மனப் பொருத்தமே போதும்

Discussion in 'Astrology Numerology & More!' started by Thyagarajan, Jun 17, 2022.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,726
    Likes Received:
    12,547
    Trophy Points:
    615
    Gender:
    Male
    மனப் பொருத்தமே போதும்

    எல்லோருக்கும் நமஸ்காரம்.

    சென்ற ஆண்டு, மந்தைவெளியில் வரன்கள் அறிமுக நிகழ்ச்சியில் ஆயிரம் பிள்ளைகளுக்கு நூறு பெண்களே கல்யாணத்துக்கு இருப்பதையும் அதனால் பல பிள்ளைகளுக்கு கல்யாணமே ஆகாமல் இருப்பதையும் அதற்கு மேலே அரைகுறை ஜோசியர்கள் படுத்தும் பாட்டினால் இன்னும் பல பேருக்கு கல்யாணம் ஆகாமல் இருப்பதையும் ஒரு பதிவாக அனுப்பியிருந்தேன்.அதன் பின் பலர் என்னுடன் தொடர்பு கொண்டு தத்தம் பக்கத்துக்கு நியாயங்களை எடுத்துரைத்தார்கள். அதற்கு பதிலும் எழுதியிருந்தேன்.​
    சமீபத்தில் இரண்டொரு நாட்களுக்கு முன் நான் சிருங்கேரி சென்றிருந்தேன். அங்கு மடத்தில் இருக்கும் சில
    பெரியவர்கள் மூலமாக வயதாகியும் கல்யாணம் ஆகாமல் இருக்கும் பிள்ளைகள் பெண்கள் பற்றிய பிரச்சினையை ஸ்ரீ ஸ்ரீ மகா சந்நிதானத்தின் பார்வைக்கு எடுத்துச்செல்ல முயற்சி செய்தேன். ஆனால் அவர்கள் ஆச்சார்யர்கள் வெகு காலத்துக்கு முன்னமே இந்த பிரச்சினைக்கு தக்க பதில் கொடுத்துள்ளார்கள் என்று சொன்னார்கள். இதை ஆச்சார்யர்கள் சொன்னதாக நான் வாட்சப்பில் எழுதலாமா என்று கேட்டதற்கு, "தாராளமாக "என்று சொல்லிவிட்டார்கள். ஆச்சார்யர்கள் சொன்னது என்னவென்றால் கல்யாணத்துக்கு பார்க்கும் போது மூன்றே மூன்று விஷயங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தால்போதும் .அவை மிக மிக எளிமையானவை .
    1 .மாப்பிள்ளை பெண்ணை விட வயதில் பெரியவனாக இருக்க வேண்டும்.
    2 .மாப்பிள்ளையும் பெண்ணும் ஒரே கோத்திரமாக இருக்கக்கூடாது.
    3 .குடும்பங்களுக்கிடையே மனப்பொருத்தம் இருந்தால் போதும்.
    இதன் உள்ளர்த்தம் என்னவென்றால் கல்யாணத்துக்கு இந்த ஜாதக பொருத்தம் எல்லாம் பார்க்க தேவையே இல்லை என்பதுதான். இந்தக் கருத்தைத்தான் காஞ்சி மகா பெரியவாளும் சொல்லியிருக்கிறார். சேஷாத்திரி நாத ஸ்வாமிகளும் இதே கருத்தைத்தான் சொல்கிறார். கல்யாணத்தில் சொல்லப்படுகிற மந்திரங்கள் எல்லாம் எல்லா தோஷங்களையும் போக்குவதற்காகவே இருக்கின்றன என்று அவர் சொல்கிறார். ஆகையால் கல்யாணத்தை சாஸ்திர முறைப்படி செய்தாலே எல்லா தோஷங்களும் நீங்கிவிடும் என்று சொல்கிறார்கள்.
    எல்லாரது வீட்டிலும் சில பெரியவர்கள் இருப்பார்கள். அவர்களில் சிலர் இந்த லிப்கோவின்
    "குடும்ப ஜோதிடம் "புத்தகத்தை படித்து விட்டு தங்களை பெரிய ஜோசியர் என்று நினைத்துக்கொண்டு அவ்வப்போது ஏதாவது அரை குறை அட்வைஸுகளை அள்ளி விடுவார்கள். அவர்களிடம் பொருத்தம் பார்க்க ஜாதகங்களைக் கொடுத்தால் குடும்பங்களுக்குள் நல்ல
    மனப் பொருத்தம் இருந்தாலும், "பிள்ளைக்கு சனி வக்கிரம், பெண்ணுக்கு செவ்வாய் நீச்சம் சுக்ரன் சரி இல்லை "என்று ஏதாவது சொல்லி ஒரு பீதியை கிளப்பி அந்த கல்யாணம் நடக்காமல் செய்து விடுவார்கள். "குடும்பத்தில் உள்ளவர்களும் அவர் மேல் உள்ள மரியாதையால் அவர் சொல்வதை தட்டவும் முடியாமல் மேலே பேச்சை தொடரவும் முடியாமல் இருதலை கொள்ளி எறும்பாக தவிப்பார்கள். கல்யாணத்தை
    தள்ளிப் போடுவார்கள். தங்கள் பிள்ளைகளை மீளா துயரத்தில் ஆழ்த்துவார்கள்.
    பிள்ளையைப் பெற்றவர்களுக்கும் பெண்ணைப் பெற்றவர்களுக்கும் எனது வேண்டுகோள் ஒன்று உண்டு. அது என்னவென்றால் , உங்கள் குடும்பங்களுக்குள் நல்ல புரிதல் இருந்தால் இந்த மாமா தாத்தா , அத்திம்பேர் , ஒண்ணு விட்ட சித்தப்பா , ஊர்ல இருக்கற அத்தான் இவர்கள் சொல்வதை எல்லாம் ஒதுக்கி விட்டு, உங்கள் குலதெய்வம், இஷ்ட தெய்வம், குரு இவர்கள் மேல் பாரத்தைப் போட்டு கல்யாணத்தை நடத்துங்கள். உங்கள் குழந்தைகள் சந்தோஷமாக இருப்பார்கள். உங்கள் மனதில் இருக்கும் குழந்தைகளின் எதிர் காலம் பற்றிய பயத்தினை ஆச்சார்யர்கள் திருவடியில் சமர்ப்பியுங்கள். அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்கள்.
    இந்த மாமா தாத்தா, அத்திம்பேர் சித்தப்பா வகையாறாக்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். எல்லாக் குறைபாடுகளுக்கும் பரிகாரங்கள் உண்டு அது தெரிந்தால் ஜோசியம் சொல்லுங்கள். அது தெரியவில்லை என்றால் வாயை மூடிக்கொண்டு சும்மா இருங்கள். மஹாபாரதத்தில் சொல்லிய படி ஒரு அஸ்திரத்தை திரும்ப அழைக்க தெரிந்தவனுக்குத்தான் அதை ஏவும் அதிகாரம் உண்டு. அது போல ஒரு குறையை நிவர்த்தி செய்யும் ஞானம் இருப்பவர்கள்தான் ஜோசியம் சொல்லலாம். தாடி வைத்தவர்கள் எல்லாம் தாகூரா என்று கேட்பார்கள் அல்லவா. அது போல குடும்ப ஜோதிடம் படித்தவர்கள் எல்லாம் வராக மிஹிரரா என்று நான் கேட்கிறேன். அப்படி ஞானமில்லாதவர்கள் சொல்லும் ஜோசியத்தினால் பாதிக்க படுபவர்களின் சாபம் அந்த அரைகுறை ஜோசியர்களையே சேரும். அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
    எனது உறவினர் ஒருவர் ,அப்படி அரை குறை ஜோசியர்களினால் கல்யாணம் தள்ளிப் போன ஒரு பெண் தனது 48 வயதில் தனக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் என்று ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்று ஒரு செய்தி சொன்னார்கள். ஆனால் பகவான் கருணையால் அவர்களுக்கு அந்த வயதில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தனவாம். உடனே " இதுதான் அந்தப் பெண்ணின் விதி " என்று விதண்டாவாதம் செய்யக்கூடாது.
    அப்படியானால் ஜோசியமே வேண்டாமா என்றால் அதுதான் உண்மை. நமக்கு கடவுள் மேல் முழு நம்பிக்கை இருந்தால் ஜோதிடம் என்ற ஒன்று வேண்டவே வேண்டாம். ""கஷ்டமோ நஷ்டமோ எல்லாம் அவன் கொடுப்பது" என்னும் பக்குவம் நமக்குமிடையே இருந்தால் நமக்கு ஜோதிடமே வேண்டாம். ஆனால் நமக்கு எப்பபொழுதுமே கடவுள் மேல் சந்தேகம் இருப்பதால் ஜோதிடத்தை நாடுகிறோம். மேலும் ஜோதிடத்தை நம் கர்மாவைக் குறைக்க பயன் படுத்திக்கொள்ளலாம் .அதுதான் ஜோதிடத்தின் உண்மையாள நோக்கம்.
    "உனக்கு ஒரு பெண் குழந்தை இருந்தால் இப்படி செய்வாயா "என்று கேட்பவர்களுக்கு என் பதில் ... : நான் அப்படித்தான் செய்திருக்கிறேன். எனக்கு 25 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். அவளுக்கு அடுத்த வாரம் கல்யாணம். நாங்கள் இரண்டு குடும்பங்களும் கலந்து பேசி எங்கள் குழந்தைகளின் கல்யாணத்தை நிச்சயம் செய்தோம். எனக்கு ஜோசியத்தில் நம்பிக்கை உண்டு . ஆனால் பிள்ளையின்
    குடும்பம் மிக நல்ல குடும்பம் என்பதால் நாங்கள் ஜாதக பரிவர்த்தனையை செய்யவில்லை. இந்த கல்யாணத்துக்காக மஹா சந்நிதானத்தின் ஆசீர்வாதங்கள் வாங்கும் பொருட்டு நான் சிருங்கேரி சென்றிருந்தேன். அது போல
    உங்கள் எல்லாரது நல் வாழ்த்துக்களையும் எங்கள் குழந்தைகளுக்கு மானசீகமாக தெரிவியுங்கள் என்று உங்கள் எல்லோரையும் கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் எங்கள் நன்றியையும் தெரியப்படுத்திக்கொள்கிறேன்
    "இப்படி பொருத்தம் பார்க்காமல் கல்யாணம் செய்தால் பிரச்சினைகள் வராதா "என்றால் "பிரச்சினைகளே வர முடியாத ஏதாவது இந்த உலகில் உள்ளதா? மலை மேல் இருக்கும் ஒரு கல் கூட மழை பெய்தால் மண் அரித்து கீழே உருண்டு , தன் நிலையை இழந்துவிடும்.பிரச்சினைகள் வரும் என்று பயந்து கொண்டு இருப்பதை விட , பிரச்சினைகளை இறைமையின் துணையுடன் சமாளிப்போம் என்று துணிந்து நிற்போம் "என்பதுதான் என் பதில் .
    என்ன ! இப்போது திருப்தியா. 26 வயதுக்கு மேல் பெண்ணை வைத்திருப்பவர்களும் ௩௦ வயதுக்கு மேல் பிள்ளையை வைத்திருப்பவர்களும், ஜாதக பொருத்தத்தை தூக்கிப் போட்டுவிட்டு இரண்டு வீட்டார்களின் குணங்களை பார்த்து
    உங்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல வழி காட்டுங்கள். இதற்கு மேலும் பிடிவாதமாக "எங்கள் குழந்தைகள் கல்யாணமே ஆகாமல் நாசமாக போனாலும் எங்களுக்கு கவலை இல்லை .எங்களுக்கு ஜாதக பொருத்தம் மட்டும்தான் வேண்டும் "என்று வறட்டு பிடிவாதம் பிடிப்பவர்களே.... நீங்கள் அடுத்த ஜென்மத்தில் ஆப்பிரிக்க பாலைவனங்களில் இணை கிடைக்காமல் அலையும் ஏதோ ஒரு கொம்பு முளைத்த மிருகமாகத்தான் பிறப்பீர்கள்என்று நிச்சயமாக சொல்ல முடியும். அதுகள் மூச்சா கூட போகாதாம்.

    குழந்தைகளின் வயதுக்கேற்ற எண்ணங்களை முட்டாள்தனத்தால் அடக்கினால் அப்படித்தான் ஆகும். நாங்களும் உங்களை டிஸ்கவரி சானலில் பார்த்து "ஐயோ பாவம் " என்று பரிதாபப்படுவோம்.
    பெண் வீட்டர்களிடம் ஒரு வார்த்தை. ஏதோ
    "லக்கேஜ் "என்று ஒரு சங்கேத வார்த்தை கண்டுபிடித்திருக்கிறீர்களாமே ...... பிள்ளையின் தாய் தகப்பனைக் குறிப்பதற்கு ......என்ன இதெல்லாம் ? அப்படி அவர்களை நடுத்தெருவில் நிறுத்தினால் நீங்கள் அடுத்த பிறவியில் வீட்டை முதுகிலே சுமந்து செல்லும் நத்தையாகவோ அல்லது ஆமையாகவோ பிறப்பீர்கள்.
    சுவாமிகள் இவ்வளவு சொல்லியும் கேட்காதவர்கள் , "நான் மடத்துடன் ரொம்ப அட்டாச்சுடு .சுவாமிகளே என்னை பற்றி விசேஷமாக விசாரிப்பார்கள் "என்றெல்லாம் இனிமேல் பீற்றிக்கொள்ள வேண்டாம்.
    உங்கள் குழந்தைகளின் நன்மையை நினைத்து யோசியுங்கள். ஒரு சமுதாய மாற்றத்தை கொண்டு வரும் முயற்சியில் நீங்களும் ஒரு பங்கு கொள்ளுங்கள். அதில் பெருமை கொள்ளுங்கள்.
    அன்புடன்
    ராமகிருஷ்ணன்

    நன்றி வாட்ஸ் ஃப்
     
    Last edited: Jun 17, 2022
    Loading...

Share This Page