன் புற்றுறோய் ஆய்வு மையத்தில் நச்சுயிரியல் வல்லுனர் மைக்கிள் எமர்மேன் என்பவரின் தலைமையிலான குழு ஒன்று நடத்திய ஆய்வு அறிவியல் என்ற இதழில் வெளியானது. அவ்வாய்வில் மனித குரங்குகளை பாதித்த நச்சுயிரிகளிடமிருந்து நமது முன்னோர் எவ்வாறு தப்பித்தனர் என அக்குழு கண்டறிய முயன்றது.

    சிம்பன்சியின் மரபணுக்களிலிருந்து பழைய நச்சுயிரியை உயிர்பிக்க செய்வதே அவ்வாய்வுக் குழுவின் நோக்கம். ஆனால் முன்னோர்களிடமிருந்து பெறப்பட்ட ரெட்ரோ நச்சுயிரிகளின் மாதிரி ஒவ்வொன்றும் கொஞ்சம் வேறுபட்டே இருந்தன. சில வார்த்தைகள் காலத்தால் மாற்றம் காண்பதைப் போல மில்லியன்கள் கணக்கான ஆண்டு காலத்தில் முன்னோர்களிடமிருந்து பெறப்பட்ட நச்சுயிரிகள் அனைத்தும் அவற்றின் பொதுத்தன்மையிலிருந்து வேறுபட்டன.

    இந்நச்சுயிரியின் மூலத்தை, அதன் தொடர்ச்சியை உயிர்பிக்க மொழியியலாளர்கள் பயன்படுத்தும் பிரபலமான நுட்பத்தை இவ்வாய்வு நடத்திய அறிவியலாளர்கள் பயன்படுத்தினர். பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் பால் வேவ்வேறு வார்த்தைகளில் அழைக்கப்படுகிறது. இவ்வார்த்தைகளை ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள் பூர்வீக மொழியில் எந்த சொல் மிக அருகாமையில் வருகிறதோ அதைத்தான் மூலச்சொல்லாக கொள்வார்கள்.

    பால் என்பது பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் முறையே லேயிட் (lait) லாத்தே (latte) மற்றும் லாக்கே (lache) என்று அழைக்கப்படுகிறது. மொழியியல் ஆராய்சியாளர்கள் இந்த மூன்றுக்கும் மூலச்சொல்லை கண்டுபிடிக்கும் போது லத்தீன் வார்த்தையான லாக்தே (lacte) என்ற சொல் மிக அருகாமையில் உள்ளதை கண்டறிந்து அதனை மூலச்சொல்லாக எடுத்துக்கொள்கின்றனர்.

    அதே முறையை பின்பற்றி மூன்று மில்லியன் ஆண்டுகளான சிம்பன்ஸியின் மரபணுக்களிடமிருந்து நமது முன்னோர் உயிரணுக்களின் அடுக்கை நச்சுயிரி வல்லுனர்களால் கட்டி எழுப்ப முடிந்தது. பின்னர் அதில் எவ்வுயிரி இத்தகைய நோய் பரவுதலுக்கு காரணமாக அமைகிறது என அவர்கள் ஆய்வு செய்தனர்.

    PtERV நச்சுயிரி TRIM5alpha என்ற புரதத்தால் அழிக்கப்படாமல் இருந்தால், விலங்குகளிடம் எளிதாக பரவியது. இப்புரதசத்து செல் என்ற உடல் நுண்ணறையின் வாயிற்காவலர் போல் செயல்படுகிறது. குரங்குகள் அல்லது மனிதர்களிடையே இப்புரதத்தை மீறி அந்த நச்சுயிரி நுழைய முடிகிறதா? என்பதை அறிவியலாளர்கள் ஆய்வு செய்தனர்.

    அவர்கள் எதிர்பார்த்தது போலவே சிம்பன்சி குரங்குகளிடமிருந்து பெறப்பட்ட நச்சுயிரி, கொரில்லா குரங்கின் உடலிலான TRIM5alpha புரதத்தை மீறி பாதிப்பு ஏற்படுத்தியது. மனிதரிடம் இதை ஆய்வு செய்தபோது, நச்சுயிரியின் பெருக்கம் நூறு மடங்கு குறைந்ததை அறிவியலாளர்கள் கண்டனர். மனிதரின் TRIM5alpha என்ற புரதசத்து முற்காலத்திய நச்சுயிரிகளிடமிருந்து காக்க உதவியது என்றால், அவ்வாறே பல மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய நமது முன்னோர்களும் இந்நச்சுயிரியிடமிருந்து காக்கப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு ஆய்வுக்குழு வந்தது.

    HIV நச்சுயிரி PtERV ரெட்ரோ நச்சுயிரியின் குடும்பத்தை சார்ந்ததே. எனவே TRIM5alpha புரதசத்து எயிட்ஸ் என்ற தேய்வு நோயின் நச்சுயிரியை தடுக்கிறதா? என கண்டுபிடிக்க அறிவியலாளர்கள் ஆர்வம் காட்டினர். அப்போது தான் தற்கால மனித TRIM5alpha, PtERV நச்சுயிரியை தடுப்பதில் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் HIV நச்சுயிரியை பரவாமல் தடுக்க இப்புரதசத்தால் முடியவில்லை என்று கண்டறிந்தனர். இதற்கு நேர்மாறாக, குரங்குகளின் TRIM5alpha புரதசத்து HIV பரவலை தடுத்து PtERV நச்சுயிரியை அனுமதித்தது. இத்தகைய செயல் ஒரு வாயில் மூடப்படும்போது இன்னொரு வாயில் திறக்கப்படும் என்று சொல்வது போல் இருக்கிறது.

    [​IMG]
    மூன்று நான்கு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் PtERV நச்சுயிரி நமது முன்னோர்கள் உள்பட ஆப்பிரிக்க குரங்குகளிடம் தொற்றியது. நமது முன்னோரில் யாரோ ஒருவருக்கு ஏற்பட்ட தற்செயலான மரபணுமாற்றம் தான் கண்டம் முழுவதும் பரவிய இந்நச்சுயிரியின் கொடூரமான பாதிப்பிலிருந்து நமது முன்னோர் எதிர்ப்பு சக்தி பெற உதவியது என மைக்கேல் எமர்மேன் குழுவினர் எண்ணுகின்றனர். இம்மரபணுமாற்றம் மறைவான ஒரு விலையோடு வந்தது போல. அத்தகைய மாற்றம் நமது முன்னோர்களை அழிவிலிருந்து பாதுகாத்து காப்பாற்றி இருந்தாலும் இருபதாம் நூற்றாண்டில் HIV நச்சுயிரின் பாதிப்பு ஏற்பட அதுவே காரணமாக அமைந்தது எனலாம். முந்தைய நச்சுயிரியின் பாதிப்பிலிருந்து காப்பாற்றிய அந்த மரபணு புதிய நச்சுயிரிக்கு எதிரான பாதுகாப்பை வழங்கவில்லை. எயிட்ஸ் என்ற தேய்வு நோயை முற்காலத்திய வாழ்வு மீட்சி கடனுக்கு மனித குலம் செலுத்தும் விலையாகவே கொள்ள வேண்டியுள்ளது. பரிணாம வளர்ச்சியிலிருந்து மனிதகுலம் தப்பிக்க முடியாது எனவும் தெரிகிறது.

    அழிவு இயற்கையின் ஒரு பகுதியே. அழிவும், புது ஆக்கமும் பரிணாம வளர்ச்சியின் முக்கிய கூறுகள் என்பது வாழ்வில் கண்கூடு.

    ஃபீனிக்ஸ் பறவை எரிந்து சாம்பலானாலும் மீண்டும் உயிர் பெற்றெழும்.

    மடியும் விதை புதிய மரமாக முளைக்கும்.

    மறையும் ஆதவன் விடியலின் தொடக்கம்.

    அழிதலில் ஏற்படும் புது வாழ்வை காட்டும் சாட்சிகள் இவைகள்.


    CRI tamil


    </TD></TR></TBODY></TABLE>
     
  2. honeybee

    honeybee Gold IL'ite

    Messages:
    583
    Likes Received:
    187
    Trophy Points:
    108
    Gender:
    Female
    TDU sir
    Enjoyed reading your informative,facts packed blog.
    Kudos to you for making a wonderful start in pure tamil .:thumbsup
    "Chentamizhil ungal ezhuthu kandu mikka magizhchi".( I don't have tamil font installed on my system! :wave)

    Regards
    Honeybee
     
  3. sunkan

    sunkan Gold IL'ite

    Messages:
    4,124
    Likes Received:
    236
    Trophy Points:
    153
    Gender:
    Female
    wonderful raman sir,
    but many here dont read tamil so i think u need to translate if a requisiton comes, these are awareness diseases which has to be available universal...regards sunkan
     
  4. Tamildownunder

    Tamildownunder Bronze IL'ite

    Messages:
    921
    Likes Received:
    30
    Trophy Points:
    48
    Gender:
    Male
    Thanks, Honeybee and Sunkan for visiting the blog and posting your comments.

    Sunkan, I agree with you and will post an english translation soon.

    Regards,

    TDU
     

Share This Page