1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பெண்ணே! நீ வாழ்க!

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Mar 7, 2011.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    நீ இன்றி என் வாழ்வில் ஒரு நாளும் கழியாது,
    என்பதனை நன்கு உணர்ந்தே தான் இருக்கிறேன்.
    இருந்தாலும் அதையொன்றும் பெரிதாகக் கருதாது,
    வழக்கம் போல் உன்னை உதாசீனம் செய்கிறேன்.

    பாட்டியாய் வாஞ்சையுடன் எனைத் தடவி
    நீ மகிழ்ந்தது நினைவுக்கு வருவதுண்டு.
    ஆயினும் அன்று உன் கைகளை உதறி,
    நான் ஓடியதும் பல நாள் நடந்ததுண்டு.

    அன்னை என்பதாலேயே எதற்கும் உன்னை,
    நச்சரித்து, அழுது அடம் செய்ததுண்டு.
    திட்டினாலும், அடித்தாலும் அம்மா என்னை,
    நீ அரவணைத்தது என்றும் நெஞ்சிலுண்டு.

    பிறந்ததிலிருந்து என்னைத் தெரியும் என்ற
    காரணமா அன்றி வேறெதாவதா அறியேன்.
    இரண்டாம் அன்னையாய் எனை வளர்த்த,
    அக்கா, உன் கனிவை நான் என்றும் மறவேன்.

    எத்தனையோ நல்ல வரன் இருக்க என்னை,
    உன் நெடும்பயணத் துணையாகக் கொண்டு,
    என் வாழ்வை மேம்படுத்துகின்ற உன்னை,
    புகழ்வதற்கு என்ன வார்த்தை என்னிடமுண்டு?

    எனக்குப் பிறந்தாலும், என்னை ஆளுகின்ற,
    இரண்டாவது பெண் எனும் பெருமை உண்டு.
    உன் சொல்லில், செய்கையில் மகிழுகின்ற,
    பாக்கியத்துக்கு இணை வேறு எது உண்டு?

    ஐஎல் அன்பர்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்
    -ஸ்ரீ
     
    Last edited: Mar 7, 2011
    Loading...

  2. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    நன்றி RGS!

    பாட்டி, அம்மா, அக்கா, மனைவி, மகள் ஆகிய அன்புசுரபிகளை நினைவு கூர்ந்தவிதம் அருமையோ அருமை.:2thumbsup:

    (வழக்கம்போல் நீ.........ளமா இருந்தாலும்:hide:)ரொம்பவும் நெகிழ்ச்சியான வரிகள் !

    இது கலாய்த்தலுக்கு மட்டும் :cheers

    (அதுசரி.....தோழி, அண்ணி/மன்னி, மைத்துனி,அத்தை, மாமி, பெரியம்மா, சித்தி, சித்திபாட்டி,அத்தைப்பாட்டி, கொள்ளுப்பாட்டி இவங்களையெல்லாம் விட்டுடீங்களே:biglaugh)
     
    Last edited: Mar 7, 2011
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your feedback AbhiSing. For whatever I had written itself, there is a complaint that it is long and only few ILites are going to read and comment I guess. If I add further about other female relationships ---- this would also add to the list of "No feedbacks received!" Right? -rgs
     
  4. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    உங்கள் அனைத்து இனிய உறவுகளையும் நீர் கவியாய் வடித்த விதம் அழகு. :thumbsup

    விஜி சொன்ன மாதிரி நெகிழ்வான வரிகள்.
     
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your nice feedback Jaya. -rgs
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நீங்க இலங்கை வானொலியில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்,
    நிகழ்ச்சிய, நெகிழ்சியா கேட்டு வளந்தவங்களோ? :)

    இப்ப நிஜமாவே கவிதைகளுக்கு பின்னூட்டங்கள் குறைந்து விட்டது உண்மை தான் ஸ்ரீ.

    நானே உங்கள் நிறைய கவிதைகளுக்கு கொடுக்கவில்லை.
    உங்கள வந்து நானு பக்தசன்மார்க ஸ்ரீல ஸ்ரீ லிஸ்ட்ல சேர்த்துட்டேன்.

    அதுனால ரெகுலரா படிக்கறதில்ல.

    பெண்கள் தினக் கவிதை அருமை.
     
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thaks for your feedback first Natpudan, after a long gap. Just for your info, I try writing on as much genres as possible and its a long time since I wrote one on spiritual side. Thanks again for your support. -rgs
     
  8. Artbrush

    Artbrush Gold IL'ite

    Messages:
    1,263
    Likes Received:
    57
    Trophy Points:
    110
    Gender:
    Female
    உங்கள் வாழ்கையோட இணைந்த பெண்களைப்பற்றிய கவிதை வரிகள்
    அற்புதம்........................ஸ்ரீ
     
  9. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your feedback Karthiga. -rgs
     
  10. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    Yeah...might be right. But as I had mentioned, I was just kidding!:bonk
     

Share This Page