1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மனமும் உறவில் லயித்ததோ

Discussion in 'Regional Poetry' started by crvenkatesh1963, Jul 18, 2020.

  1. crvenkatesh1963

    crvenkatesh1963 Silver IL'ite

    Messages:
    65
    Likes Received:
    126
    Trophy Points:
    83
    Gender:
    Male
    (அழகே அழகு தேவதை மெட்டு)

    பல்லவி

    மனமும் உறவில் லயித்ததோ
    தினமும் அவள்பேர் நாவும் சுவைத்ததோ
    மனமும் உறவில் லயித்ததோ

    சரணம் 1

    நெஞ்சம் அவளை எண்ணும் போது
    நின்று துடித்தது
    இமையின் பின்னே இரண்டு விழியும்
    நீரில் நனைந்தது
    உதயமும் எனக்கவள்
    மதியமும் எனக்கவள்
    ஒரு நாளின் மூன்று பொழு தவளே
    மனமும் உறவில் லயித்ததோ

    சரணம் 2

    பூவின் மீது அமரும் வண்டு
    போல ஆகினேன்
    விலகி விலகி சென்று மீண்டும்
    அவளில் மேவினேன்
    சந்தமும் எனக்கவள்
    சிரிப்புமே எனக்கவள்
    என் சிந்தை எல்லாம் இன்றவளே
    மனமும் உறவில் லயித்ததோ

    சரணம் 3

    இரவு நேரம் இனிமை என்று
    இதயம் சொன்னது
    அகல நீளம் எதுவும் இன்றி
    ஆசை விரிந்தது
    மலர்வதும் அவளிலே
    மணப்பதும் அவளிலே
    என் சிந்தை எல்லாம் இன்றவளே
    மனமும் உறவில் லயித்ததோ
    தினமும் அவள்பேர் நாவும் சுவைத்ததோ
    மனமும் உறவில் ...

    வீயார்
     
    Thyagarajan likes this.
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    I enjoyed reading this lyrics and I would suggest you to send this minus the mettu song in online to Kumudam சிநேகிதி it might get published.

    நன்றி.
     

Share This Page