பித்ருதோஷம் நீக்கும் மணிகர்ணிகா அஷ்டகம&#

Discussion in 'Astrology Numerology & More!' started by Keet, Dec 11, 2013.

  1. Keet

    Keet Silver IL'ite

    Messages:
    199
    Likes Received:
    198
    Trophy Points:
    93
    Gender:
    Female
    மங்கள வடிவினளே! மணிகர்ணிகா தேவியளே!
    சங்கரனும் பாலவனும் கங்கைதனில் வாக்குதிர்க்க
    தெளிவான ஆன்மாவாய் தேகமதை ஆக்கிடவே
    ஒளிர்பவளே உன் நீரில் உள்ளத்தை வைக்கின்றோம்.

    இந்திரனும் தேவருமே விண்ணுலகில் இடம் தேட
    எந்திர மனிதர் போல் இப்புவிக்குத் திரும்பிடவே
    மாசுதனைக் களைகின்ற சக்தி நீராய் உன் வடிவம்
    வாசுதேவன் உடன் சேர வைத்திடும் மணிதேவி.

    காசியின் திருக்காட்சி கங்கையவள் கைவண்ணம்
    பேசிடவோ வார்த்தை இல்லை புகழ்தேவி மணியவளே
    முக்திக்கு ஓர் உலகை முதற்காசி எடை போட
    சக்தி பெற்ற காசிமேலே சுவர்க்கமும் புவிக்கீழே

    பரமனின் காவடியும் பாவம் களை இடமாக
    பிரமனும் போற்றிடும் மணிகர்ணீ மகத்துவத்தாய்
    கங்கைக் கரை எல்லாம் கரையிலாத் தலமாக
    இங்கே செய்பூசனைக்கும் சென்மம் சுத்தமாகிவிடும்.

    நான்முகன் தந்திட்ட வாரணாசி நாற்பாவம்
    துன்பமதும் துரத்திவிடும் தலமதுவாய் நின்றிடவே
    போகத்தின் விளைநிலமாய் சொர்க்க நகர்
    போகாத காமத்தைப் போக்கி ஓர் உணர்வு தரு.

    குழல்தாங்கி மலை எடுத்து அரவமும் அணிந்தவரும்
    விழலாய்ப் பாவம் போக்கும் கங்கா தரனும் ஒருவரே.
    மங்கள மணிகர்ணிகை தனில் நன்னீராட்டுவோரும்
    சங்கரனாய்ச் சங்கு சக்கரனாய் உருவெடுப்பவரே!

    மணிகர்ணிகா தேவியே! ஆன்மா உறைவிடமாய்
    மண்வாழ்வோர் வைப்பதுன் பாதத்திலே! பார்க்கின்றான்
    இந்திரனும் பார்த்திடுவார் உன் புகழை! கருடனாய்
    நந்தியாய் மாறுவோரை ஒளிக்கடவுள் நோக்குகிறான்.

    தேவரும் மூவருமே நாப்பாட நற்கற்பம் கடந்திடுமே!
    பாவலரும் பாத்தொடுக்க வார்த்தையில்லாப் புகழ் மகளே!
    புண்ணியம் உன்னால் சேர்ப்பவரை பரமனும் பங்கஜனும்
    எண்ணில்லா யோகத்திற்கு ஏற்றிடுவார் சத்தியமே!

    அசுவக் குதிரை வேள்விப் பயன் அளவிலா அக்கினியை
    பிசகாது வளர்த்த பலன் அருகிலே வந்திடுமே!
    ஒருமுறை மணிகர்ணிகா கதை படிக்க உன்வாழ்வும் ஒளியாகி
    திருமகளும் நான்முகனும் நேர்க்காட்சி அருள்வாரே!
     
    Loading...

  2. StrangerLady

    StrangerLady Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    855
    Trophy Points:
    188
    Gender:
    Female
    Re: பித்ருதோஷம் நீக்கும் மணிகர்ணிகா அஷ்டக&#299

    wow Keet

    Thank u so much for giving this sloka, actually my 6 yr old is predicted to be having pithru dosha, this might be really helpful
     
  3. Keet

    Keet Silver IL'ite

    Messages:
    199
    Likes Received:
    198
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Re: பித்ருதோஷம் நீக்கும் மணிகர்ணிகா அஷ்டக&

    Additional information from V*i*k*a*t*a*n

    வக்கிரக தோஷம், நாக தோஷம், கன்னி தோஷம், கால சர்ப்ப தோஷம், பித்ரு தோஷம் என்று தோஷங்களில் பல வகை உண்டு. அவற்றுள், பித்ரு தோஷம் பொல்லாதது. ஒருவருக்குச் சந்ததியே தோன்றாமல் போகவும் இந்த தோஷம் காரணமாகிவிடும்.'சத்ருவைக்கூட அருகில் வைத்துக்கொள். ஆனால், பித்ரு தோஷத்தை உடனே களையப் பார்’ என்பார்கள் பெரியோர்கள். எந்த ஒரு இல்லத்தில் பித்ருக்களின் தோஷம் சேர்ந்துள்ளதோ, அங்கே சில வாழ்க்கைத் தடைகள் தெரியத் தொடங்கும். அவசர கதியில் இயங்குகிற இந்த உலகத்தில், இதைப் பற்றி எல்லாம் பல குடும்பங்கள் கண்டுகொள்வதே இல்லை. காரணம், பணவசதி பெருகி இருப்பதுதான். சரி, இந்த பித்ரு தோஷத்துக்கு என்ன காரணம், அதற்கான நிவர்த்தி என்ன என்பது குறித்து விரிவாக அறிவோம்.
    பித்ரு தோஷமும் நிவர்த்தியும்
    ஒருவரது ஜாதகத்தில் பித்ரு தோஷ நிலைகள் உள்ளதா என்று அறிய, சூரியன், ராகு, கேதுக்களின் சேர்க்கை 1, 6, 8, 12-ம் இடங்களில் காணப்பட வேண்டும். அமாவாசை, அஷ்டமி, பிரதமை ஆகிய திதிகளில் பிறந்தவர்களுக்கு... சனி, ராகு, கேது ஆகியோர் சூரியனுடன் சேர்ந்து இருந்தாலும் பித்ரு தோஷம் ஏற்படும்.
    ஒரு குடும்பத்தில், தற்கொலை அல்லது அகால மரணம் ஏற்பட்ட பெண்களுக்கு முறையான பிதுர் கிரியை செய்யாதிருத்தல், பெண் குழந்தைகள் பூப்பெய்துவதற்கு முன்பு- பேதை வயதிலேயே வறுமையால் ஆயுளை இழத்தல், தாய்- தந்தை காலமான பிறகு அவர்களுக்கான திதி காலங்களில் அவர்களுக்குரிய பிண்ட கிரியைகள் செய்யாதிருத்தல், மூன்று வழியினருக்குப் பரம்பரை விதிப்படி திதி கொடுக்காமல் இருத்தல், சுமங்கலிகளின் சொத்தை உடன்பிறப்புகள் அபகரித்துவிட, அந்தப் பெண்களால் ஏற்படும் சாபம் ஆகிய காரணங்களால் பித்ரு தோஷத்துக்கு ஆளாக நேரிடும். மூத்தோர் சாபங்கள் தோஷமாக மாறி நம்மை வாட்டும்.

    பித்ருக்களுக்கான பூஜையும் தெய்வ பூஜையே என்று அனைவரும் உணர்தல் வேண்டும். ஒரு வீட்டில் திதி நடைபெறும் நாள் வந்தால், திதி செய்த பிறகுதான் சாமி அறையில் பூஜை செய்தல் முறை. ஒருசில சமூகத்தினர் முதலில் தெய்வ பிம்பங்களைக் கழுவி அபிஷேகித்து பூஜை நடத்திவிட்டு, அதன்பிறகு சிராத்த வழிபாடு செய்கிறார்கள். இது தவறு. 'மாதுர்-பிதுர்-தேவ தேவோ பவா’ என்பதுதான் சாஸ்திரம் காட்டும் வரிசை.
    மணிகர்ணிகா வழிபாடு...
    [​IMG]பித்ரு தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறுவற்கு பல வழிகள் சொல்லப்பட்டாலும், அவற்றுள் மணிகர்ணிகா வழிபாடு விசேஷமானது. 'கர்ம பூமி’ என்று உலகமே போற்றிப் புகழும் நம் தேசத்தில், மணிகர்ணிகா வழிபாடு மகத்தான பலனும் ஐஸ்வர்யமும் தருவதாகத் திகழ்கிறது. காசிக்குச் செல்பவர்கள் கங்கைக்கரையிலுள்ள 'மணிகர்ணிகா காட்’ என்ற தீர்த்தக் கட்டத்துக்குச் சென்று பித்ருக்களை நினைத்து வழிபட்டு வரலாம்.

    ஒருமுறை, இந்த தீர்த்தக்கட்டத்துக்கு எழுந்தருளிய ஆதிசங்கரர், அங்கே தன் தாயாருக்குத் தர்ப்பணம் செய்தார். அப்போது, தமது ஞானதிருஷ்டியால் மணிகர்ணிகாவின் பெருமையையும் சக்தியையும் அறிந்து வியந்தார். அப்போது அவர் வாக்கிலிருந்து கங்கையாகப் பிரவாகமெடுத்த அற்புத ஸ்துதியே, 'மணிகர்ணிகா அஷ்டகம்’. எவரொருவர், மணிகர்ணிகா தீர்த்தக் கரையில் அமர்ந்து பித்ரு பூஜை செய்து, இந்தத் துதியை மூன்று முறை படிக்கிறாரோ, அவர் பிரம்மனைப் போன்று மதிக்கப்படுவார்கள். மேலும், மணிகர்ணிகா தீர்த்தத்தில் இருந்து 16 மைல்கல் சுற்றளவில் வசிப்பவர்கள் பாக்கியவான்கள். அவர்களுக்குப் புண்ணியமும், புனிதமான வாழ்வும் சித்திக்கும் என்கின்றன ஞானநூல்கள்.(அதிஅற்புதமான மணிகர்ணிகா அஷ்டகத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்)
    கங்கை- மணிகர்ணிகா தீர்த்தம் ஆதிசங்கரரைக் கண்டதும், அவருடைய திருப்பாதம் தன் மேல் பட்டதே பாக்கியம் என்று கருதி, தேவதையாக எழுந்தருளி, அவரை வணங்கியதாம். அப்போது, ''பூவுலகில் சிறப்பிக்கப்பட்டவளே! இந்த இடம் மட்டுமின்றி, இன்னும் சில புண்ணிய இடங்களிலும் நீ தோன்றி, சகலமானவருக்கும் பித்ரு தோஷங்களை அகற்றி ஆசியளிப்பாயாக!’ என்று ஆதிசங்கரர் அருளியதாகச் சொல்வர். இந்த மணிகர்ணிகா தீர்த்தம் குறித்து ஒரு புராணச் சம்பவம் உண்டு.
    ஸ்ரீபார்வதிதேவியை பரமேஸ்வரருக்குத் திருமணம் செய்து வைத்த மகாவிஷ்ணு, அவர்களது தேனிலவுக்காக ஓரிடத்தைத் தேடினார். காசியின் கங்கை தீரத்தில் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கே ஒரு தீர்த்தத்தையும் சோலையையும் தனது சக்கராயுதத்தால் உண்டுபண்ணினார். அதைப் பார்க்கவந்தபோது, ஸ்ரீபார்வதி தேவி தீர்த்த நீரில் முகம் பார்த்து மணியை (ஆபரணம்) சரிசெய்தபோது, மணிகளில் ஒன்று கழன்று நீரில் விழுந்துவிட்டது. பரமேஸ்வரன் அதை எடுக்க முயற்சித்தார். அப்போது அவரது கர்ணகுண்டலம் ஒன்றும் கழன்று நீரில் விழுந்துவிட்டது. தேவியின் மணியும் ஈசனின் கர்ண மணியும் விழுந்ததால், அந்தத் தீர்த்தத்துக்கு மணிகர்ணிகா என்ற பெயர் நிலைத்தது. ஆக, இந்தத் தீர்த்தம் மகத்துவமானது.
    வழிபடும் முறை...
    தட்டில் பச்சரிசி பரப்பி வைத்து, அதில் பஞ்சமுக ருத்ராட்சமும், பொன்னால் ஆன மணி அல்லது சிவ ஆபரணம் ஏதேனும் ஒன்றை வைக்கவேண்டும். அருகில் ஸ்ரீபார்வதி- பரமேஸ்வரன் சேர்ந்திருக்கும் படத்தை அலங்கரித்து வைத்து, ஐந்து முக தீபம் மற்றும் காமாட்சி விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். அடுத்ததாக, சிவார்ச்சனை- வில்வம் சமர்ப்பித்து, 16 சிவ நாமாவளிகளையும், அம்பிகை அர்ச்சனையை 16 நாமாவளியாகவும் செய்து வணங்க வேண்டும். பானகம், நீர்மோர், தயிர்சாதம் நைவேத்தியம் செய்து, ஆரத்தி காட்டவேண்டும். பின்னர், ஆத்ம பிரதட்சிணம் செய்து மலரிட்டு, பிரசாதம் எடுத்துக்கொள்ளலாம்.
    (வழிபடுவோம்...)
    தமிழகத்தில் மணிகர்ணிகா
    காசி- கங்கைக் கரையில் உள்ளதைப் போன்று, தமிழ்நாட்டிலும் நான்கு தலங்களில் மணிகர்ணிகா தீர்த்தம் உள்ளது. இப்பிறவியில் புண்ணியம் தேடுவோர், ஒரு முறையாவது இந்தத் தலங்களைத் தரிசிக்கவேண்டும்.
    மதுரை- திருப்பூவனம் ஸ்ரீபூவனநாதர் கோயிலில் மணிகர்ணிகா - தேவி குண்டம், புஷ்கரணி உள்ளது.
    திருச்சிக்கு அருகில் உள்ள திருவெள்ளறையில், ஸ்ரீசெண்பகவல்லி உடனுறை ஸ்ரீபுண்டரீகாட்சப் பெருமாள் தலத்தில் உள்ள தீர்த்தத்துக்கு வராக மணிகர்ணிகா என்று பெயர்.
    வேதாரண்யத்தில் ஸ்ரீயாழ்பழித்தமொழியாள் உடனுறை ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்திலும் மணிகர்ணிகா தீர்த்தம் உள்ளது.
    சென்னை- திருநீர்மலையில், ஸ்ரீஅணிமாமலர் தாயார் சமேத ஸ்ரீநீர்வண்ணர் சந்நிதிக்கு எதிரில், மணிகர்ணிகா புஷ்கரிணி உள்ளது. இதுவே, தென்னகத்து விஷ்ணு கயா ஆகும்.
     
    1 person likes this.
  4. Basuradhu

    Basuradhu Silver IL'ite

    Messages:
    355
    Likes Received:
    75
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Re: பித்ருதோஷம் நீக்கும் மணிகர்ணிகா அஷ்டக&#299

    Dear Keet

    Thank you so much for your post Becoz one astrologer said my son and for my husband severe Pitru Dosha is there

    One small clarification needed daily how many times to recite and any procedure to do this
     
  5. Artii

    Artii New IL'ite

    Messages:
    16
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    Re: பித்ருதோஷம் நீக்கும் மணிகர்ணிகா அஷ்டக&#299

    Great information

    One of the astrologer said our family has pitru dosha, can you please tell what details i needto provide
     
  6. Keet

    Keet Silver IL'ite

    Messages:
    199
    Likes Received:
    198
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Re: பித்ருதோஷம் நீக்கும் மணிகர்ணிகா அஷ்டக&#299

    @basuradhu: sorry for the late reply. It was not given in the article how many times this needs to be recite.
    @Artii: dont understand ur question "can you please tell what details i needto provide"
     

Share This Page