1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பெண்ணே நீ பெருமைப் படு

Discussion in 'Stories in Regional Languages' started by sugamaana07, Mar 10, 2016.

  1. sugamaana07

    sugamaana07 Silver IL'ite

    Messages:
    104
    Likes Received:
    139
    Trophy Points:
    93
    Gender:
    Female
    பெண்ணே நீ பெருமைப் படு

    பெண்ணாய் பிறந்ததற்கு பெருமைப்படு...!!
    ---------------------------------------------------------------
    கவலை படவோ , கண்ணீர் விடவோ பிறக்கவில்லை பெண்ணே நீ?
    நீ உன் வீட்டின் குலவிளக்கு.... பெருமைப்படு..

    கல்யாணம் முடிந்து புக்ககத்திற்கு செல்லும் பொழுது நீ முதலில் விளக்கு ஏற்றுகிறாய் .... அது உன் பாசத்தையும், நேசத்தையும் காட்டுகிறது... குடும்ப பாரத்தை சுமக்கிறாய் அது உன் பலத்தை காட்டுகிறது... பாரம் சுமப்பவள் நீ என்றாலும் தோள் கொடுப்பவன் துணை நின்றால் நீ எதையும் விரைவில் வென்று விடலாம்... கவலையை விடு பெண்ணே....

    கிண்டல்களும், கேலியும் செய்யலாம் ஆண்கள் பெண்களைப் பற்றி... ஆனால், உண்மையில் அவள் படும் பாட்டை அவர்கள் அனுபவித்தால் தான் தெரியும் ஒரு பெண்ணின் உடல் மற்றும் மன வேதனைகள் என்னவென்று......" உனக்கு மட்டும் தாய் என்ற ஸ்தானம் இல்லை என்றால் நீ ஒரு பெண்ணாய் ஒன்றும் இல்லை... உனக்கு மதிப்பும் இல்லை " என்று வேடிக்கையாய் பலர் கூறுவதை கேட்டுள்ளேன்... மனம் துடிக்கின்றது....
    அந்தத தாயாய் அவள் உருவெடுக்க எத்தனை துன்பங்கள் என்று தெரியுமா அவர்களுக்கு? ... அறிந்தவர் மிகவும் குறைவு...

    இன்றைய திரைப்படங்கள் மற்றும் பல நிகழ்சிகளில் இது போன்று பேசுவதைக் கண்டு துடித்ததுண்டு.. ஏதோ பேச வேண்டும் என்பதற்காக பேசுவதை சற்று நிறுத்தினால் நன்று என்பது எனது எண்ணம்...

    அந்தக் காலத்தில் பெண் வீட்டில் மட்டும் இருந்துகொண்டு , கணவன் கொண்டு வரும் சம்பளத்தில் குடும்பத்தை நடத்தி வந்தாள்... ஆனால், கடந்த 25 வருடங்களாக பெண்ணின் நிலைமை முற்றிலும் மாறியுள்ளது... இது வரவேற்க தக்கதுதான் என்றாலும் சற்று வேதனையும் நிறைந்ததாய் இருக்கிறது என்பது என் கணிப்பு..

    வீட்டையும் பாராமரித்து, அலுவலகத்திலும் தன பெயரை நிலைநாட்டி, அவள் படும் துன்பங்கள் எண்ணில் அடங்காதவை....

    இருப்பினும், அவள் தன கடமைகளை ஒருங்கிணைத்து அத்துணை வேலைகளையும் திறம்பட செய்து, கணவனையும், குழந்தைகளையும் பராமரிக்கின்றாள்...

    " பெண்ணிற்கென்று ஒரு பெருமை கட்டாயம் உண்டு ...! " என நான் நம்புகின்றேன்..." நீ கஷ்டப்பட பிறந்தவள் ... " இருக்கட்டுமே? என்னால் முடியும் என்று இறைவனுக்கே புரிந்துள்ளதால்தான் என்னை பெண்ணாய் படைத்திருக்கிறான்...அதனால், நான் பெருமைக்குரியவள்..... "

    துன்பத்திலும் இன்பம் காண்பவளே பெண்..." என்பது உண்மை.... ஒரு குழந்தையை பெற்றெடுக்க அவள் படும் வேதனைகள் , வலிகள் எத்தனையோ ! ஆனால், அந்தப் பிஞ்சு முகத்தை பார்த்ததும் எல்லாம் பறந்துவிட்ட உணர்வு !! அது தாய்மைக்கே உரியது.... சத்தியம்....

    மகளாய், தாயாய், மருமகளாய், தோழியாய், சகோதரியாய், நாத்தனாராய் பல இன்பங்களையும், துன்பங்களையும் சுமந்து, பல்வேறு கட்டங்களில் பல இன்னல்களுக்கு ஆளாகி வாழ்க்கைச சக்கரத்தில் சுழன்றுதான் நானும் இங்கு வந்துள்ளேன்... இருப்பினும்,,, உறுதியாய் இன்னொரு பிறவி உண்டெனில் பெண்ணாய் பிறக்கவே வேண்டுகின்றேன்....

    பெண் வாழ்க.....

    பெண்ணின் முன்னேற்றம் எனது லட்சியம் ...

    மைதிலி ராம்ஜி
     
    Caide likes this.
    Loading...

  2. Caide

    Caide IL Hall of Fame

    Messages:
    6,460
    Likes Received:
    10,829
    Trophy Points:
    438
    Gender:
    Female

Share This Page