1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மங்கலம்!

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Jan 4, 2019.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,303
    Likes Received:
    10,000
    Trophy Points:
    540
    Gender:
    Male
    "எங்கிருந்தார் இவர் இது நாள்?" என்றறியேன் தோழியரே!
    இங்கு வந்தார், இனிதுவந்தார், அது என் முன்வினைப் பயனே!
    பண்டு விழி மூடியவர், தவங்கனிந்து கண் திறந்தார்.
    "இன்று!" எனக் குறிப்புணர்த்தி தாதையுமே மகிழ்வளித்தார்.

    காற்றான அத்தையவள் தலை வருடி நறுமணங்கள்
    அத்தனையும் பூசி எனை திக்குமுக்காடச் செய்ய
    நேற்றான மூத்தோரும் பெருநிரையாய் வந்தே தங்கள்
    அன்பதையும், வாழ்த்தினையும் கனவில் வந்து பொழிந்தேக

    உடல் சற்றே பருக்க, கன்னங்களில் செழுமை கூட
    கண்ணிலொரு தனியொளியும் எங்கிருந்தோ சேர
    பிடியானையின் அத்திண்மையும், அமர்வதுவும் நிறைய
    நிறைமௌனம் கொண்டிருந்தேன் நற்பொழுதும் அணைய.

    மதகளிறாய் அவர் வர, உடன் வந்தார் ஆர்ப்பரிக்க,
    இரவியும், முழுமதியும், சின்னஞ்சிறார்களென மாறி,
    வந்திருந்த பெரியோர்கள் பின் உடனே மறைய
    "இது வேளை!" எனச் சான்றோர் மூத்தவரும் சுட்டி

    கை தாழ்த்தும் முன்பே என்னவரும் வெள்ளியினாலான
    நூலெடுத்தார்; வில்லவரின் வேகத்தினை விஞ்சி
    அணி பூட்டி விட்டார், என் முகமும் குங்குமமெனப் பொலிய.
    நிலை மீண்டார் கரவொலியும் முழக்கமெனத் தொடர.

    குறிப்பு: இது இடி, மின்னல் செறிந்த ஒரு மழையிரவில் உதித்த கற்பனை.
     
    Thyagarajan and periamma like this.
    Loading...

  2. Natashabalk

    Natashabalk New IL'ite

    Messages:
    13
    Likes Received:
    3
    Trophy Points:
    3
    Gender:
    Female
    Great ,is it your own lyrics?
     
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,303
    Likes Received:
    10,000
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Yes @Natashabalk. It is! Thanks for your appreciation. -rgs
     
  4. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,303
    Likes Received:
    10,000
    Trophy Points:
    540
    Gender:
    Male
  6. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,519
    Likes Received:
    13,226
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:நன்றி சொல்ல வார்த்தை இல்லை எனக்கு
    இடி மின்னல் மழை இரவில்
    மனம் நிறைய கவிதை அருவியில்
    ஆனந்த கவிதை புரிந்தீர்.
    இடையில் வளைகாப்பு வர்ணனை
    என்று நினைக்க வைத்தது
    மனதிலே நிற்கும் கவிதை
    மயங்க வைக்கும் கவிஞ்ஞர்
    நீவீரே.
    ஆண்டவர் நம்பக்கம்
     
    rgsrinivasan likes this.
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,303
    Likes Received:
    10,000
    Trophy Points:
    540
    Gender:
    Male
    THanks @Thyagarajan for your like and this warm appreciation :). -rgs
     
    Thyagarajan likes this.
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @rgsrinivasan
    இடி முழங்கியது கவிதையிலே
    மின்னல் கீற்றுகள் எங்கள் கண்களிலே
    இயற்கை அன்னையின் வர்ணனை கண்டு
    இதயம் குளிர்ந்தது மழைத் துளிகளால்

    வார்த்தைகள் கோர்த்த விதம் மிக அருமை
     
    rgsrinivasan likes this.
  9. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,303
    Likes Received:
    10,000
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks @periamma for your nice appreciation :) -rgs
     
  10. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,485
    Likes Received:
    10,713
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Just now I happened to read your poem'Mangalam' composed on a day-expecting rains. Beautiful imagination ! I find no words to appreciate. It was a poem enlightening our hearts with unsubstitutable phrases.Congrats.

    I do not know how it struck you to name the poem as 'Mangalam'. I think it is named because of the auspiciousness that rain brings to the whole world.

    The followings lines are just for information.
    Mangalam in Tamil grammar comes under'Thaguthi vazhakku'.When we want to express certain inauspicious things ,we cover it in such a way that it looks auspicious.This is actually called'mangalam' in Tamil Grammar.
    You can refer to any Tamil Grammar text for confirmation.
    For example the expression 'iraivanadi sernthaar ' is an example of mangala vazhakku to denote death.
    in the same way if we want to put off kuththu vilakku we just say'viakkaik kulirachchei'.
    On seeing the title I was expecting some terrible events couched in soft terms.I have given a detailed response in Regional language forum.
    Jayasala 42
     
    rgsrinivasan likes this.

Share This Page