ஆசை இல்லா மனிதன் அபூர்வம்; ஆனால், ஆசை பேராசை ஆனால், துன்பம் நிச்சயம்! கணினி அடிப்படைத் தேவை என ஆனபின், மனிதன் கண்டான் புதுப் பித்தலாட்டங்கள்! கோடிகளில் வெளிநாட்டுப் பணம் பரிசு என, கேடிகள் சிலர் அறிவிப்பார், மின்னஞ்சலில்! உழைத்துச் சேர்க்காத பணம் நில்லாது என எடுத்துச் சொன்னாலும் பலருக்குப் புரியாது! பொங்கிடும் ஆசை, பேராசைச் சுனாமியாகி, வங்கிக் கணக்கு எண் என்று கொடுத்ததிலே பணப் பரிமாற்றத்திற்குக் கேட்ட தொகையை, கணப் பொழுதில் லக்ஷங்களில் அனுப்பி, பின் உள்ளதும் போனதென்று புலம்பித் தீர்த்திடும் உள்ளங்கள், எப்போது தெளியப் போகிறதோ! :rant