1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  3. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

பியூட்டி அண்டர்தி மூன் - பிரம்ம கமலம்

Discussion in 'Snippets of Life (Non-Fiction)' started by Thyagarajan, May 8, 2020.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    5,269
    Likes Received:
    5,675
    Trophy Points:
    445
    Gender:
    Male
    :hello:பிரம்ம கமலம் :hello:


    Google Image Result for https://i.ytimg.com/vi/Y6oi2uKAu2o/maxresdefault.jpg


    7 மே அன்று சித்ரா பௌர்ணமி. அன்று இரவு 10 மணி அளவு மலர்ந்து காலை வாடிவிட்டது இந்த பிரம்ம கமலம். நண்பர் அய்யாதுரை வீட்டில் பலர் வந்து வணங்கிச்சென்றனர்இந்த வருடத்தில் ஒரு இரவு மட்டும்
    பூத்து மாய்ந்து விடும் கமலத்தை.

    பிரம்மனின் நாபிக் கமலத்தில் இருந்து பூ தோன்றுவதுபோல தோற்றமளிப்பதால் இதற்கு பிரம்மகமலம் என பெயர்வந்ததாக கூறப்படுகிறது. மேலும், ஜப்பானியர்கள் இந்த மலரை தங்கள் அதிர்ஷ்டத்தின் வழியாகவும், பியூட்டி அண்டர்தி மூன் எனவும் அழைக்கிறார்கள். இமயமலைப் பகுதிகளில் மட்டுமே காணக்கிடைக்கும் இந்தப் பிரம்மகமலம் தற்போது தமிழகத்தில் காண முடிகிறது.

    இந்த பிரம்மகமலம் செடியில் இருக்கும் ஒரு இலையை பிடுங்கி நிலத்தில் நட்டுவைத்தாலே அது செடியாக மாறும் அதிசய திறன் கொண்டது. இலைகளே வளரும் கணுக்களுக்களாக செயல்பட்டு நிலத்தில் வேர் விட்டு வளர்கிறது. இந்தச் செடிக்கு அதிக தண்ணீர் தேவை இல்லை. காரணம் இந்தச் செடி கள்ளி வகையைச் சேர்ந்தது. குறைந்தத் தண்ணீரில் கூட அழகாக வளரும்.

    கொடியாக படரும் செடியில் பூக்கும் பூக்கள் பார்க்க நட்சத்திரம் போன்ற தோற்றம் கொண்டது. அளவில் பெரியதாக பளிச்சிடும் வெண்மை நிறத்தில் காட்சியளிக்கிறது. இதன் மணம் எட்டு ஊருக்கு வீசும் என்கிறார்கள். மேலும், அந்த மணம் ஒருவித மன அமைதியை கொடுக்குமாம்.

    Benzyl Salicylate என்ற வேதிப்பொருள் தான் பூவின் மணத்துக்குக் காரணம் என்கின்றது கூகிள்.
    இரவு நேரங்களில் பூப்பதால் மகரந்தச் சேர்க்கைக்காக அந்த மணம் உதவும். மேலும், இரவிலும் பளிச்சிடும் அதன் வெண்மை நிறம் பூச்சிகளை தன்பால் ஈர்க்க உதவுகிறது போலும்.

    பிரம்மாவுக்கு உகந்தப் பூவாக கருதப்படும் இந்த பிரம்மகமலம் பூ மிகவும் அரிதானது. வருடத்துக்கு ஒரு முறை இரவு 10 மணிக்கு பூக்கும். காலை 5 மணிக்கு முழுவதுமாக வாடி, பூ இருந்ததற்கான அடையாளங்களே இருக்காது. இந்த அதிசய பூவின் நடுவில் பார்த்தால் பிரம்மா படுத்திருப்பது போலவே இருக்கும். அதன் வாசம் மிக அருமையாக இருக்கும். சந்தனம் கலந்த பூவின் வாசம் அது. இந்தச் செடியை நட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் பூக்க ஆரம்பிக்கும்.

    எப்போதெல்லாம் இந்த பிரம்ம கமலம் பூ பூக்கிறதோ அப்போதெல்லாம் சுப காரியங்கள் நடந்துவிடும் என்பது நம்பிக்கை. அதிசயக் குணங்களை கொண்டுள்ள இந்தப் பிரம்மகமலம் செடி பார்க்க கொடி போலவும், இலைகள் பெரியதாகவும், பூக்கள் பளிச் நிறத்தில் நட்சத்திர வடிவத்தில் இருக்கிறது.

    இதை எங்கு பார்த்தாலும், ஓர் இலையை வாங்கி வந்து வீட்டில் வளருங்கள்.

    “இந்த பிரம்மகமலம் செடியை தினமும் வழிபடுகின்றேன்” என்றார் என் நண்பர்.
     

Share This Page