1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மணமாலையும் மஞ்சளும்!!!!வாழ்த்திடுதே.......

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jun 21, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    மணமாலையும் மஞ்சளும்....வாழ்த்திடுதே.....நீ வாழ்ந்திடவே!!!!


    அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்கை பண்பும் பயனும் அது


    தோழி வேணியே!!!!!!
    இல்லறம் என்னும் நல்லற வீணையை
    இருவரும் மீட்டிட்ட
    ஒன்பதாவது
    ஆண்டிதுவே.
    மகிழ்வான இன்னாளில்
    தென்றல் வந்து வாழ்த்து பாடி தாலாட்ட
    தேன் தேடும் வண்டினங்களாய்
    நாங்களும் உன் வனம் தேடி வாழ்த்துரைக்க
    வந்திட்டோம்
    உன் அருமை நண்பர்கள்.

    தோள் கொடுக்கும் துணையாய்
    துவண்டு விழும்முன் தூணாய்
    கரம் பிடித்தவனுக்கு சிநேகிதியாய்
    காதல் வாழ்கையின் முதுகெலும்பாய்
    நீ இருந்திடு. உன் நல்லறம் காத்திடு.


    வாழையடி வாழையாய் பூ மலரும் சோலையாய்
    இருமன இணைவில் இனிதே வளர்க!
    நல்லதொரு வேளையாய் நாளும் சிறப்பாய்
    திருமண நாளில் சுகமாய் வாழ்க!
    இரு தீபங்களாய் இன்சொல்லின் வேதங்களாய்
    இன்ப அன்பு ஒளியில் எப்போதும் ஒளிர்க!
    பேரும் புகழும் பார்ப்பவர் மகிழவும்
    ஈருடல் ஒருயிருமாய் இருவரும் வாழ்க!


    தமிழ் போல சுற்றும் கதிர் போல
    வட்ட நிலவின் முகம் போல -
    சுற்றோரும் மற்றோரும் காணும் அனைவரும்.
    பெற்றோர்கள் பெறற்கரிய வென்றுலகம் பெரிதுவக்க
    சுற்றம் தழைத்துயர சுந்தரமாய் நீள்காலம்
    அகலாத அன்புடன் பல்லாண்டுகாலம் வாழ்ந்திடவே......
    அன்பும், அறமும் ஊற்றாய் ஊடே வைத்து,
    பண்பும், பயனும் குறையாமல் விளைய,
    இல்வாழ்வில் இன்பங்கள் எல்லாம்
    இடையறாது செழிக்க
    இதயத்திலிருந்து வாழ்த்துகின்றோம்........வாழியவே

     
    Last edited: Jun 21, 2010
  2. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Saroj,
    Arumaiya vaazhthu madal.
    I also join in wishing the couples a Happy married life!

    Yaarukku indha vaazhthu madal nu therinja nalla irukkum.. I would be happy!

    sriniketan
     
  3. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    அருமை தோழி வேணிக்கு ...அழகான ஒரு வாழ்த்து மடல்....அன்பு தோழி சரோஜிடம் இருந்து .....

    அவர்களின் வாழ்வில் இன்று போல் என்றுமே மகிழ்ச்சியும்...புரிந்துகொள்ளுதலும் நிலைக்கட்டும் என்று உங்களுடன் நானும் சேர்ந்து
    வாழ்த்துகிறேன் நமது தோழியை......:gift
     
  4. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Ninaithen Latha...Veniyaaga thaan irukkum yenru.
    Many more Happy Returns Veni..
    God bless you both with all you need.

    sriniketan
     
  5. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Nightingale of Indus both in voice and writing.........

    Enadhu manamarndha nal vazhthukkal !!

    Indha naal pola neeyum unadhu thunaivarum endrum nalamaaga irukka kadavulai vendugiren !!

    OM SAIRAM !!
     
  6. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    nalla vazhthu madal kavithai arumai thozhi venikku ...saroj..
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ரோஜா,

    வார்த்தைகள் என் வசத்தில் இல்லை. எனவே உனக்காக, இந்த உணர்சிகளின் பிடியிலிருந்து மீண்டு, மீண்டும் வருகிறேன். நன்றிகள் பல அனைத்திற்கும்
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ஸ்ரீனி,

    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் பல தோழி. உங்கள் அனைவரின் அன்பும், வாழ்த்துக்களும் இருக்கையில், வேறு என்ன வேண்டும் எனக்கு???

    நன்றிகள் மீண்டும்
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள லதா,

    உன் வாழ்த்துக்கள் காண்கையில் மகிழ்ச்சி எனை ஆனந்தமாய் ஆட்க்கொள்கிறது தோழி. நன்றி, நன்றி, நன்றி
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்பே சுதா,

    என் வாழ்த்துக்கும் அனைத்திலும் உங்கள் பங்கு என்று எனக்கு நிலைத்திருப்பதை அன்றி வேறு எதுவும் நான் வேண்டேன் தோழி. உங்கள் அன்புக்கும், உங்கள் வாழ்த்துக்கும், உங்கள் வார்த்தைகளுக்கும் நன்றி தோழி
     

Share This Page