1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பிரிவே நீ பிரிந்து செல்லாயோ???

Discussion in 'Regional Poetry' started by natpudan, Jun 12, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    பிரிவே நீ பிரிந்து செல்லாயோ???

    பல உறவுகள் பிரிந்து விடுகின்றன...
    பல உணர்சிகள் பிரிந்து விடுகின்றன...


    அந்த நினைவுகள் மட்டும் ஏன் பிரிவதில்லை???
    அந்த பிரிவுக்கு மட்டும் ஏன் இது புரிவதில்லை???
    அது ஏன் என்று மட்டும் எனக்குத் தெரிவதில்லை???

    அந்த உறவுகளை சரியாகப் புரிந்து கொள்ளாததால் பிரிந்து போயிற்றோ???
    அந்த உணர்சிகளை சரியாகப் புரிந்து கொள்ளாததால் பிரிந்து போயிற்றோ???

    புரிந்தது பிரிவதில்லை;
    பிரிந்தது புரிவதில்லை;
    காரணம் தெரிவதில்லை???

    பிரிவெனும் வாக்கை,
    வாழ்கை எனும் அகராதியிலிரிந்து பிரித்திட / அகற்றிட,
    ஆவன செய்வீர்.....இப்புவியில் இருந்து பிரியும் முன்னே....

    தற்காலிக சந்தோஷ வார்த்தை:

    நான் விடுமுறையில் செல்வதால் உங்களை தற்காலிகமாக பிரிந்து செல்கிறேன்,
    ஒரு நான்கு வாரங்களுக்கு. அப்பாடா போய்ட்டானா என்று பலர் பெரு மூச்சு விடுவது
    நான் அறிவேன். இந்தப் பிரிவு உங்களுக்கு மகிழ்ச்சிதரும் என்பதை நான் நன்றாகப் புரிந்து,
    வைத்திருக்கிறேன். ஆனால் இது தற்காலிகமானது தான் என்பதை நீங்கள் மறக்க வேண்டாம்.
     
    Last edited: Jun 12, 2010
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    பல கவிதைகள் புரிந்து விடுகின்றன...
    பல கட்டுரைகள் புரிந்து விடுகின்றன...
    ஆனால் நட்ஸ் கவிதை மட்டும் ஏன் எனக்கு புரிவதில்லை???
    நட்ஸ் க்கு மட்டும் ஏன் அது தெரிவதில்லை ???

    காரணம் நான் அறியவில்லை???

    தற்காலிக சந்தோஷ வார்த்தை:

    நீங்கள் விடுமுறையில் செல்வதால் உங்களை தற்காலிகமாக விட்டு விடுகிறோம்
    ஒரு நான்கு வாரங்களுக்கு. அப்பாடா என்று தாங்கள் பெரு மூச்சு விடுவது
    நான் அறிவேன். இந்தப் பிரிவு உங்களுக்கு மகிழ்ச்சிதரும் என்பதை நான் நன்றாகப் புரிந்து,
    வைத்திருக்கிறேன். ஆனால் இது தற்காலிகமானது தான் என்பதை தாங்கள் தயைக்கூர்ந்து மறக்க வேண்டாம் nats.
     
    Last edited: Jun 12, 2010
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நினைக்கவில்லை நாம் சந்திப்போம் என்று
    தெரியவில்லை நாம் பிரிவோம் என்று
    புரியவில்லை என் பிரிந்தோம் என்று
    பிரிந்து விடுவோம் என்று தெரிந்தே பழகினோம்
    மீண்டும் சந்திப்போம் என்கிற நம்பிக்கையில் .....


    பிரிவு தற்காலிகம்...
    உங்கள் குதூகல குடும்பக் கொண்டாட்டம் நிரந்தரமாய் நிலைத்திட என் வாழ்த்துக்கள் :)

    பழையதை மறப்பவன் மனிதன் அல்லன் .....
    நீங்கள் புது மனிதராய் திருந்தி திரும்பி வரும் வரை IL பக்கங்களுக்கு பங்கம் இல்லை என்பதை மறக்க மாட்டோம்......

    Deva....
    நீ மெதுவாவே வாம்மா மின்னல் .......
     
    Last edited: Jun 12, 2010
  4. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    பிரிவு மற்றோருக்கு தான் நாங்கள் சென்னை வாசிகள் சந்தோஷமாய் இருக்கிறோம் தங்களை சந்திக்க போவதை எண்ணி!
    ஏமாற்றிவிடாதீர் தோழா!
    அருமையான பிரிவு கவிதை!:thumbsup
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    பிரியா எனக்கு ஒரே ஒரு சந்தோஷம் - என்னவென்றால்?

    என்ன மாதிரி:
    புரிந்தும் புரியாமல்,
    அறிந்தும் அறியாமல்,
    தெரிந்தும் தெரியாமல்,
    படுத்தியும் படுத்தாமல்,
    எழுதியும் எழுதாமல்????

    நோ நெவெர் - எழுதி, அடிக்கடி எழுதி,
    என்ன மாதிரியே எழுத இங்க ஒரு வாரிசுன்னு சொன்னா...
    அது நீ தான் எனக்கு. வாழ்க நீ பல்லாண்டு...வளர்க நம் தமிழ் தொண்டு...
    நம்மள பார்த்தா தான் மத்தவங்களுக்கு ஒரு வேகமும், விவேகமும் பிறக்குது -
    நல்லா கவிதை எழுதணும் என்ற வேகமும், விவேகமும்...(யாமினி - விவேகம், விவேக் அல்ல).
     
    Last edited: Jun 12, 2010
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    பிரிவே நீ பிரிந்து செல்லாயோ???
    பிரிவை பிரித்துச் செல்லாயோ???
    பரிவாய் பிரிவை எதிர்நோக்கும்
    பிறரை பிரித்துச் செல்லாயோ???
    பரிவாய் ப்ரியம் எதிர்நோக்கும்
    உறவை பிரித்துச் செல்வாயோ???
    உயிரே உறவை உளம் நோக்கும்
    இதயம் பிரித்துச் செல்வாயோ???

    பிரிவே நீ பிரிந்து செல்லாயோ???
    பிரிவை பிரித்துச் செல்லாயோ???

    நாங்களும் எழுதொவோம்ல
     
  7. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    nats 'pirivu'nra varthaiya vachu neenga than kolapureenganu paatha...
    veni ka vum kolapuranga...
    2-3 thadava padicha than puriyuthu...
    naan en subject ah kuda ipadi padikala saami...

    deva ne nats-ayum minjiduva da...
    vazhthukkal...
     
  8. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    என்ன சொல்ல வரீங்க nats ..நீங்க உங்க மனைவி மற்றும் மகள்களை ....ரொம்ப நாள் பிரிவுக்கு அப்பறம் பார்க்க போறீங்க...

    அவ்ளோதானே விஷயம்...இதுக்கு ஏன்..இப்படி போட்டு குழப்புறீங்க...:spin சந்தோசமா போய்ட்டு வாங்க...

    இந்த தற்காலிக சந்தோசம் உங்களுக்கு நீங்களே சொல்லிகிறதா......திரும்ப இங்கதான் வரணும்...ஞாபகம் இருக்கட்டும்....:)

    தேவா......nats கு நச்சு nu ...பதில் கொடுதுட்ட....:thumbsup
    வேணி...உங்க fb சூப்பர்.....:thumbsup
     
  9. mithila kannan

    mithila kannan Gold IL'ite

    Messages:
    3,400
    Likes Received:
    189
    Trophy Points:
    155
    Gender:
    Female
    அந்த நினைவுகள் மட்டும் ஏன் பிரிவதில்லை???

    ரொம்பத்தான் அழ வைக்கிறீர்கள்,நண்பரே.
    உங்கள் விடுமுறை இனிதே கழிய என் வாழ்த்துக்கள்.
    பிரியமுடன்
    மிதிலா மா
     
  10. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Unmaithaan Venkatji............enakku 4 weeks time...........ungal kavithai anaithayum padichu mudichu vida........

    On a serious note, eppadi ippadiyellam think panni ezhudhareengalao ?
    Migavum nandraaga irukku padikka....
     

Share This Page