1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பார்வை

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Mar 8, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    உங்கள் மனம்
    விரும்புவதை தான்
    உங்கள் கண்கள்
    காண்கின்றன

    அப்படி இருக்க,
    பார்க்கும் காட்சிகளில்
    நல்லவற்றை ஏன் நாம்
    எடுத்துக் கொள்ளக் கூடாது.

    தர்மர் ஏன் சிறந்தவர் எனும்
    துரியோதனனின் சந்தேகம்
    தீர்க்க அவர்களது குரு
    நகர்வலம் சென்று நாட்டில்
    எவ்வளவு நல்லவர்களும்
    எவ்வளவு கெட்டவர்களும்
    இருக்கிறார்கள் என
    அறிந்து வரச் சொன்னார்.

    வெகு நேரம் ஆன பின்
    இருவரும் திரும்பினர்
    முதலில் துரியோதனனிடம்
    கேட்ட கேள்விக்கு,
    அவரின் பதில் - நாட்டில்
    ஒருவருமே நல்லவர் இல்லை

    பிறகு, தருமரிடம் கேட்ட கேள்விக்கு,
    நாட்டில் கெட்டவர் ஒருவரும் இல்லை
    என்றும் பதில் வந்ததாம்.

    இருவரும் வலம் வந்தது ஒரே நாடுதான்.
    பார்க்கும் பார்வையில் தான் வேறுபாடு.

    நாணயத்தின் இரு பக்கங்கள் போலே
    நல்லது கேட்டது இரண்டும் இருந்தாலும்
    நல்லவனற்றையே பார்ப்போம்....
     
    Loading...

  2. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear veni,

    Edaiyum nandrena kana vizhaiyum ungal nargunam therigiradu. Idupol ellavarum kana thudangivittal idu kali kalamillamal poividum.

    Adarkku thanthirukkum upamana kadai arumaiyilum arumai. Romba nalla coordinate panniyirukkeenga Veni!


    Ganges
     
  3. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    கதை கவிதையாக உறு மாற்றும் கலை கற்ற தோழியே...

    கதையின் கருத்து, கவிதை மிக அழகாக சொன்னது.... பார்க்கும் பார்வை எப்படி மனிதனின் குணாதிசயங்களை சொல்கிறது என்ற கருத்து மிக அருமை....
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வேணி,

    கொஞ்ச நாளா,
    உங்க நல்ல, நல்ல,
    கவிதைகளைக் கண்டு, கண்டு,
    கண்களுக்கு தீயன தெரிவதில்லை.
    வெற்றி இருவருக்குமே.
     
  5. ktg

    ktg Senior IL'ite

    Messages:
    150
    Likes Received:
    6
    Trophy Points:
    23
    Gender:
    Male
    அன்புள்ள வேணி,

    உங்களுக்கு நிறைய அர்த்தமுள்ள கருத்துள்ள நிறைந்த கதைகள் தெரிந்திற்கின்றன... தெரிந்த அனைத்தையும் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

    உங்கள் கதை/கவிதை மிகவும் அற்புதம்.

    நாம் தீயவைகளை பார்த்துதான் ஆகவேண்டும் (ஆனால் அதிலிருந்து நல்லவைகளை மட்டும் மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டும்), இல்லையெனில் எது தீயதென்று அறியாவண்ணம் ஆகிவிடுமே!!!!
     
  6. Suhania

    Suhania Senior IL'ite

    Messages:
    232
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Dear Veni,
    Nallathun, Kettathun avaravar kaanbathile enbathai miga azhagaga kadhai vadivelu sonnatharku enn nandrigal pala....
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள கங்கா மா,

    உண்மைதான் அம்மா. எல்லோரும் எல்லோரிடமும் நல்லதை காணக் கண்டு கொண்டால், பிரச்சனைகள் ஏது, சண்டை ஏது.

    மிக்க நன்றி அம்மா. எனது கவிதை படித்து கருத்து சொன்னமைக்கு
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    என்ன செய்ய தோழி, இரு வரிகளில் எழுதினாலும் இதயத்தை கொள்ளை கொள்ளும் உன் கவிதைகள். அதனால்தான் நான் கவி வழி கதை சொல்லத் தொடங்கினேன்.

    நன்றி தோழி, கருத்து சொன்னமைக்கு
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    எப்போதும் போலவே நல்ல பின்னூட்டம் நண்பரே.

    எனது கவிதை கண்டு உங்கள் கண்களுக்கு தீயன தெரியவில்லையா? இல்லை ஒன்றுமே தெரிய வில்லையா??? :biglaugh:biglaugh

    இங்கு வெற்றி அனைவருக்குமே, உண்மைதான் நீங்கள் சொல்வது
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ப்ரீத்தி,

    எங்கே சென்று விட்டீர்கள் தோழி. உங்களைக் கண்டு வெகு நாட்கள் ஆகிவிட்டதே. உங்கள் கார்த்தி எப்படி இருக்கிறார்??

    எனது தந்தை எனக்கு சிறு வயது முதலே, பல கதைகள், சொல்லி, எனக்கும் அதெல்லாம் பிடித்து விட்டது தோழி. என்னால் இயன்ற வரை இயம்புகிறேன்.

    கவிதை படித்து கருத்து சொன்ன தோழிக்கு நன்றிகள் பல
     

Share This Page