1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மனங்கொத்தி

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jul 15, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    மரங்கொத்தியாய் என்
    மனம் கொத்திப் போனவள்
    இன்றும் வந்தாள் அவள் மிச்சம்
    வைத்த என் உயிரையும்
    கொத்திப் போக...

    என்னில் இல்லை மாற்றம்
    அவள் கண்ணிலும் இல்லை
    மாற்றம்.

    நான் மீண்டும் தயாராய்
    காயம் படவும், மறுத்து அவள்
    மனத்தைக் காயப்படுத்த மனம்
    இல்லாததால்...
     
  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    உண்மை அன்பு என்றுமே தான் விரும்பும் மனதை காயப்படுத்த விரும்புவதில்லை......... அருமை :thumbsup
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    மரங்கொத்தி, மனம் கொத்த,
    மனம் ஒப்ப வந்ததே உறவு,
    உயிர் கொத்த வந்ததாய் நினைத்து,
    காயம் பட காதல் மனம் தயாராவது,
    இதயத்தை அன்றோ பதம் பார்க்குது,

    வாய் விட்டுப் பேசினால் நோய் விட்டுச் செல்லுமே.....
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    மிச்சம் வைத்து
    மீந்ததை கொடுத்தது உன் தவறு
    இருப்பதை எடுக்க அவள் அறிந்த
    மார்க்கம் மனம் கொத்தல்.
    மொத்தமாய் துடைத்து கொடுத்திடு
    கொத்தல்
    பொத்தல் இல்லை ....கோர்த்தல் ஆகிவிடும்.
    முழுவதும் உனக்கே
    அவள் வெகுமதி சிறப்பே
    காயம் அது மாயம்
    காதல் அது மையம்
    மயம் எல்லாம் அன்பு மயம்!!!!!!!
     
  5. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    காயம் பட தயாராய் இருக்கும் காதல்!!!

    பிரமாதம் அக்கா...
     
  6. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    காதல் அது சுகத்தினில் மட்டும் மலரும் பூ அல்ல. சோகத்திலும் என்று அழகாய் சொல்லிவிட்டீர்கள்
     
  7. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Denial always pain.. mm vali niraintha alagana kavithai :thumbsup
     
  8. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    manangkothiyaai vanthaval kothi sendrathu avanin santhosathayum thaano....

    arumayaana varigal veni....:thumbsup
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    கவிதை படித்து ரசித்து கருத்து சொன்ன தோழிக்கு நன்றி
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ஜே வீ,

    கொத்தியதில் காயம் பட்ட மனதுக்கு தெரியும், அதன் வலி என்னவென்று. கத்தியின் பதம் பார்க்க, உயிரையா குத்திப் பார்க்க வேண்டும்??

    பேசிப் பேசிப், பேசிய காலங்கள் தான் வீணாய்ப் போனது.

    நன்றி உங்கள் பின்னூட்டத்துக்கு (கவிதையே கற்பனை, இதில் நான் எத்தனைதான் கற்பனை செய்து சொல்வதுWitsend)
     

Share This Page