பைந்தமிழில் பேசலாம் வாருங்கள்

Discussion in 'Community Chit-Chat' started by Riyakathir, Nov 3, 2011.

  1. Riyakathir

    Riyakathir Platinum IL'ite

    Messages:
    2,353
    Likes Received:
    1,953
    Trophy Points:
    290
    Gender:
    Female
    இவள் என் தாய் என்பதினாலோ என்னவோ, இவள் மேல் எனக்கு கொள்ளை பிரியம்.
    நான் இந்திய தலை நகரமாம் தில்லியில் இருப்பதால் நான் என் தாயின் மடிக்காக ஏங்குகிறேன்.
    என்னைப்போல் நீங்களும் தாயின் மடிக்காக எங்கும் தொழியானால், வாருங்கள்..

    பழந்தமிழில், பைந்தமிழில், செந்தமிழிலில் பேசி மகிழ்ச்சி பரப்பலாம் .

    annai2.jpg
     
    3 people like this.
    Loading...

    Similar Threads
    1. shinara
      Replies:
      8
      Views:
      1,179
  2. tnkesaven

    tnkesaven Gold IL'ite

    Messages:
    544
    Likes Received:
    160
    Trophy Points:
    108
    Gender:
    Male
    madras thamizh

    கலாய்க்கிறது - கிண்டல் செய்வது
    இட்டுனு- கூட்டிக்கொண்டு
    அப்பால- அப்புறம்
    அவுல் குடுக்குறது- ஏமாற்றுவது
    பல்பு வுட்டுட்டான்- இறந்துட்டான்
    பகிலு- இடுப்பு பகுதி
    பேஜார்- அறுவை
    டகுள் -- பொய்
     
    1 person likes this.
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அன்பு தங்கைக்கு
    பைந்தமிழுக்காக ஒரு நூல் பதிவு
    தந்தமைக்காக என் வந்தனம்.Bow

    வருகின்ற நம் தோழர்/தோழிகள்
    தமிழிலேயே தட்டச்சு செய்தால்
    அப்படியே தங்கும் தமிழின் சிறப்பு.
    இல்லையெனில் சிராய்ப்பு
    தமிழுக்கும் அதைப் படிப்பவருக்கும் [​IMG]
     
    2 people like this.
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    இன்னாமே
    புள்ள பைந்தமில்னு ஷோக்கா ஒரு நூல இஸ்துகினு வந்தா
    அதுல எதுக்குமே இந்த கஸ்மாலம் புடிச்ச பாஷ???
    ரொம்ப பேஜாரா கீது மா.

    ஆனாலும் மதராசி பாஷ அகராதி ரொம்ப டாப்பு மா [​IMG]
     
    2 people like this.
  5. Riyakathir

    Riyakathir Platinum IL'ite

    Messages:
    2,353
    Likes Received:
    1,953
    Trophy Points:
    290
    Gender:
    Female

    அன்பு உள்ளம் கொண்ட சகோதரரே
    தங்களின் முதல் பதிவு இங்ஙனம் தமிழை சிதைப்பதை வேண்டாமே.
    தங்களுக்கு உள்ள தமிழ் அறிவு மிகவும் அரிது. தங்கள் தயவு கூர்ந்து செந்தமிழில் பதிவு செய்யும்படி மிக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.
     
  6. Riyakathir

    Riyakathir Platinum IL'ite

    Messages:
    2,353
    Likes Received:
    1,953
    Trophy Points:
    290
    Gender:
    Female
    என் அன்பு மிக்க சகோதொரியே.... தங்கள் செந்தமிழில் உரையாடியது.... என் அப்பன் பாரதியின் கூற்றி போல என்காதில் தேன் வந்து பைந்தடி தோழி.
    வரும் தோழர் தொழிமர்க்கு தங்கள் விடுத்துள்ள வேண்டுகோள் மிகவும் அற்புதமானது.. அதை தங்கள் விடுத்த விதம் மிகவும் அபாரமானது.

    வாழ்க என் தமிழாம் ... வளர்க எம்மொழியாம்....

    அன்புடன்
    பாரதி மகள்.
     
  7. Riyakathir

    Riyakathir Platinum IL'ite

    Messages:
    2,353
    Likes Received:
    1,953
    Trophy Points:
    290
    Gender:
    Female
    சகோதரரே..... நன்றாக தங்களின் பாசையில் சொன்னார் யாஷி குஷி.
    தாங்கள் அதை புரிந்து கொண்டு தமிழில் உரையாட அன்புடன் வேண்டுகிறேன்..

    --
     
  8. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    வணக்கம்.....வணக்கம்....
    அன்பு தங்கை ரியா.....இந்த நன்-நூலில் என்னையும் இணைத்துக்கொள்கிறேன்.....
     
    1 person likes this.
  9. Riyakathir

    Riyakathir Platinum IL'ite

    Messages:
    2,353
    Likes Received:
    1,953
    Trophy Points:
    290
    Gender:
    Female
    அன்பு தோழியும் சகோதிரியுமான பார்கவியின் பதிவைப்பெற இந்த நூல் பாக்கியம் செய்ததை ஆகிறது. தங்களை இணைத்து கொள்ள தமிழ் அன்னை மிகவும் மகிழ்ச்சி கொள்வாள்
     
  10. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    நன்றி ரியா......
    தலை நகர் குளிர் எப்படி இருக்கிறது......?
    அழகழகாக ஸ்வெட்டர் , சால்வை வாங்கிவிட்டீர்களா....?
    குளிர் ஆரம்பிக்கும்பொழுது நம் உடைகளுக்கு ஏற்ற நிறங்களில் கம்பளி ஆடைகள் வாங்குவதும்,
    கால் அணிகள் வாங்குவதும் ஒரு மகிழ்ச்சியான அனுபவம்......
    அதுவும், தலைநகரில் கேட்கவா வேண்டும்......
    கதகதப்பான கம்பளி உடைகளுடன்....., இஞ்சி சேர்த்த ஆவி பறக்கும் தேநீர்.....,பழங்கதைகள் பேச இதமான துணை........குளிர் காலம் ......அருமையான காலம் ரியா......
    அனுபவியுங்கள்....அனுபவங்களை பகிருங்கள்.......
     
    2 people like this.

Share This Page