1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பெண்ணே எதிர்காலம் எங்கே...??

Discussion in 'Stories in Regional Languages' started by sugamaana07, Mar 16, 2016.

  1. sugamaana07

    sugamaana07 Silver IL'ite

    Messages:
    104
    Likes Received:
    139
    Trophy Points:
    93
    Gender:
    Female
    அன்பு தோழிகளே.... வணக்கம்..

    என் மனதில் சமீப காலமாக உறுத்திக் கொண்டிருக்கும் சில விஷயங்களை உங்கள் முன் ஒரு கதையாக வைத்துள்ளேன்... தங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்... மேலும்,,, தீர்வுக்கான உத்திகளும் கலந்துரையாடலாம்...

    -----------------------------------------------------------


    எதிர்காலம் எங்கே...?
    -------------------------------------
    அன்று சனிக்கிழமை..... சற்று உடம்பு சுகமில்லாததால் போன் செய்து விடுப்பு எடுத்துக்கொண்டேன்....

    "அம்மா! சூடாக ஒரு காபி மா! தலை வலிக்கிறது " நான் சொன்னதை கேட்டு கொஞ்சம் அம்மாவிற்கு கோபம் வந்தாலும் ஐந்து நிமிடங்களில் என் கையில் சூடான காபி... " தேங்க்ஸ் மா! " கூறிவிட்டு காபியை ருசித்து சாப்பிட்டேன்...

    தலைவலி சற்று குறைதாற்போல் இருந்தது.....

    பத்து நிமிடங்கள் கழித்து அங்கு வைத்திருந்த வாரப்பத்திரிகை ஒன்றைப் பிரித்தேன்... அதில் ஒரு புது எழுத்தாளர் கட்டுரை எழுதி இருந்தார்... படிக்க ஆர்வமாய் இருந்தாதால் தொடர்ந்தேன்...

    -------------------------------------------------------------
    எங்கே செல்கிறது நம் எதிர்காலம்? - கட்டுரை - புது எழுத்தாளர்.... வனிதா....
    ----------------------------------------------------------------------------------------------------------------

    இன்றைய இளைஞர்கள் மனதில் பெண்கள் பற்றிய சில தவறான கருத்துக்கள் பதிவாகி உள்ளன....

    இதற்கு பெரும்பாலான பொறுப்பு சமூக நலனில் அக்கறை இல்லாத விளம்பரதாரர்கள், வலைத்தளங்கள், மீடியாக்கள் , தொலைகாட்சிகள்.....

    எங்கோ ஒரு மூலையில் ஒரு பெண் தவறு செய்கிறாள் , அவள் வரைமுறை இல்லாத வாழ்க்கையை நடத்துகிறாள் ... அதன் பயன்பாட்டை அவளும் , அவளை சார்ந்தவர்களும் அனுபவிக்கட்டும்,,, ஆனால், அதை பகிரங்கப்படுத்தி மேலும், மேலும் அதை ஊதி பெரிசாக்கி , ஏதோ அவளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்படுகின்ற எந்த நிகழ்ச்சியும் வரவேற்க தக்கதல்ல....

    எத்தனையோ சாதனைகள் படைத்த பெண்கள் இருக்கின்றனர்,,, அவர்களின் முகம் கூட நமக்கு தெரியாத வண்ணம் பூட்டி வைக்கப்பட்டிருக்கின்றனர்.... அவர்களை எல்லாம் தேடி அவர்கள் திறமை, வாழ்க்கை வரலாற்றை சித்தரித்தால் அது போற்றுதற்குரியது.....குடும்ப பாரத்தை சுமக்கும் பெண்களைப் பற்றி பேசுங்கள், எழுதுங்கள்...குழந்தைகளை நல்ல நிலைக்கு கொண்டு வர பாடு படும் பெற்றோரை வெளி கொண்டுவாருங்கள்... நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த மகன்களைப் பெற்ற தாய், அவரின் மனைவி, பிள்ளைகளை மற்றவர்க்கு அறிமுகம் செய்யுங்கள்...

    இதை விட்டு விட்டு , மூன்று பேருடன் வாழும் பெண், நான்காமவனை தேடுபவள் என்று அவளை கதாநாயகி போல் காட்டி பெருமை சேர்க்கும் சில ஊடகங்கள் எதற்கு? என்பது என் கேள்வி...! அவளுக்கு முக்கியத்துவம் எதற்கு? கட்டுக்கோப்புடன் , பண்பாய் வாழும் பெண்மணிகள் நடுவில் இந்த மாதிரியான ஒரு பெண்ணை ஏன் நிறுத்தவேண்டும்?

    காதலித்து வீட்டை விட்டு ஓடிப்போகும் பெண்ணை சித்தரித்து காட்டுவது ஏதோ அவள் சாதனை செய்ததை நிலைநாட்டுவதுபோல் இருக்கிறது....!

    ஒரு பெண்ணின் உடை, நடை , பாவனை எல்லாமே மிகைப் படுத்தி ஒரு வரம்பில்லா பெண்ணாக அவளை வடிவமைப்பது எந்த வகையில் சரி என்று எனக்கு தெரியவில்லை...இது நியாயமா..? யாரோ ஒருத்தி அப்படி இருக்க இளைய சமுதாயத்தினர் இதுதான் பெண்மையின் லட்சணமா? என்று கேலி செய்யும் அளவிற்கு கொண்டுபோய் விட்டுள்ளது ...

    "நீங்கள் ஏன் அந்த மாதிரியான நிகழ்ச்சியை பார்கிறீர்கள் ? செய்திகளைப் படிக்கிறீர்கள் ? " என்று கேட்பது அர்த்தமற்றது .... நான் பார்பதால் பாதிக்கப் போவது நான் அல்ல..... ஒரு நல்ல மாற்றத்தை கொண்டு வர என்ன செய்யவேண்டும் என்று தான் போராடிக்கொண்டிருக்கிறேன்....

    இக்காலத்து குழந்தைகள் மனதில் தன் தாய், அக்கா, தங்கை என்று அவர்களை பெருமையோடு நினைத்துக் கொண்டிருக்கின்றனர்......அந்த நெஞ்சில் நஞ்சை கலக்காதீர்கள்... நல்லதை கூற முடியவில்லை என்றால் நிறுத்திக்கொள்ளுங்கள்...... அது எல்லோருக்கும் நன்று... ஒரு பொய்யை நூறு தடவை சொன்னால் அது மெய்யாகி விடும் என்பார்கள்.... ஜாக்கிரதை....

    ஒரு விளம்பரத்தில்,,,, வளர்ந்து கல்யாண வயதில் இருக்கும் பெண்ணை பற்றி கவலை இல்லை, அவள் யாருடன் இருக்கிறாள் என்பதில் அக்கறை இல்லை ஆனால், ஒரு தந்தைக்கு செல் போன் மீதுதான் கொள்ளை ஆசை என்பதை எவ்வளவு கீழ் தரமாக காண்பிக்கின்றனர்.... சத்தியமாக ஒரு தந்தை அப்படி பட்டவர் அல்ல..... இது தவறு என்று ஒருவர் கூட சொல்ல வில்லையா? ஏன் அதை நிறுத்தாமல் இருக்கிறீர்கள்..... நம் எதிர் காலம் எங்கே போய்கொண்டிருக்கிறது?

    வளமான இந்தியா என்று எப்பொழுது சொல்லப்போகிறோம்.... விழிப்புணர்வு ஏன் இல்லை மக்களிடம்? பெண்களே நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் உங்கள் கையில் இல்லையா? பொங்கி எழுங்கள்.... குரல் கொடுங்கள்....

    "முடிந்தால் நல்லது செய்வோம் இல்லையேல் வாயை மூடி இருப்போம் ...." ஒவ்வொருவரும் இப்படி நினைத்தால் பூனைக்கு யார் மணி கட்டுவது?

    நம் நலனில் நாம் தான் அக்கறை காட்ட வேண்டும்... இதை வலியுறுத்த கட்டாயம் குரல் தேவை...

    வனிதா ...
    --------------------------------------------------------------------------------------------------------------

    படித்து முடித்தேன்.... "அட! இதைப பற்றி நாம் என்றுமே யோசித்தது இல்லையே....ஆழமான கருத்து...வலியுறுத்தின விதமும் சரிதான்....." மனம் நினைத்தது...... விழிப்புணர்வு மக்களிடையே மறைந்து கொண்டிருக்கிறது......

    நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் என்று மனம் நினைத்தாலும் என்ன செய்யலாம் ஒன்றும் விளங்கவில்லை..... என் நண்பர்கள் இடையே இந்த கட்டுரையை காண்பித்தேன்... அவர்களும் என் என்ணத்தை ஆமோதித்தனர்.....

    எங்கள் அலுவலகம் மூலமாக ஒரு பெண் உரிமை கழகத்தை அணுகினோம்... இதை பற்றி விவாதித்தோம்.... இந்த விழிப்புணர்ச்சியை அவர்கள் கட்டாயம் மக்களிடையே கொண்டு செல்வதாய் வாக்கு கொடுத்தனர்...

    மனம் லேசானதுபோல் உணர்ந்தேன்...


    மைதிலி ராம்ஜி
     
    uma1966 likes this.
    Loading...

  2. sugamaana07

    sugamaana07 Silver IL'ite

    Messages:
    104
    Likes Received:
    139
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Please read this and post your comments and support for the benefit of womanhood....PENMAIYAI POTRUVOM......
     
  3. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    உங்கள் மனதில் தோன்றி ய உறுத்தலை பளிச் என்று தங்கள் நடை யில் அழகாக சொல்லி இருக்கிறீர்கள் . மீடியாக்களும் , சினிமாவும் பெண் என்றாலே ஒர் போகப் பொருள் போல் சி த்தரிப்பதை பார்த்து பார்த்து இந்த கால இளைஞர்கள் மத்தியில் ஓர் தவறான எண்ணம் ஏற்பட்டு விட்டது. பெண்கள் சாதனை படைக்காத துறைகளே இல்லை . அதை பற்றி யார் பேசுகிறார்கள். அடுப்பூதும் பெண்ணிற்கு படிப்பெதற்கு என்பது அந்தக் காலம் . பெண்களாகிய நாம் தான் நம் முன்னேற்றத்திற்கு குரல் கொடுக்க வேண்டும் . விவாத்திற்குறிய subject ஐ அழகாக தேர்ந்தெடுத்து பதிவு செய்து உள்ளீர்கள் . மார்ச் 8 ம் தேதி மட்டும் ஒவ்வொரு வருடமும் மகளிர் தி னம் என்று மீடியா க்கள் போட்டி போட்டுக் கொண்டு மகளிர் தின நிகழ்ச்சிகளை ஒளி பரப்புகிறது . பெண் இனத்தை தி னமும் போற்றி னால் நம் பாரத மாதா அகம் மகிழ்வாள் . நம் பாரத நாடும் உலகம் போற்றும் உத்தம நாடாக மறுமலர்ச்சி அடைந்து இருக்கும்.
     
  4. sugamaana07

    sugamaana07 Silver IL'ite

    Messages:
    104
    Likes Received:
    139
    Trophy Points:
    93
    Gender:
    Female
    நன்றி உமா....

    இக்கால இளம் பிள்ளைகள் மனதில் பெண்கள் பற்றிய தவறான எண்ணங்கள் மாற வேண்டும்.... பெண்கள் போற்றுதற் உரியர் என்பதை நாம் நிலை நாட்ட வேண்டும் ..

    தங்கள் மேலான கருத்துக்களுக்கு நன்றி...

    மைதிலி ராம்ஜி
     
    1 person likes this.
  5. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    :welcome:welcome
     

Share This Page