1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மனப்பெட்டகம்

Discussion in 'Regional Poetry' started by periamma, May 26, 2016.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பாசமும் நேசமும் நிறைந்த பெட்டகத்தை
    மனப் பெட்டகத்தை பூட்டி வைத்து பாதுகாத்தேன்
    துன்பங்களை என்னுள்ளே புதைத்து வைத்ததால்
    பெட்டகம் கனத்தது வலித்தது தாங்க முடியாமல் தவித்தேன்
    சாவியை தேடினேன் கிடைக்கவில்லை அலைந்து திரிந்தேன் அவலப் பட்டேன்
    துன்பத்தால் இறுகிய மனதை உடைத்தேன் தகர்த்தேன்
    வலி குறைந்தது வாழ ஆரம்பித்தேன்
     
    Harini73, kaniths, PavithraS and 4 others like this.
  2. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    சேர்ப்பது அனைத்துமே
    துன்பம் தான் தரும் போலிருக்கு
     
    Harini73, Poetlatha and periamma like this.
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    அதனால் தான் உங்கள் அனைவருக்கும் தந்து விட்டேன்
     
  4. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    தாயின் வலி நீங்க
    அவ் வலி தாங்க
    நான் தயார்
     
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி மகனே நன்றி .
     
    Poetlatha and GoogleGlass like this.
  6. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    சுமைதாங்கியாய் தாங்கும் தாயின் துன்பம் நீங்க வேண்டுகிறேன்!
     
    Poetlatha and GoogleGlass like this.
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    லக்ஷ்மி வேண்டுதலுக்கு மிக்க நன்றி .தனியே இருக்க முடியாமல் தான் மீண்டும் உங்கள் அனைவருடனும் சேர்ந்து இருக்க வந்து விட்டேன் .
     
  8. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மிக்க மகிழ்ச்சி பெரியம்மா! ஒரு தாயாய் உங்களிடம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது ...
     
    GoogleGlass and Poetlatha like this.
  9. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    சருகான போதும் உரமாக மாற விரும்புகின்ற தாங்கள் சோகப் படலாமா ?
    தரமான மனிதர்க்கு சுகமும், சோகமும் ஒருபொருட்டல்ல ! மனதைப் பண்படுத்தும் இறை விளையாட்டன்றோ ?


    வலியேற்கும் கற்கள் உளி தாக்கினாலும்
    சிலையாகிக் கருவறையில் நிலையாக நிற்கும் !
    வலியேற்கும் நெஞ்சமே இறைவாழும் ஆலயம் !
    நிலைக்காத வாழ்விது, சோகமேன் கொள்வது ?

    சிரிக்கவும் மறக்கவும் பழகி விட்டால்
    இருக்கும் வரை ஆனந்தமாய் வாழலாம் !
    மறப்பதோடு மன்னிக்கவும் தெரிந்து விட்டால்
    இறந்த பின்பு இறைவனோடு கலக்கலாம் !
     
    Harini73, Poetlatha, kaniths and 2 others like this.
  10. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    கருவரை கலங்காது சுமப்பவளுக்கு
    கண் கலங்கி நீர் சிந்துவது
    சுமயை இறக்கும் வரையே
    உச்சி முகர்ந்து தன் உதிரம்
    உணர்கையிலே ஓடிடுமே
    வலி அனைத்துமே
     

Share This Page