1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மனதாரப் பாராட்டுவோம்!

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Dec 27, 2010.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    வெகுநேரம் பாடுபட்டு, உளமார ஈடுபட்டு,
    அறுசுவை விருந்தினைத் தயாரித்து விட்டு,
    பாங்காக அடுக்கி, நேர்த்தியுடன் பரிமாறி,
    தவிப்புடன் காத்திருந்தவர் முகமே மாறி,

    சோர்வுறும், உண்டவர் ஒரு வார்த்தை கூட,
    சொல்லாது, உண்டு எழுந்து போகக் கண்டு.
    சமையலில் குறையேனும் சொன்னாலும் கூட,
    பரவாயில்லை என நினைப்பதும் உண்டு.

    சிறிதான செயல் ஒன்றை வெகுநேரம் செய்து,
    பெருஞ்செயலைத் தானே முடித்த திருப்தியில்,
    நம்மிடம் காண்பிக்கும் குழந்தையை உவந்து,
    ஒரு வார்த்தை பாராட்ட அது மகிழ்ச்சியில்,

    பூரித்து, மேலும் நன்கு வளருமில்லையா?
    நற்சொல்லோ, அன்போ, வியத்தகு செயலோ
    யார் சொலினும் செயினும் பாராட்டுவதில்லையா?
    ஒருவேளை அதற்கு மனம் நமக்கில்லையோ?

    எனும் எண்ணம் பிறருக்குத் தோன்றாதவாறு,
    நம்மை நாமே செம்மைபடுத்திக் கொண்டவராய்,
    பிறரையும் பாராட்டி, அவர் குன்றாதவாறு,
    நடந்தால் இருப்போம் யார்க்கும் உகந்தவராய்.
    -ஸ்ரீ
     
    Last edited: Dec 27, 2010
  2. kanthaeikon

    kanthaeikon Gold IL'ite

    Messages:
    988
    Likes Received:
    333
    Trophy Points:
    190
    Gender:
    Female
    மிக நன்றாக சொன்னீர் ஸ்ரீ
    ஒரு வார்த்தை பாராட்டுதலே எத்தணை உள்ளங்கள் depression என்கின்ற பிடியிலிருந்து தப்பிக்கலாம்
    எத்தனை கூட்டு குடும்பங்கள் சிதறாமல் இருக்கும்
    இந்த ஒரு வார்த்தை பாராட்டுதல் இல்லாமல் நாம் இழப்பது எத்தணை எத்தணை
    kantha
     
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி காந்தா. -ஸ்ரீ
     
  4. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    Well-written Sri, :clap
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    இது மறைமுகமாக தங்கள் கவிக்கு நாங்கள் பாராட்ட கோரும் யுக்தியா?? :rotfl:rotflஇருந்தும் அருமை தங்கள் கவியும் அதன் கருத்தும்!:thumbsup
     
  6. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் பாராட்டுக்கு நன்றி லதா. -ஸ்ரீ
     
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    நீங்கள் மனதாரப் பாராட்டியதற்கு நன்றி யாமினி :) . -ஸ்ரீ
     
  8. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    ஸ்ரீ சார்,,
    குற்றம் மட்டுமே சொல்லும் சில பேருக்கு நெற்றி அடி..இக்கவிதை...
    பாராட்டினால் அவங்க கிரீடம் கீழே விழுந்துடுமே,
     
  9. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    தலைக்கு பாரமாய் இருக்கும் கிரீடம் வேண்டாம்,
    அது நம்மை கனத்தாலே குன்றச் செய்யும்.
    நல்லது கண்டு பாராட்டத் தவற வேண்டாம்,
    அது செய்பவர்க்கு ஊக்கம் தந்து மகிழச் செய்யும்.

    உங்கள் பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி சாய்க்ருபா.
    ப்ளீஸ், என்னை ஸ்ரீ என்றே அழையுங்களேன். "சார்" வேண்டாமே? -ஸ்ரீ
     

Share This Page