1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பிறர் குற்றத்தைப் பார்க்காத நீயே உண்மைய&

Discussion in 'Posts in Regional Languages' started by mathangikkumar, Aug 19, 2014.

  1. mathangikkumar

    mathangikkumar Platinum IL'ite

    Messages:
    1,438
    Likes Received:
    1,659
    Trophy Points:
    283
    Gender:
    Female
    [h=3]படித்ததில் பிடித்தது ...
    பார்க்கும் பார்வை சரியாக இருந்தால், காணும் காட்சி நல்லனவாக இருக்கும்...' என்றனர் மகான்கள். [/h]
    மனித மனங்களை ஆசை, கோபம், ஆணவம் ஆட்டி வைப்பது போல், பிறரிடம் குறை காணும் மனோபாவமும் சிலரை ஆட்டி வைக்கிறது. இத்தகைய குறை காணும் மனோபாவம் நீங்கினால், அவன் எல்லாருடைய அன்புக்கும், மரியாதைக்கும் உரிய மனிதன் ஆகி விடுவான். இதற்கு ஒரு கதையே இருக்கிறது...

    பூலோகத்தில், கிருஷ்ண தேவன் என்று ஒரு அரசன் ஆட்சி புரிந்து வந்தான். அவன் நற்குணங்களின் பிறப்பிடம்; எத்தகைய கெட்ட தன்மையிலும் நல்லதையே காணும் சிறப்பு குணம் கொண்டவன். இம்மன்னனின் குணங்களைப் பற்றி ஒருநாள் தேவர்களிடம் சிலாகித்து பேசினான் தேவேந்திரன்.

    இதைக் கேட்டுக் கொண்டிருந்த தேவர்களில் ஒருவன், 'இந்த தேவேந்திரன் சொல்லும் அந்த அரசனை சோதித்து பார்க்க வேண்டும்...' என்று நினைத்தான்.
    அதன்படி, கிருஷ்ணதேவன் நாட்டிற்கு வந்தவன், அரசன் வரும் வழியில், ஒரு நாயைப் போல் தன் வடிவத்தை மாற்றி, இறந்து கிடப்பது போல் படுத்திருந்தான்.

    செத்துக் கிடந்த நாயின் உடம்பில் இருந்து துர்நாற்றம் வீசியது. அந்தப் பக்கம் போன அனைவரும், நாற்றத்தை தாங்க முடியாமல், மூக்கை பொத்தியபடி சென்றனர்.

    அதேசமயம் அந்தப்பக்கம் வந்த அரசன், நாயின் துர்நாற்றத்தை பொருட்படுத்தாமல், 'இறந்துபோன இந்த நாய்க்குத்தான் எத்தனை அழகான பல்வரிசை...' என்று சொல்லி, ஆச்சரியப்பட்டான்.

    அதைக்கேட்டதும், நாயாக இருந்த தேவன், தன் சுயவடிவோடு, மன்னன் முன் தோன்றி, 'மன்னா... பிறர் குற்றத்தைப் பார்க்காத நீயே உண்மையில் நற்பண்புகள் வாய்ந்தவன்...' என்று சொல்லி பாராட்டினான்.

    அந்த மன்னன், கிருஷ்ண தேவனைப்போல, இறந்து கிடக்கும் விலங்குகளிடம் கூட, நல்லதை பார்க்கும் மன பக்குவம் நமக்கு இல்லாவிட்டாலும், பரவாயில்லை. நம்முடன் இருக்கும் சக மனிதர்களின் குற்றங்குறைகளைப் பார்க்காமல், அவர்களிடம் இருக்கும் நல்லதையே பார்க்கும் அளவிற்குப் பக்குவம் பெற முயல்வோம்.

    - பி.என். பரசுராமன்
    விதுர நீதி!: விவேகம், உயர்குடிப் பிறப்பு, புலன் கட்டுப்பாடு, கல்வியறிவு, வீரம், மிதமான பேச்சு, தான தருமம் செய்தல், நன்றியுணர்வு இந்த எட்டு பண்புகளும், மனித வாழ்க்கையை புகழ் பெறச் செய்கின்றன.
    என்.ஸ்ரீதரன்.

     
    1 person likes this.
    Loading...

  2. Laxmi

    Laxmi Administrator Staff Member Platinum IL'ite

    Messages:
    4,242
    Likes Received:
    372
    Trophy Points:
    200
    Gender:
    Female
    Re: பிறர் குற்றத்தைப் பார்க்காத நீயே உண்மை&#29

    Good Moral Story. Thanks for sharing
     
    1 person likes this.
  3. NellaiMurugan

    NellaiMurugan Silver IL'ite

    Messages:
    151
    Likes Received:
    67
    Trophy Points:
    68
    Gender:
    Male
    Re: பிறர் குற்றத்தைப் பார்க்காத நீயே உண்மை&#29

    நல்லது கெட்டது இரண்டும் சேர்ந்த கலவை தான் ஒவ்வொரு மனிதனும் !

    அழகாகக் கூறியுள்ளீர்கள் !
     
    1 person likes this.
  4. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Re: பிறர் குற்றத்தைப் பார்க்காத நீயே உண்மை&#29

    good story. nice to read.
     
    1 person likes this.
  5. kalpavriksham

    kalpavriksham Gold IL'ite

    Messages:
    884
    Likes Received:
    473
    Trophy Points:
    138
    Gender:
    Female
    Re: பிறர் குற்றத்தைப் பார்க்காத நீயே உண்மை&#29

    even i feel very strongly about this
    you need not necessarily find goodness in others, but atleast refrain from finding fault with others.

    in most of the work places people indulge only in this. sinci i have never been a part of it, i was always considered "abnormal" haha!

    it is so common in any gathering of people .

    ennamo, ippadi irukka manisha!
     
    1 person likes this.

Share This Page