புறநான்னூறு-1 ஔவையாருக்கு நெல்லிக்கனி

Discussion in 'Tamil Nadu' started by jeyapushpalatha, Mar 14, 2013.

  1. jeyapushpalatha

    jeyapushpalatha Senior IL'ite

    Messages:
    57
    Likes Received:
    20
    Trophy Points:
    23
    Gender:
    Female
    ஔவையாருக்கு நெல்லிக்கனி

    ஔவையாருக்கு நெல்லிக்கனி ஈந்த அதியமானைப்
    பற்றி நாம் அறிவோம்..

    புறநானூற்று பாடல் 91 ல் அவ்வதியமானை வாழ்த்திச் சிறப்பிகிறார்.

    திணை:பாடாண் திணை
    துறை: வாழ்த்தியல்; தலவனை வாழ்த்துவது வாழ்த்தியல்..

    வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்
    களம்படக் கடந்த கழல்தொடி தடக்கை,
    ஆர்கலி நறவின், அதியர் கோமான்
    போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி!
    பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
    நீல மணிமிடற்று ஒருவன் போல
    மன்னுக, பெரும! நீயே தொன்னிலைப்
    பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
    சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,
    ஆதல் நின்னகத்து அடக்கிச்,
    சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே.


    இதன் பொருள்:
    வெற்றியுண்டாகின்ற தவறாத வாளை எடுத்துப் பகைவர் போர்க்களத்தில்
    இறக்க வென்ற, உழலுமாறுஅணிந்த வீர வாளைஉய்டைய பெரிஅ கை பொருந்திய
    ஆரவாரம் செய்யும் மதுவை ய்டைய அதியர் கோமானே!
    பகைவரைப் போர்க்களத்தில் கொல்லும் வீரச் செல்வத்தையும் பொன்னால்
    ஆன மாலையையும் பூண்ட அஞ்சியே!பெரும!
    பழைய நிலைமையைக் கொண்ட பெரிய மலைவிடரின் பழத்தை அதை பெறுவது
    அரியது என்பதையும் கருதாதுஅதனால் பெறும் பயனையும் எனக்குச் சொல்லாது
    நின் மனத்துக்குள் அடக்கிச் சாதல் நீங்க எனக்கு தந்தாய்.

    ஆதலால் நீ,பால் போன்று பிறைச்சந்திரன் நெற்றி போல, விளங்கும் திருமுடியையும்
    நீலமணி போன்ற கரிய கழுத்தையும் உடைய ஒப்பற்றவனைப் போல (சிவபெருமானப்
    போல) நிலை பெற்று வாழ்வாயாக.


    அந்நெல்லிக்கனியை உண்டவர் நெடிது வாழ்வர் என்று அறிந்தும் அதியன்
    நெல்லியை ஔவைக்கு அளித்தால் ஔவை நெகிழ்ந்து வாழ்த்துகிறார்.

    ”நீல மணிமிடற்று ஒருவன் போல
    மன்னுக”

    சாவதற்கு காரணமான விடத்தை உண்டும் அச்சிவப்பெருமான்
    நிலைத்திருந்தான்.அதுபோல் அதியமானும் சாவாதிருக்க வேண்டும்
    என்கிறார்.. ஔவையார்.

    ”ஆர்கலி நறுவின்,அதியர் கோமான்” ஆராவாரம் செய்யும் கடலினை
    போன்று மதுவினை உடைய அதியனே

    இவ்வாறு ஔவைக்கு சாகாக்கனி கொடுத்துப்
    சாகாவரம் பெற்றான்..
    ஆம் இன்றளவும் அவன் புகழ் சிறக்க வாழ்வாங்க வாழ
    பெறுகிறான்.

    புறத்திணை பற்றிய ஒரு சிறுக் குறிப்பு
    http://www.blogger.com/blogger.g?bl...editor/target=post;postID=6421762619061726941
     
    Last edited: Mar 14, 2013
  2. jeyapushpalatha

    jeyapushpalatha Senior IL'ite

    Messages:
    57
    Likes Received:
    20
    Trophy Points:
    23
    Gender:
    Female
    மிகவும் பார்த்து பார்த்து பதிவிட்டாலும் தவறு எப்படியாவது வந்துவிடுகிறது..
    தலைப்பை மாற்ற வேண்டும்..புறநானூறு என்றிருக்க வேண்டும்.
    தவறுதலாக புறநான்னூறு என்றிருக்கின்றது..
    மாற்றுவதற்கு உதவுங்கள்...
     

Share This Page