1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்...

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, Dec 6, 2020.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    காலை இல் இருந்து நடந்தவைகள் ஒவ்வொன்றாக என் நினைவுக்கு கொண்டுவந்தேன். நான் இங்கு கொண்டுவரப்பட்டேன்...அதாவது அழைத்துவரப்பட்டேன்....எனக்கு கொடுக்கப்பட்ட உணவு கள் எல்லாமே என் கணவர் என் மகன் அனுப்பியது. அதாவது எனக்காக கல் ஊன்றி, நித்யவதி அவர்கள் செய்யும் பொழுது தான் எனக்கு அந்த ஸ்னாக்ஸ் மற்றும் தாகத்துக்கு குடிக்கவும் கிடைத்தது. இதோ என் முன் இருக்கும் உணவு என்னுடைய பத்துக்கு கொட்டியது. கடவுளே....என்ன மாதிரி உணர்வு என்னைத்தாக்கியது என்று என்னால் விளக்கமுடியவில்லை... இங்கு நான் வந்து 10 நாட்கள் ஆகிவிட்டன அவர்கள் கணக்கில்...ம்ம்... சுபம் ஆனதும் தான் அந்த மேடை இல் இருக்கும் பெரிய தேவதை என்னை அழைத்து, நான் போகவேண்டிய இடத்துக்கு அனுப்பும்.
    இங்கு என்னை சுற்றி நடப்பவைகளை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். இங்கு பல வண்ணங்களில் தேவதைகள் இருக்கிறார்கள் என்று சொன்னேன் அல்லவா, அவர்களில் சிவப்பு உடை அணிந்தவர்கள் தான் எங்களுக்கு உதவியவர்கள். மஞ்சள் உடை அணிந்தவர்கள் இங்குள்ளவர்களை வேறு இடங்களுக்கு கூட்டிச்செல்கிறார்கள்.

    பச்சை உடை அணிந்தவர்களும் நீல நிற உடை அணிந்தவர்களும் கூட இங்கு இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் பணி எனக்கு என்ன வென்று விளங்கவில்லை.இதுவரை நான் ஒரே ஒரு ஆண் தேவதையை மட்டுமே பார்த்தேன். அவரும் யார் , என்ன செய்கிறார் என்று எனக்குத்தெரியவில்லை. பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

    உலக நன்மையைக் கருதி நற்காரியங்கள் செய்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பர். ஸ்வர்ண தானம், கோ தானம் , குடை, மரவடி, தண்டம், வஸ்திரம், மோதிரம், உதககும்பம், தாமிர சொம்பு, அரிசி ஆகியவற்றைச் சத்பிராமணர்களுக்கு அளித்தல் வேண்டும். குடைதானம், ஜீவன் செல்லும் போது குளிர்ந்த நிழலில் அழைத்துச் செல்ல உதவும்.. மரவடி தானம், குதிரைபோல் ஏறிச் செல்ல உதவும்.

    இப்படியெல்லாம் நான் கருட புராணத்தில் படித்து இருக்கிறேன். அதெல்லாம் என் குடும்பத்தினர் செய்திருப்பார்கள் என்றே எண்ணுகிறேன். அதனால் தான் எனக்கு இங்கே எந்த தொந்தரவும் இல்லாமல் நன்றாக இருக்கிறேன் என்று எண்ணுகிறேன். ஆனால், என்னை அழைத்து வந்த முறை.... அதற்கும் கருட புராணத்துக்கும் மிகவும் வித்தியாசம் இருந்தது... இது எனக்கு மிகவும் குழப்பத்தைத் தந்தது... இது பற்றி யாரைக் கேப்பது....ம்ம்.... என்று யோசித்தவாறு இருந்தேன்....இதற்கெல்லாம் பதில் கிடைக்குமா தெரியவில்லை என்றாலும், நான் இங்கு தான் காத்திருக்கவேண்டும்....

    ஆனால் இதற்குள்ளாகவா பத்து நாட்கள் ஓடிவிட்டன என்றும் யோசனையாக இருந்தது. ஆனால் மற்றொன்றும் எனக்கு உரைத்தது. அதாவது, நாம் இருக்கும் உலகத்தின் ஒருவருட காலம் நம் மேல் லோகத்தில் இருப்பவர்களுக்கு ஒரு நாள். அதனால்தான் நாம் ஸ்ரார்த்தம் செய்யும்போது, அவர்களுக்குத் தினமும் உணவு கிடைக்கிறது. நான் இப்பொழுது இங்கு வந்து இருந்தாலும், ட்ரான்சிட் பிரியடில் இருக்கிறேன். அதாவது, நாம் ஏதாவது வெளிநாட்டுக்கு செல்லும்பொழுது, நடுவில் வேறு ஒரு நாட்டில் இறங்கி மற்றும் ஒரு விமானத்தை பிடிக்க காத்திருப்போம். அப்பொழுது நம் நிலை என்னவோ அது தான் என் நிலையும் இப்பொழுது.

    இன்னும் விளக்க வேண்டுமானால், இந்தியாவில் ஒருநேரம் இருக்கும் பொழுது ஸே, பத்துமணிக்கு இங்கிருந்து கிளம்பி 2 - 2 1/2 மணி நேரத்தில் பெஹரினை அடைகிறது. அங்கு ஒருமணி நேரம் காத்திருந்தால் தான் அடுத்த விமானம் சௌதிக்கு . அப்பொழுது அங்கு காத்திருக்கும் பொழுது எந்த மணியைப் பார்ப்பது....இந்தியாவின் கணக்கில்லா அல்லது சௌதி கணக்கில்லா.... அதேபோலத்தான் நீங்கள் பயணிக்கும் பொழுதும்.....சரிதானே.....ஆனால் ஒன்ஸ் நீங்க உங்களின் டெஸ்டினேஷனை போய்ச்சேரும் பொழுது, அப்போதிலிருந்து அந்த நேரம் தான் உங்கள் நேரம். உங்கள் போன் மற்றும் வாட்ச்சின் நேரத்தை நீங்கள் மாற்றி வைத்துக் கொள்ளவீர்கள் தானே . அது போலத்தான் என் நிலைமையும் இப்பொழுது.


    இது பற்றி நான் ஆழ்ந்த யோசனை இல் இருக்கும்பொழுதே, அந்த மேடை தேவதை என்னை கண்களாலே அழைத்தாள். நான் எழுந்து அவளருகே சென்றேன். அவளருகே நான் சென்றதும் ஒரு பச்சை தேவதை இடம் என்னை ஒப்படைத்தாள். அவள் என் கைகளைப் பிடித்து வேறு ஒரு கதவின் அருகில் அழைத்து சென்றாள். இப்பொழுதுதான் நான் ஒன்றை உணர்ந்தேன். அதாவது, எழுந்து கொள்வதிலோ நடப்பதிலோ எனக்கு எந்த வலியும் இல்லை....உடல் உபாதைகள் எதுவுமே இல்லை. என் உடல் மிகவும் லேசானதாக உணர்ந்தேன். கருட புராணத்தில் சொன்னது போல இது சூக்ஷும உடலா அல்லது என்னால் என்னை பார்க்க முடியுமா என்று ஒரு குறு குறுப்பு என் மனதிற்குள். போகும் வழி இல் எங்காவது கண்ணாடி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். நான் எங்கு சென்றாலும் அந்த மிக இனிமையான கானம் என்னைத்தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.

    என்னை கையைப் பிடித்து அழைத்துச் சென்ற அந்த தேவதை ஒரு ஆதுரத்துக்காகத்தான் என் கையைப் பிடித்துக் கொண்டு இருந்தாளே தவிர என்னைத்தாங்கிப் பிடிக்க வில்லை. நாங்கள் இருவரும் கதவைத் திறந்து கொண்டு நடந்தோம். அங்கு ஒரு மிகப்பெரிய பிரெஞ்சு விண்டோ இருந்தது.... அங்கிருந்து மந்திரங்கள் ஓதுவது போன்ற மெல்லிய சப்தம் கேட்டது....அதே நேரம் எங்கள் முதுகிற்கு பின் மற்றும் ஒரு கண்ணாடி கதவு தோன்றியது . அதாவது இரண்டு பெரிய பெரிய கண்ணாடிக்கு கதவுகளுக்கு நடுவே நாங்கள் நின்றுகொண்டு இருந்தோம்.

    அங்கே நான் கண்ட காட்சிகள்.....என் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டேன் நான்......என்னை அறியாமல் அந்த தேவதை இன் கையையும் அழுத்தமாக பற்றிக்கொண்டேன்......

    தொடரும்.....
     
    Thyagarajan likes this.
  2. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மந்திரங்கள் ஓதிக்கொண்டிருந்த பக்கம் நான் என் கணவரை பார்த்தேன்...ஓ... இன்று 12 வது நாள், அது தான் அவர்கள் குழி தர்ப்பணம் செய்து என்னையும் பித்ருக்களுடன் சேர்த்துவிடுவார்கள். அதனால் பின்னால் திரும்பாமலே என்னால் உணரமுடிந்தது, அங்கே என் பித்ருக்கள் இருப்பார்கள் என்று. ஆமாம், நான் திரும்பி அந்த கதவைப் பார்த்தேன். அங்கு, என் அம்மா அப்பா, மற்றும் இருவருக்கும் அப்பா அம்மா, மற்றும் அவர்களின் அப்பா அம்மா என மூன்று தலைமுறை மனிதர்கள் அதாவது என்னுடைய பித்ருக்கள் இருந்தார்கள்.

    ஆனால் இவர்கள் எல்லோருமே ஏதோ நிழல் போல இருந்தார்கள். என்னை வரவேற்க காத்திருந்தார்கள், அதாவது புதிய வரவை எதிர்நோக்கி இருந்தாற்போல எனக்குத் தோன்றியது. அந்த சடங்கு முடியும் வரை நாங்கள் பார்த்துக் கொண்டே நின்று கொண்டு இருந்தோம். 'எதிர் காலத்தில் நீங்கள் அங்கு தான் செல்லவேண்டி இருக்கும்', இப்பொழுது நாம் போகலாம் என்று மிக இனிமையான குரலில் அந்த பெண் தேவதை சொல்லியது. உடனே அந்த காட்சிகள் மறைந்தன.

    என்னை மீண்டும் அழைத்தது வந்து நான் முன்பு இருந்த ஹாலில் விடடாள் அந்த தேவதை. எனக்கு மீண்டும் உணவு வந்தது. இது கல்யாண சாப்பாடு போல நன்றாக இருந்தது. நானும் நன்கு சாப்பிட்டேன். நான் இதை முடித்ததும் எனக்கு அந்த மேடை தேவதைடமிருந்து அழைப்பு வரும் என்று தெரியும். நான் சாப்பிட்டு முடித்தது தான் தாமதம், சரியாக என்னை பார்த்து புன்னகைத்தாள் அவள்.

    ஹூம்....ஒரு பெருமூச்சுடன் எழுந்து போனேன். மேற்கொண்டு என்ன என்பது தெரியவில்லை... அது என்ன என்று பார்க்கவேண்டியது தான். எப்பொழுது நான் என் மூதாதையர்களை பார்க்கமுடியும்.... வெறும் பாட்டி தாத்தாவைத்தான் பார்க்க முடியுமா அல்லது மற்ற உறவுகளையும் பார்க்க முடியுமா... அவர்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வார்களா என்று கேட்க வேண்டும்... நிறைய அளவளாவ வேண்டும் என்றல்லாம் எனக்குள் தோன்றியது. ஆனால் இவையெல்லாம் சாத்தியமா என்று எனக்குத் தெரியாது. ஆவல் இருந்தது என்னவோ நிஜம்.

    இப்பொழுது என்னுடன் ஒரு நீல நிற பெண் தேவதை வந்தாள்....என்னை அழைத்துக்கொண்டு வெளியே வந்தாள். நான் இதுவரை அந்த மாளிகை இல் இருந்து யாரும் வெளியே போனதைப் பார்க்காததால் அவளின் இந்த செய்கை எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. என் ஆச்சர்யத்தை அவள் கவனித்தாள் என்றாலும் ஒன்றும் பேசவில்லை. இருவரும் வேறு ஒரு மாளிகைக்கு சென்றோம். அது நான் முன்பு பார்த்தது போல பல மடங்கு பெரியதாக இருந்தது. உள்ளே வரும்பொழுதே அழகிய நீரூற்றுகள், நிழல் தரும் மரங்கள், புதுவிதமான பூக்கள் காய் கனிகள் என எங்கும் சுபிக்ஷமாக இருந்தது. அந்த மாளிகை இன் உள்ளே நுழைந்த அந்த தேவதை, அங்கு இருந்த மற்றோரு தேவதை இடம் என்னை ஒப்புவித்துவிட்டு மறைந்து விட்டாள்.

    தொடரும்.....
     
    Thyagarajan likes this.
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    என்னை எதிர் கொண்டு அழைத்த அந்த பெண் வினோதமான ஆடை அலங்காரத்தில் இருந்தாள். ‘இன்னும் கொஞ்ச காலத்திற்கு நீங்கள் இங்கு தான் இருக்கப் போகிறீர்கள். அதுவரை உங்கள் தேவைகளை கவனித்துக் கொள்ள என்னை நியமித்து இருக்கிறார்கள்' என்று புன்னகையுடன் சொன்னாள். ‘இங்கு உங்களுக்கு எது வேண்டுமானாலும் என்னிடம் கேட்கலாம். முதலில் நாம் எந்த இடத்திற்கு போகவேண்டும் என்று பார்க்கலாம் வாருங்கள் என்று சொல்லி என்னை அழைத்து சென்றாள்.’ பிறகு இங்கு என்னென்ன உண்டு என்று நான் உங்களுக்கு சுற்றிக் காட்டுகிறேன்’ என்று ம் சொல்லி அழைத்து சென்றாள்.

    அந்த புதிய மாளிகை இல் இருந்த ஒரு அறைக்கு நாங்கள் சென்றோம். அங்கு நம் கம்ப்யூட்டர் போல இருந்த மிஷினில் ஏதோ தட்டினாள். விவரங்களை தன் கை இல் இருந்த ஐ பேட் போலிருந்த எதிலோ குறித்துக் கொண்டாள். அதிலிருந்து ஏதோ குறிப்பு எடுத்துக் கொண்டாள் அவள் என நினைக்கிறேன் . நடு நடுவே அவள் தன்னுடைய மணிக்கட்டில் அணிந்து கொண்டிருந்த வாட்ச் போல இருந்த ஒன்றையும் பார்த்துக் கொண்டாள். பிறகு என்னைப் பார்த்து ;இப்பொழுது நாம் போகலாம்' என்றாள். 'எங்கே' என்றேன் நான். அதற்கு அவள், 'நான் தான் முன்பே சொன்னேனே, நீங்கள் எங்கு தங்க வேண்டும் என்று காண்பிக்கிறேன் என்று', வாருங்கள் போகலாம் என்று சொல்லி மீண்டும் என் கையை பிடித்துக் கொண்டாள்.

    நாங்கள் நடக்க , அதாவது பறக்க ஆரம்பித்தோம். அதாவது கால்கள் தரை இல் பாவாமல் நடந்தோம். அது கிட்ட தட்ட பறப்பது போல் தானே. ஆனால் வழி முழுக்க கம்பளங்கள் விரிக்கப்பட்டு இருந்தது. நான் அந்த பெண்ணைக் கேட்டேன் ,'காலே இங்கு பதியவில்லை இதற்கு இத்தனை அழகான நடை பாவாடை எதற்கு ' என்று.... அவள் இனிமையான குரலில் சிரித்தாள். பதில் சொல்லவில்லை.

    சரி இதற்காவது பதில் சொல், உன் பெயர் என்ன என்று கேட்டேன். அவள் சொன்னாள் 'இங்கு எல்லோருக்குமே எண்கள் தான் , பெயர் என தனியாக கிடையாது, உங்களுக்கு விருப்பமானால் நீங்கள் என்னை எந்த பெயர் கொண்டும் அழைக்கலாம்' என்றாள்.

    தொடரும்....
     
    Thyagarajan likes this.
  4. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    ம்ம்ம். நல்ல விண்ணார் நடை. தொடரவும்.
     
    krishnaamma likes this.
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    இதோ போடுகிறேன் அண்ணா :)
     
  6. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    'நான் கிருஷ்ணப் ப்ரேமி, எனவே உன்னை மீரா என்று கூப்பிடுகிறேன். என் மகளின் பெயரும் அதுவேதான். சரியா' என்றேன். அவளும் ஒப்புக்கொண்டாள். நாங்கள் இருவரும் ஒரு மிக மிக பெரிய கட்டிடத்தை அடைந்தோம். அது ஒரு இன்டர்நேஷனல் ஏர்போர்ட் போலத்தெரிந்தது. ஆஹா என்ன கூட்டம் என்ன கூட்டம்... தினமும் இத்தனை பேரா செத்து போகிறார்கள் என்று எனக்குத் தோன்றியது. ஆமாம் உலகம் முழுவதிலிருந்தும் வந்தால் இத்தனைக்கு கூட்டம் இருக்கத்தான் இருக்கும் என்று எனக்கு நானே பதிலும் சொல்லிக் கொண்டேன்.

    அத்தனை பேர் அங்கு புழங்கினாலும் ஒரு துளி சத்தம் இல்லை. நான் முன்பே சொன்னது போல அந்த தேவ கானம் என்னுடனே பயணித்தது. நான் அது பற்றி அவளிடம் கேட்டேன். அவள் புன்னகைத்து, ‘அது தான் நீங்களே சொல்லிவிட்டிர்களே நீங்கள் கிருஷ்ணப் ப்ரேமி என்று, அதனால் தான் உங்களுக்கு அவரின் குழலொலி கேட்ட வண்ணம் உள்ளது. அவரவர்களுக்கு அவரவரின் இஷ்ட தெய்வததை குறிக்கும் வண்ணம் ஒலி கேட்டவண்ணம் இருக்கும். இது உங்களை மன மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும்' என்றாள்.

    உண்மைதான் உறுத்தாத அந்த குழலோசை மனதுக்கு மிக்க அமைதியை கொடுத்தது. நாங்கள் அந்த கட்டடத்தில் நுழைந்ததும் இந்தக் கூட்டத்தில் நான் தொலைந்து போய்விடுவேனா என்று கூட நினைத்தேன். அத்தனை கூட்டம். எங்கு பார்த்தாலும் வேறு வேறு மொழிகளில் எழுதி இருந்த போர்டுகள். எல்லோரும் பரபரப்பாக எங்கோ போய்க்கொண்டே இருந்தார்கள். ஆனாலும் ஒவ்வொருவருடனும் ஒரு தேவதை இருந்தாள். எல்லோரும் தங்களின் கிளைன்ட்(?) கையைப் பற்றிக்கொண்டு தான் நடந்தார்கள்.

    என்னுடைய தேவதை மீராவும் அந்த போர்டுகளை பார்த்தவாறு என்கையைப் பிடித்துக்கொண்டு நடந்தாள். எனக்கு நான் இடுப்பு வலியுடன், அபுதாபி இல் இறங்கி டெர்மினல் விட்டு டெர்மினல் கிட்டத்தட்ட 35வது கேட்டுக்கு நடந்து சென்றது நினைவுக்கு வந்தது.

    தொடரும்.....
     
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஒவ்வொரு பிரிவாக பார்த்து நடக்கவேண்டும். கொஞ்சம் அசந்தாலும் எங்காவது போய்விடுவோம். நாம் செல்லவேண்டிய கேட் வந்து அங்கு டேபிள் போட்டுக்கொண்டு உக்கார்ந்து இருப்பவர்களிடம் நாம் செல்லவேண்டிய விமானத்தின் எண் மற்றும் நம்முடைய டெஸ்டினேஷனை சொல்லி விசாரித்து அவர்கள், ஆமாம் இங்கு தான் காத்திருங்கள் என்று சொல்லும் வரை 'பக் பக்' என்று இருக்கும். பிறகு என் லக்கேஜ் எல்லாம் நான் வந்த விமானத்தில் இருந்து இதற்கு மாற்றிவிட்டீர்களா என்று நம் டிக்கெட்டில் ஒட்டி இருக்கும் நம் லக்கேஜ் பற்றியும் விசாரித்து விட்டுத்தான் சாப்பிடவே போகமுடியும்.

    ஒருமுறை அப்படித்தான், முதல் பிளைட்டில் சாப்பாடு சரி இல்லை, சரி அபுதாபி இல் சாப்பிடலாம் என்று நினைத்தேன். அங்கு இறங்கினதுமே தெரிந்து விட்டது நான் 35வது கேட்டுக்கு போகவேண்டும் என்று. போர்டைப் பார்த்து தெரிந்து கொண்டேன். நான் இறங்கின டெர்மின லிலேயே உணவு உண்ணும் வசதி இருந்தது. எனக்கு First Class டிக்கெட் என்பதால் நான் அங்கு தூங்கவோ, குளித்து கிளம்பவோ வசதி உண்டு. சரி குறைந்த பக்ஷம் சாப்பிட்டு விட்டு போகலாம் என்று நினைத்துக் கொண்டு அங்கு நுழைந்தேன். என்னுடைய டிக்கெட்டை பார்த்தாள் அந்த ரிஷப்ஷனிஸ்ட். நான் மெதுவாக நடந்து வருவதைப் பார்த்தாள் போல் இருக்கிறது. என் டிக்கெட் ஐ பார்த்தவாறே, 'மேம், நீங்கள் இங்கு உள்ளே போக எந்த தடையும் இல்லை, ஆனால் நீங்கள் அடுத்த டெமினல் போகவேண்டும் அதுவும் கேட் 35. மிக தூரம்.

    நீங்கள் இங்கு உணவு எடுத்துக் கொண்டால் உங்களால் வேகமாக நடந்து டெர்மினலை அடையமுடியாது. அந்த கேட் 35 இல் இதே போல மற்றும் ஒரு லௌன்ச் உள்ளது. நீங்கள் முதலில் கேட் பக்கத்தில் போய்விடுங்கள். உங்கள் டிக்கெட்டை செக் செய்து கொள்ளுங்கள், பிறகு எதிரிலேயே இருக்கும் லௌஞ்ச இல் ரெப்பிரேஷ் செய்து கொள்ளுங்கள். இது ஜஸ்ட் அட்வைஸ் தான். உங்கள் சௌகர்யப்படி செய்யுங்கள் ' என்று புன்னகையுடன் சொன்னாள். நானும், ‘அது மிக தூரம் என்றால் எனக்கு பேட்டரி கார் ஏற்பாடு செய்ய முடியுமா ‘ என்று கேட்டேன். ‘இல்லை டெமினல் விட்டு டெர்மினல் போக முடியாது. அதனால் தான் இப்படி சொன்னேன்’ என்று சொன்னாள் அவள்.

    'சரி நன்றி' என்று சொல்லிவிட்டு பசியுடனே நடந்து என் கேட்டை அடைந்தேன். அப்புறம் அவள் சொன்னபடிக்கு என் அடுத்த விமானத்தில் ஏறுவதற்காக செய்யவேண்டியதை செய்து முடித்த பின் உணவருந்த சென்றேன். மனமார அந்த ரிஷப்ஷனிஸ்ட்டுக்கு நன்றியை மீண்டும் ஒருமுறை சொன்னேன். அங்கு உள்ளே போனால்.... OMG அத்தனை அத்தனை உணவு வகைகள்... ஆனாலும் எனக்கு பயம் எது வெஜிடேரியன் என்று.. எனவே , எங்கவீட்டுப் பிள்ளை இல் இரண்டாவதாக அதே ஹோட்டலுக்கு சாப்பிட வரும் எம். ஜி.ஆர் 1 இட்லி போதும் என்று சொல்வாரே அது போல எனக்கு இது போதும் என்று காய்கனி வகைகள் மற்றும் பன் பிரெட் வகைகளை மட்டும் எடுத்துக் கொண்டேன். ஒரு பான்டா டின் எடுத்துக் கொண்டேன். அந்த நிகழ்வுகள் எல்லாம் என் மனதில் அலை மோதின.
    ஆனால் இன்று எனக்கு எங்கும் வலி இல்லை, பசி இல்லை மேலும் என்னை விட்டு விட்டு விமானம் பறந்து விடுமே லக்கேஜ் என்ன ஆகுமோ என்றெல்லாம் வித விதமான பயங்கள் இல்லை.எல்லாவற்றுக்கும் மேல் என்னை வழி நடத்திச்செல்ல மீரா இருக்கவே இருக்கிறாள். எனவே மிகவும் சந்தோஷமாக மீராவுடன் மிதந்து சென்றேன்.

    மீரா ஒவ்வொரு போர்டு பெயரையும் படித்து படித்து என்னை வழிநடத்தினாள். ஏதோ ஏதோ மொழிகளில் எழுதி இருந்ததை அவள் எப்படி அறிவாள் என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு இடத்தில் நின்றாள். நானும் தான். ஆனால் அங்கு வெறும் சுவர் தான் இருந்தது. ஆனால் என்ன அதிசயம், நாங்கள் நின்றதும் அந்த சுவற்றில் ஒரு கதவு திறந்தது. பார்த்தால் அது ஒரு லிப்ட் போலவும் தெரிந்தது. நாங்கள் உள்ளே நுழைந்தோம்.

    நாங்கள் உள்ளே நுழையும்போதே, தூரத்தில் நின்றுகொண்டிருந்த குழந்தை ஒரு தேவதை இன் கையை உதறிவிட்டு எங்கள் லிப்ட் ஐ நோக்கி ஓடிவந்தாள் . நான் நினைத்தேன் அவளும் உள்ளே வந்து விடுவாள் என்று ஆனால் வந்த வேகத்தில் அவளால் உள்ளே நுழைய முடியாமல் லிப்ட் இல் இடித்துக் கொண்டு கீழே விழுந்தாள். நான் அடாடா என்று சொல்லிக் கொண்டே அவளை பிடிக்க கையை நீட்டினேன். அதற்குள் அந்த குழந்தை இன் தேவதையும் ஓடிவந்து அவளை தாங்கிக்கொண்டாள் .

    என்ன அதிசயம், நீட்டிய என் கை இல் எங்கள் லிப்ட் தான் இடித்தது. எப்படி என்று பார்த்தால் அது கண்ணாடிக் கதவு. அதனால் தான் அந்தக் குழந்தையால் உள்ளே நுழைய முடியவில்லை. அவர்கள் லிப்ட்க்கு வெளியே இருந்ததா ர்கள். அதனால் தான் அந்த தேவதை யால் அவளை பிடித்துக் கொள்ள முடிந்தது. ஆனால் நாங்கள் க்ஷணத்தில் ஏறிவிட்டோமே, அப்படியா கதவு மூடிக்கொண்டு விட்டது...நான் கேள்விக்குறியுடன் மீராவைப் பார்த்தேன்'பாவம் அந்த குழந்தை, அவளும் நம்முடன் வந்திருக்கலாம், அந்த தேவதை உன் போல ஷார்ப் இல்லை போல் இருக்கிறது, அது தான் லிப்ட் ஐ தவற விட்டு விட்டாள்' என்றேன்.

    அதற்கு அவள், ' அப்படி இல்லை, இது அவர்கள் வரவேண்டிய இடம் இல்லை. ஆதலால் அவளால் இங்கு வர முடியாது.' என்றாள். நான் விழித்தேன். அவள் விளக்கினாள். என்னை பிடித்திருந்த பிடியை விலக்கி என் மணிக்கட்டைக் காட்டினாள். அதில் நான் கண்டது.......

    தொடரும்.....
     
  8. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    என் கையில் எப்படி இது என்று நான் யோசிக்கும் முன் மீரா தொடர்ந்தாள். இது தான் இப்போதைக்கு உங்களின் அடையாளம். நான் முன் சொன்னது போல இங்கு எல்லோருக்கும் எண்கள் தான். நீங்கள் சேரவேண்டிய இடம் எது என்று இதன் மூலம் தான் அறிய முடியும். நீங்கள் அங்கு சென்றடைந்ததும் இது மறைந்து விடும். என்றாள். என் கையைப் பார்த்தேன் அது ஒரு 16 டிஜிட் எண்.
    அவளே தொடர்ந்தாள்...'இதில் முதல் நான்கு எண்கள் உங்கள் நாட்டை குறிக்கும், அடுத்த 4 எண்கள் மாநிலத்தைக் குறிக்கும், அடுத்த 4 எண்கள் மாவட்டத்தைக் குறிக்கும், அடுத்த நான்கு எண்கள் நீங்கள் நுழைய வேண்டிய மாளிகை இன் எண். அங்கு போனதும் மேற்கொண்டு நடப்பதை பார்க்கலாம்' என்றாள். ஆஹா, எத்தனை எத்தனை ஏற்பாடு என்று நினைத்தது வியந்து போனேன்.

    இது தான் உங்களின் 'பாஸ்'... ‘PASS’..அதாவது இது இருந்தால் தான் உங்களால் எங்கும் போகமுடியும். அதாவது உங்களின் சஞ்சாரத்திற்கு இது வேண்டும். ஆனால் இது மட்டும் போதாது, நான் இதை தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். அதனால் எனக்கும் இதற்கும் தொடர்பு ஏற்பட்டு, நாம் செல்லவேண்டிய பாதை இல் ஒழுங்காக செல்ல முடியும். இன்னும் சில காலத்திற்கு நான் உங்களுடனே இருப்பேன் என்று சொன்னேன் அல்லவா, அப்படித்தான் அவர்களும். ஒருவரை விட்டு மற்றோருவர் எங்கும் தனியே செல்ல முடியாது. இது நம் இருவரையும் பிணைக்கும் தொடர்பு' என்று சொன்னாள்.

    'அதேபோல நாம் எங்கிருக்கிறோம் என்று மேலிடம் அறிவதற்கும் இது உதவும் ' என்றாள். 'மேலிடம் என்றால்?' என்ற என் கேள்விக்கு அதெல்லாம் 'தேவரகசியம் என்னால் சொல்ல முடியாது' என்று அன்பாக மறுத்துவிட்டாள். நாங்கள் ஏறிய லிப்ட்... லிப்ட் என்று சொல்ல முடியாது ஒரு ட்ரான்ஸ்பேரண்ட் அறை போல் இருந்தது. அது அப்படியே மிதக்க ஆரம்பித்தது. வாவ் ... நாங்கள் இருவரும் வான் வெளி இல் பறக்க ஆரம்பித்தோம்.

    சௌகர்யமாய் உட்கார்ந்து கொள்ள நல்ல வசதியான நாற்காலிகள் இருந்தன அங்கு. நன்றாக எல்லா திசைகளிலும் பார்வையை ஓட்ட முடியும். நான் 'ஜம்' என்று சப்பணமிட்டு உட்க்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். கீழே குனிந்து நோக்கினால் ... அடர்த்தியான பச்சை இலை காடுகள்...அருவிகள் என கண்கொள்ளாக் காட்சிகள் தென்பட்டன... நான் ஒரே ஒருமுறை தான் பழனி இல் வின்ச் இல் போய் இருக்கிறேன். அப்பொழுது இப்படி பார்க்க முடியவில்லை. எழுந்து பார்க்கவோ படமெடுக்கவோ அனுமதிக்கவில்லை. மற்றபடி சினிமாக்களில் தான் இத்தனை அழகை பார்த்திருக்கிறேன். ஆனால் இன்று , ரேவதி ஒருபடத்தில் சொல்வாங்களே ,’ நான் ஆடுவேன் பாடுவேன் என்ன வேணா பண்ணுவேன்' என்று அதைப்போல இருந்தது என் மனோ நிலைமை.

    அப்படி ரசித்துக் கொண்டிருக்கும்போதே அது மிகவும் உயரமாக பறக்க ஆரம்பித்தது. இப்பொழுது உயரம் அதிகமாக அதிகமாக வெறும் நீல நிறம் மட்டும் தென்பட்டது. அப்படியே காற்றில் மிதந்து சென்ற அந்த லிப்ட் கொஞ்ச நேரத்தில் ஓரிடத்தில் ஒரு கட்டிடத்தில் போய் இணைந்து கொண்டது.

    முன்பு போல நாங்கள் சாதாரண லிப்ட் இல் இருந்து வெளி வருவது போல வந்தோம். அதுவும் ஒரு ஏர்போர்ட் போலத்தான் இருந்தது. நாங்கள் மீண்டும் நடந்தோம். அந்த கட்டிடத்தைவிட இங்கு கொஞ்சம் மக்கள் குறைவாக இருந்தனர். இங்கும் அங்கும் போய்வந்தனர். ஆனால் நான் ஒன்று கவனித்தேன். எந்த இடத்திலும் கடைகள் இல்லை, சாப்பிட எதுவும் இல்லை. கடைகள் போல் இருந்த சின்ன சின்ன அறைகளில், ஏதோ ஒருவர் மட்டுமே இருந்தார்.

    இந்த தேவதைகளில் சிலர் அங்கு சென்று திரும்பினார் , அவ்வளவுதான். எனக்கு மீராவின் பேச்சின் மூலம் புரிந்தது என்னவென்றால், என் போல் இங்கு வருபவர்களை அவரவர்களின் கர்ம பலனை அனுபவிக்க உரிய இடத்தில் கொண்டு சேர்க்கும் தேவதைகள் இவர்கள். இவர்களுக்கும் அது என்ன ஏது என்று தெரியாது. மேலிடத்தில் இருந்து வரும் கட்டளைகளை நிறைவேற்றுகிறார்கள். இவர்களுக்கு வயதே ஆகாது. பசி தாகம் தூக்கம் உண்டா என்று இன்னும் தெரியவில்லை. எனக்கும் தூக்கம் வருமா என்றும் எனக்குத் தெரியவில்லை. நான் இங்கு வந்து இதுவரை எத்தனை நேரம் ஆனதோ தெரியவில்லை ஆனால் களைப்பாகவே இல்லை.

    என் கையிலிருந்த எண்களை மீரா காட்டும்பொழுது நான் பார்த்து நினைவில் வைத்துக் கொண்டேன்.அதைக்கொண்டு இப்பொழுது நாங்கள் மாநில வாரியாக இருக்கும் இடத்தையும் தாண்டி மாவட்டத்தையும் தாண்டிவிட்டோம் இனி கடைசி யாக உள்ள 4 எண்களின் படி நாங்கள் இனி நாங்கள் தங்கவேண்டிய இடத்திற்கு போக வேண்டியது தான் பாக்கி.

    ம்ம்.. நான் யூகித்தது சரி. நாங்கள் அந்த ஏர்போர்ட் போல இருந்த கட்டிடத்தை விட்டு வெளியே வந்தோம். முன்பு போல பல கட்டிடங்கள் இருக்கும் ரோட்டில் நடந்தோம். பல கட்டிடங்களைக் கடந்ததும் ஒரு மிக அழகான ரோஜா பூ போன்ற நிறக் கட்டிடத்தின் முன் வந்ததும் மீரா இது தான் என்றாள்.

    எனக்கு அந்த இடம் ரொம்ப பிடித்து விட்டது. உள்ளே போகலாமா என்று கேட்டேன். ம்ம்.. என்று சொல்லி என்னை கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள். உள்ளே நுழைந்ததும் நான் முன்பு போல ஹாலில் உட்காரவைக்கப்பட வில்லை. நேரே நாங்கள் இருவரும் தலைவி போல இருந்தவரிடம் சென்றோம். அவரிடம் மீரா எதோ காட்டினாள். தலையை ஆட்டி அவர்கள் சொன்னதை கேட்டுக்கொண்டாள். பிறகு என்னையும் அழைத்துக் கொண்டு அறைக்கு சென்றாள்.

    மிக அழகான அறை , விசாலமான அறை. அங்கு ஒரு கம்ப்யூட்டர் போல ஒன்று இருந்தது. நாங்கள் இருவரும் அதன் முன் அமர்ந்தோம். புன்னகையுடன் மீரா சொன்னாள், 'இப்பொழுது தான் தெரியும் உங்களின் வாழ்க்கை வரலாறு…உங்கள் பாவ புண்ணிய கணக்கின் பாலன்ஸ் ஷீட்' என்று. அவள் சொன்னதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை. ஆனால் சொன்னதை கேட்டதும் ஆஹா எத்தனை எத்தனை ஏற்பாடுஎத்தனை அழகாக கட்டமைத்துள்ளார்கள் என்று வியக்கத்தான் தோன்றியது.

    தொடரும்.....
     

Share This Page