1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பேசும் பொம்மைகள் தொடர்ச்சி

Discussion in 'Stories in Regional Languages' started by periamma, Oct 20, 2015.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    அடுத்து அங்கு கொலு இருக்கும் தெய்வங்களின் உரையாடல் கேட்கிறது .என்னில் பாதியாக உமையை நினைக்கிறேன் .ஆனால் இங்கு அவளுக்கு முதல் படியில் இடம் கொடுத்திருக்கிறார்கள் .இதை கேட்ட விஷ்ணு பகவான் என் கால் அருகில் உட்கார்ந்து கால்களை பிடித்து கொண்டு இருக்கும் மகாலக்ஷ்மியும் முன் வரிசையில் இறுமாப்புடன் அமர்ந்து இருக்கிறாள் .இந்த கொடுமையை நான் யாரிடம் சொல்ல முடியும் என்று வருத்தப்பட்டார்..பிரம்மாவோ சரஸ்வதிக்கு என்று ஒரு நாள் ஒதுக்கி பூஜை செய்கிறார்கள் .எனக்கு இங்கு முக்கியத்துவமே இல்லை என்று ஆதங்கப்பட்டார்.இதனை கேட்ட மூன்று தேவியரும் கலகலவென்று சிரித்தார்கள் .ஒரு பத்து நாட்கள் எங்களுக்கு தரப்படும் கெளரவம் கண்டு இப்படி பொறாமைப் படுகிறீர்களே இது என்ன நியாயம் .வருடம் முழுவதும் உங்களுக்கு சேவை செய்கிறோம் .அதை நினைத்து பார்க்காமல் இப்படி பேசலாமா என்று கேள்வி கேட்டார்கள் .சரி ஏதோ சிறு பொறாமையால் இப்படி சொல்லி விட்டோம் .பொறுத்து கொள்ளுங்கள் என்று சிவா விஷ்ணு பிரம்மா தத்தம் தேவியருக்கு ஆறுதல் சொன்னார்கள் .

    அங்கு இரு வேறு காவல் தெய்வங்கள் இருந்தார்கள் .ஒருவர் நம் ஊர் கடா மீசை கருப்பசாமி கையில் அருவாளுடன் இருந்தார்.மற்றொருவர் கையில் துப்பாக்கி ஏந்திய காவலர்.துப்பாக்கி ஏந்தியவர் நம் அரிவாள் ஏந்தியவரை பார்த்து ஏளனமாக சிரித்தார்.அப்ப நம்ம சாமி அவரை பார்த்து ஏலே நான் அரிவாள் எடுத்து ஒரே போடா போட்டுருவேன் .ஜாக்கிரதையாக இருந்துக்கோ என்று சொன்னார்.அதற்கு துப்பாக்கிகாரர் உன் கையில் ஒரு அரிவாள் தான் இருக்கு .ஆனா என் துப்பாக்கியில் ஆறு குண்டுகள் இருக்கு அதனாலே நான் தான் உன்னை விட சக்தி வாய்ந்தவன் என்று சொன்னார்.அதற்கு நம் சாமி அடேய் அரிவாள் ஒன்னு தான் .ஆனா அதை பலதடவை பயன் படுத்தலாம் .ஆனா உன் துப்பாக்கி குண்டு சுட்டதும் உபயோகம் இல்லாம போயிரும் .அதனாலே எண்ணிக்கை பெரிதல்ல .அதை பயன்படுத்தும் விதமே உயர்ந்தது என்று சொல்லி சிரித்தார்.

    இப்படியாக சொல்லிக்கொண்டே போகலாம் .ஆனால் உங்களுக்கு பிடிக்குமா என்று தெரியவில்லை நண்பர்களே.இந்த கதை யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டது அல்ல . அப்படி இருந்தால் மன்னிக்கவும்
     
    sindmani, ksuji, Deepu04 and 5 others like this.
    Loading...

  2. nivsrini

    nivsrini Silver IL'ite

    Messages:
    221
    Likes Received:
    82
    Trophy Points:
    68
    Gender:
    Female
    romba arumaiyaga irundadhu. ippadiyum karpanai seddhu kollalam endru ipodhu purindadhu...
     
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Hi nivsrini Thanksma.just Dhonichu .Athanale ingu ungal anaivarudan paginthu kollalaam enru ninaithen .
     
  4. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    சுப்பர் மா கதை... அருமையான கற்பனை....
     
  5. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Super imagination and very nice attempt. Uraunadaiyil kathai ezhuthivathu kadiname. Excellent.
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி ப்ரியா
     
    1 person likes this.
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி லக்ஷ்மி
     
  8. pinky21

    pinky21 Gold IL'ite

    Messages:
    351
    Likes Received:
    403
    Trophy Points:
    123
    Gender:
    Female
    உங்க முதல் பகுதி கற்பனை ஒவ்வொரு முறை கொலுவிற்கு போகும் போதும் எனக்குத் தோணும்.. இரண்டாவது பாகம் ரொம்ப அருமை.. கிரேட் thought process மா:) கீப் ராக்கிங்
     
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி பிங்கி .சும்மா ஒரு கற்பனை
     
  10. Sun18

    Sun18 Gold IL'ite

    Messages:
    516
    Likes Received:
    648
    Trophy Points:
    188
    Gender:
    Male
    Great to see your imagination ma. Feel free to write more. Athukku thane indha site-eh irukku. By telling that, feeling grateful for the founders.
    **
    Keep writing and give us more stories ma. :)
     

Share This Page