1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

போதையின் பாதையில் ....

Discussion in 'Regional Poetry' started by PavithraS, May 26, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Cartoon photoon Photo's | Cartoon photoon Album | Special Gallery | News Pictures | Live images | News Photos - No.1 Tamil News paper

    உச்சி வெயில் நேரத்துல
    எச்சிலிலைத் தேடி வரும்
    நன்றியுள்ள சீவனைப் போல்
    நாலு காலு பாய்ச்சலிலே
    ஊருசனம் எங்கங்க ஒதுங்குது ?
    டாஸ்மாக் வாசலிலே பதுங்குது !


    பத்துமணி ஆகி விட்டால்
    பித்தம் தலைக்கேறி விட
    இரத்தமெல்லாம் சூடு ஏற
    மொத்தமாகக் காசைக் கொட்டி
    பத்திரமாய் புட்டி வாங்கி
    எத்தனையோ ஏழைசனம் அழியுது !


    எந்த கட்சி ஆண்டாலென்ன ?
    நொந்த வாழ்வு கந்தல்தாங்க !
    எந்த பக்கம் பார்த்தாலுமே
    இந்த குடி கூத்துதாங்க !
    சொந்த காசில் சூனியத்த
    இந்த மக்கள் வைக்கிறாங்க !


    ஓட்டுக்குத்தான் நோட்டு வாங்கி
    நோட்டாலதான் புட்டி வாங்கி
    ரோட்டோரமா மானம் போயி
    பாட்டுப் பாடி ஆட்டமாடி
    வீட்டுக்கொன்னு இப்படித் தான்
    தட்டுக் கெட்டு அலையுதுங்க !


    கள்ளச் சாராயத்த ஒழிக்கக்
    கள்ளுக்கடை அரசே நடத்தும் !
    உள்ளபடி கொடுமை எல்லாம்
    கள்ளால் தானே தொடங்குதுங்க !
    உள்ளம் தானா மாறாவிட்டா
    கள்ளை எப்படி ஒழிப்பதுங்க ?


    புத்தி தடுமாறச் செய்யும் !
    பத்தும் பறந்தோடச் செய்யும் !
    சுத்தி உள்ள சமுதாயம்
    சுத்தமாக ஒதுங்கச் செய்யும் !
    போதை என்னும் தீப்பழக்கம்
    பாதை மாறச் செய்திடுமே !


    தானும் கெட்டு மானங்கெட்டு
    தன்னை நம்பும் குடியுங்கெட்டு
    ஈனப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து
    வீணாப் போகும் 'குடி'மக்களே ,
    கோணல் புத்தி மாறுவதெப்போ ?
    குடிக்கிற பழக்கம் நிறுத்துவதெப்போ



    பசி போகும் வந்தால் மட்டுமல்ல , மது போதை ஏறி புத்தி தடுமாறினாலும் இவை பத்தும் பறந்து தான் போகும்.
    1.மானம்
    2.குலம்
    3.கல்வி
    4.வண்மை
    5.அறிவுடைமை
    6.தானம்
    7.தவம்
    8.உயர்ச்சி
    9.தாளாண்மை
    10.காமம்


    Regards,

    Pavithra
     
    kaniths, jskls, periamma and 2 others like this.
    Loading...

  2. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    போதை தலைக்கு ஏறிய பின் மானம் மரியாதையை பற்றி யார் கவலை பட.
    போதையில் புத்தி மாறி இளம் வயது பிள்ளைகளும் தடம் மாறுவதை பார்க்க மனம் தவிக்கிறது.அவர்கள் எதிர் காலம் எப்படியோ ?
     
    jskls likes this.
  3. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    சாடல் அருமை.

    கள்ளுண்ணாமை இயற்றிய வள்ளுவரே வெறுத்து
    கவலை மறக்க இதை நாடுவாரோ எனும் நிலை
    இன்று நம் நாட்டிலே!!!!!!!!!!!!
     
    kaniths, jskls and periamma like this.
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பவித்ரா போதை கவிதை பொன்னான கவிதை .

    தேவை ஒரு போதை
    போதை வந்த பின்
    மாறிடும் பாதை
    பாதையில் விழுந்து எழுந்தாலும்
    உடலுக்கு தான் வலி
    உள்ளத்துக்கு அல்ல
    உள்ளம் மரத்த பின்
    எத்தனை இழந்தாலும்
    இழப்பு புரியாது
     
  5. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஏழ்மையை ஒழிக்க தெரியாமல் ஏழைகளையே ஒழிக்கும் ராஜதந்திரமோ?
    நல்ல விழிப்புணர்ச்சி கவிதை. அம்மாவுக்கு அனுப்ப முடியுமா பாருங்கள்
     
    kaniths, GoogleGlass and periamma like this.
  6. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    கவலையூட்டும் செய்தியைப் பார்த்து எழுதிய வரிகள். கருத்தை ஆமோதித்து உங்கள் எண்ணத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    உண்மைதான் சுமதி. எப்படிப்பட்ட சமுதாயத்தை நம் குழந்தைகளுக்கு விட்டுச் செல்லப் போகிறோமோ என்று அச்சமாயுள்ளது. நமது வாழ்வியல் சீர்கேடு எதிர்காலத்தை இருண்டதாக்கிவிட்டது. தனிமனித ஒழுக்கம் குறையக் குறைய, இது போன்ற சீர்கேடுகள் தடுக்க முடியாதவை ஆகின்றன.



    வேடிக்கையாகச் சொன்னாலும், வேதனையை விவரிக்கும்படியான கருத்து. வள்ளுவர் இவர்களைக் கண்டால் எங்கே போய்த் தள்ளுவாரோ ?

    ஆம் பெரியம்மா. போதை ஏறிய பின் உள்ளம் மறந்து தான் போகும், மரத்துத் தான் போகும். எதுவுமே அளவோடு இருந்தால் பிரச்சனையில்லை. அளவுக்கு மிஞ்சினால் அமுதமே நஞ்சு எனும் போது, இம்மாதிரி லாகிரி வஸ்துக்கள் பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது. இனிமேல் குடிகாரகளே இல்லாத தமிழ்ச் சமூகம் உருவாக முடியாது போல. அப்படிப்பட்ட நிலையில் அப்பழக்கத்தை முற்றிலுமாக விட முடியா விட்டாலும், ஒரு கட்டுக்குள் வைத்திருக்கவாவது 'குடி' மக்கள் கற்றுக்கொள்ள் வேண்டும்.



    ஏழை சொல் அம்பலமேறுமா ?


    ஏழையின் தாராள குடிப் பழக்கத்தால் தான் இன்று அரசுக் கருவூலம் நிரம்புகின்றது. எனவே ஏழையை ஒரு நாளும் ஒழிக்க மாட்டாகள்.இருப்பவர்கள் எல்லோரையுமே ஏழையாகவும், கோழையாகவும் மாற்றி விடுவார்கள்.

    அள்ள அள்ளக் குறையாத நிதியத்தை எப்படித் தள்ள மனசு வரும் ? ஆக்கபூர்வமான வழிகளில் அரசுக்கு வருமானம் பெருகச் செய்யாமல் ஒரு நாளும் மதுவிலக்கு என்ற பேச்சிற்கே இடமில்லை. குடிப்பவன் தள்ளாடலாம்.ஆனால் அவனது குடிப்பழக்கத்தால் தான் அரசு நிதி நிலைமைத் தள்ளாடாமல் இருக்கிறது என்பது கசப்பான உண்மை.
     
    Last edited: May 27, 2016
    kaniths, Harini73 and GoogleGlass like this.

Share This Page