1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பேய் பிடித்ததோ?

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Jan 7, 2011.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    வழக்கம் போல் தாமதமாகக் கிளம்பி,
    வாடகை வண்டி ஒன்றினைப் பிடித்து,
    வாடையின் குளிருக்கு மெல்ல நடுங்கி,
    வண்டி மறைப்பை நன்றாய் இழுத்து,

    அமர்ந்திருக்கையில் வண்டியும் இருமி,
    புகையாய்ப் புகைந்து, நின்றே போனது.
    கனவில் ஆழ்ந்தவனைக் குரல் எழுப்பி,
    தள்ளச் சொன்னதில் வெறுத்தே போனது.

    உடல் பருமனை சபித்துக் கொண்டு,
    உந்தித் தள்ளியும் பயனில்லை என்று,
    தெரிந்து பையை எடுத்துக் கொண்டு,
    தளர நடந்தேன் அலுத்துக் கொண்டு.

    வீடு நான்கு கல் தொலைவில் தானென்று,
    தெரிந்து கொஞ்சம் சமாளித்துக் கொண்டு,
    நடந்தவன் திடீரென உணர்ந்த அமைதியில்,
    சற்றே தயங்கி, பின் தொடர்ந்த பொழுதில்,

    எங்கோ ஒரு நாய் அழுகுரல் கேட்டு,
    உடல் எங்கும் நடுக்கம் பரவிடக் கண்டு,
    தனக்குத் தானே தைரியம் சொல்லி,
    முன்னே நகர்ந்தேன் எனையே எள்ளி.

    சுடுகாடொன்று என் கண்ணில் படவும்,
    பார்க்காதே என ஒரு குரல் சொல்லவும்,
    ஏனோ அத்திசை பார்க்க, தொலைவில்,
    புகையும் கொஞ்சம் தெரிய விரைவில்,

    அவ்விடத்தைக் கடக்கத் துடித்தன கால்கள்.
    பின்னாலிருந்து ஏதோ என்னைப் பிடித்து,
    நிறுத்த, பதறி, காதில் பல குரல்கள்,
    கேட்டது மாதிரி இருந்ததை அடுத்து,

    சுற்றிப் பார்த்தால் ஒருவரும் இல்லை.
    கடவுள் பெயரை சொல்லிக் கொண்டு,
    கடக்க, வேறு தொல்லைகள் இல்லை.
    கடைசியில் வீடு சென்றதும் உண்டு,

    உறங்கப் போகுமுன் சிந்தனை செய்தேன்
    எது வந்து என்னைப் பிடித்தது என்று.
    விரைவில் என் முன் விடை வரத் தெளிந்தேன்
    என் பயமெனும் பேயின் பிடி அதுவென்று.
    -ஸ்ரீ
     
    Last edited: Jan 7, 2011
    Loading...

  2. nityakalyani

    nityakalyani Gold IL'ite

    Messages:
    2,664
    Likes Received:
    96
    Trophy Points:
    130
    Gender:
    Female
    rgs,

    what ghost got you - after getting washed to buy a costly soap now peye. ha ha . what sir - please do things properly. the ghost was a good one - it saved you from a near accident. btw you realised this when you were about to go to sleep ??? - nice write up keep writing
     
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் விரைந்த பாராட்டுக்கும், அக்கறைக்கும் நன்றி நித்யகல்யாணி. என் அனுபவங்களில் சிலவற்றை எழுத முயற்சி செய்கிறேன். உங்களைப் போன்றோரின் பின்னூட்டங்கள் மேலும் எழுதத் தூண்டுகின்றன. -ஸ்ரீ
     
  4. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    RGS ithu unga experince enna.Vadivel commmedy la nadakra ellathayum neenga korthu solirukeenga.Vayiru kulungi sirichen antha peya paathu ena naan peiku bayapada maaten:biglaugh:biglaugh
     
  5. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    பயம் மட்டுமே காரணம் ஸ்ரீ, நான் நிறைய முறை சுடுகாடு கடக்க நேரிட்டுள்ளது, சிறு வயதிலிருந்தே.எனக்கென்னவோ, மனிதர்களை பார்த்து தான் பயம் வருகிறது
     
    Last edited: Jan 7, 2011
  6. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    ஆம் சோனியா. அதுவும் என் அனுபவமே. வேறு சில விவரிக்க முடியாத, திகைப்பில் ஆழ்த்தும் அனுபவங்கள் உண்டு. முடிந்தால் எழுதுகிறேன். நன்றி, உங்கள் பின்னூட்டத்துக்கு. -ஸ்ரீ
     
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    நல்ல கருத்து லதா. பயம் என்னென்ன செய்யும் என்று மருத்துவ உலகம் சொல்வதைப் படித்தால் பயமாக இருக்கிறது. உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி. -ஸ்ரீ
     
  8. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    அந்தே நேரம் காக்க காக்க கனகவேல் காக்க,என பலமாய் உரைத்து,
    உறைந்த நிலையை கடந்தீர் போலும்.
    நீங்க பரவாயில்லை ,பலர் வீட்டில் இருக்கும் போதும் இதே உணர்வுடன் இருகின்றனர்:hide:.
     
  9. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் பின்னூட்டத்துக்கும், கருத்துக்கும் நன்றி தீபா. -ஸ்ரீ
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நாம் பயந்துக்கொண்டே பார்க்கும் போது இல்லாத ஒன்றும் இருப்பது போல தான் தெரிகிறது இல்லையா... எல்லாம் நம் மனம் படுத்தும் பாடு...(உங்களைப் பார்த்து அந்த பேய் ஓடாமல் இருந்திருந்தா சரி:))
     

Share This Page