1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மகிழ்ச்சி வெற்றியின் சாவி

Discussion in 'Regional Poetry' started by tamilelavarasi, Nov 26, 2016.

  1. tamilelavarasi

    tamilelavarasi Bronze IL'ite

    Messages:
    28
    Likes Received:
    37
    Trophy Points:
    38
    Gender:
    Female
    [​IMG]
    துயில் உறங்கும் போதும்

    துளி மகிழ்ச்சி வேண்டும்..

    மனம் கண்ட கனவுகளில்

    மகிழ்ச்சி திளைத்திருக்க வேண்டும்..

    என்ன இது வாழ்க்கை

    என்றுளறும் பேர்களுக்கு


    வெற்றி என்ற வித்து கையகப் படாமல்

    ஓடி ஒளிந்து கொள்ளும்..

    திணை விதைத்து பகை அறுத்த காலம் சென்று,

    பகை விதைத்து வினை அறுக்கும் காலம் இன்று..

    அறுப்பவர்கள் அறுக்கட்டும்,

    திணையாயினும் வினையாயினும்..

    நீ அறுப்பவனாய் இராதே..

    விதைப்பவனாய் இரு..

    வெற்றி பெறும் வேந்தரும்,

    மண்ணை ஆளும் மாந்தரும்

    மறவாது பெற்றிருந்த சாவி மகிழ்ச்சி..

    உற்ற துணை உள்ளதடா..

    பெற்ற இன்பம் போதுமடா..

    என்று மனம் போகையிலே,

    கொஞ்சம் உன்னை தட்டிக்கொடுத்து செல்லடா என்று சொல்..

    நாதி இல்லை என்று பாதி உயிர் போய்விடின்,

    வெற்றியை யார் தான் பெற்றுச் செல்வது..

    மட்டற்ற மகிழ்ச்சி பெற்றவர்க்கும்-இங்கு

    திட்டமிட்ட வெற்றி அமைவதில்லை

    காரணம் மகிழ்ச்சி..!!

    ஏனெனில் மகிழ்ச்சியின் வண்ணங்கள் உணராமையே..

    கூண்டிலே வாடும் பறவையின் சுதந்திரம் மகிழ்ச்சி..

    சுதந்தரப் பறவையின் சிறை வாசம் அல்ல மகிழ்ச்சி..

    பசியில் வாடும் உயிரின் பசி போக்கல் மகிழ்ச்சி..

    புசிக்கின்ற உணவை பறித்தல் அல்ல மகிழ்ச்சி..

    இதில் எந்த வகை சாவியை உங்கள் கரம் ஏந்தியுள்ளது..

    ஏந்திய வகை சரியாக இருப்பின்,

    வெற்றியின் வாழ்க்கை உங்கள் வசமே..
     
    ksuji and PavithraS like this.
    Loading...

Share This Page