1. The Great Big Must Read List : Find Interesting Book Suggestions
    Dismiss Notice
  2. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பாரதியார் கவிதைகள் ....

Discussion in 'Books & Authors in Regional Languages' started by veni_mohan75, Dec 24, 2009.

  1. reshmanoor

    reshmanoor New IL'ite

    Messages:
    41
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    hi natpudan
    மிக்க நன்றி. நிஜமாகவே நம்ப முடியவில்லை இவ்வளவு எளிமையாஹ் இர்ருக்கும் என்று நான் நினைகவேயில்லை.ரெம்ப சந்தோசமாக இருக்கு.மீண்டும் நன்றிகள் பல.i have seen ur profile but i did not expect you being a male amist of all womens here.how do you feel ?dont u feel odd here? anyway i have sent u a friend request.what do think about being my friend?
     
  2. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    என்னை கவர்ந்த மற்றொரு பாடல்

    யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
    இனிதாவது எங்கும் காணோம்
    பாமரராய். விலங்குகளாய். உலகனைத்தும்
    இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு
    நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
    வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
    தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம்
    பரவும்வகை செய்தல் வேண்டும்.

    யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்.
    வள்ளுவர்போல். இளங்கோ வைப்போல்
    பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை.
    உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை:
    ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
    வாழ்கின்றோம்: ஒருசொற் கேளீர்!
    சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
    தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!

    பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
    தமிழ்மொழியிற் பெயர்தல் வேண்டும்:
    இறவாத புகழுடைய புதுநூல்கள்
    தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்:
    மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
    சொல்வதிலோர் மகிமை இல்லை:
    திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
    அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

    உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
    வாக்கினிலே ஒளி யுண்டாகும்:
    வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
    கவிப்பெருக்கும் மேவு மாயின்
    பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
    விழிபெற்றுப் பதவி கொள்வார்:
    தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
    இங்கமரர் சிறப்புக் கண்டார்.
     
  3. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    oh my i missed it 4 these much days...

    thanks veni ka 4 this beautiful thread of our favourite Bharathi's kavithaigal...
     
  4. arunmozhikarthi

    arunmozhikarthi New IL'ite

    Messages:
    1
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    :) hai frnd,
    ipadium bharthi rasikarkal irupankalanu theriyala...
    avarutiya varthikal ovontrum arivai pati theetum vairam...
    romba santhosama iruku
     
  5. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    My contribution...Bow

    YouTube - Sentamil Nadu

    செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
    தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
    தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
    சக்தி பிறக்குது மூச்சினிலே...

    வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
    வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல
    காதல் புரியும் அரம்பையர் போல் - இளங்
    கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு...

    காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
    கண்டதோர் வையை பொருணை நதி - என
    மேவிய யாரு பலவோடத் - திரு
    மேனி செழித்த தமிழ்நாடு...

    முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று
    மொய்ம்புறக் காக்குன் தமிழ்நாடு - செல்வம்
    எத்தனையுண்டு புவிமீதே - அவை
    யாவும் படைத்த தமிழ்நாடு...

    நீலத் திரைக்கடல் ஓரத்திலே - நின்று
    நித்தம் தவன்ஜெய குமரி எல்லை - வட
    மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
    மண்டிக் கிடக்குன் தமிழ்நாடு...

    கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்
    கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
    பல்விதமாயின சாத்திரத்தின் - மனம்
    பாரெங்கும் வீசுன் தமிழ்நாடு...

    வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
    வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
    அல்லும் சிலப்பதிகாரமென்றோர் - மணி
    யாரம் படைத்த தமிழ்நாடு...

    சிங்களம் புட்பகம் சாவக - மாதிய
    தீவு பலவினுன்ஜென்றேரி - அங்கு
    தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று
    சால்புறக் கண்டவர் தாய்நாடு...

    விண்ணை இடிக்கும் தலையிமயம் - எனும்
    வேர்பையடிக்கும் திறனுடையார் - சமர்
    பண்ணிக் கலிங்க திருள்கெடுத்தார் - தமிழ்
    பார்த்திவர் நின்ற தமிழ்நாடு...

    சீன மிசிரம் யபனரகம் - இன்னும்
    தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை
    ஞானம் படைத் தொழில் வாணிபமும் - மிக
    நன்று வளர்த்த தமிழ்நாடு...
     
  6. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    One more...

    YouTube - Nirpathuve nadappathuve

    நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
    நீங்கள் எல்லாம் சொப்பனம் தானோ
    பல தோற்ற மயக்கங்களோ
    கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
    நீங்கள் எல்லாம் அர்தமாயைகளோ
    உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ...

    வானகமே இளவெயிலே மரஞ்சறிவே
    நீங்கள் எல்லாம் கானலின் நீரோ
    வெறும் காட்சி பிழைதானோ
    போனதெல்லாம் கனவினைப்போல்
    உடைந்தேழுந்தே போனதனால்
    நானும் ஓர் கனவோ
    இந்த ஞாலமும் பொய்தானோ...

    (நிற்பதுவே...)

    காலமென்றே ஒரு நினைவும்
    காட்சி என்று பல நினைவும்
    கோலமும் பொய்களோ
    அந்த குணங்களும் பொய்களோ
    காண்பதெல்லாம் மறையுமென்றால்
    மறைந்ததெல்லாம் காண்பமன்றோ
    நானும் ஓர் கனவோ
    இந்த ஞாலமும் பொய்தானோ...

    (நிற்பதுவே...)
     
  7. sathana24

    sathana24 New IL'ite

    Messages:
    19
    Likes Received:
    1
    Trophy Points:
    1
    Gender:
    Female
    பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு; தேயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்குத்;வாயுரைக்க வருகுதில்லை,வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;தூயசுடர் வானொளியே!சூறையமுதே!கண்ணமா!

    வீணையடி நீ யெனக்கு,மேவும் விரல் நானுனக்கு;

    பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;

    காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி!மாணுடைய பேரர சே! வாழ்வு நிலையே!கண்ணம்மா!

    வான மாழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;பான மடி நீ யெனக்குப் பாண்டமடி நானுனக்கு;ஞான வொளி வீசுதடி,நங்கை நின்றன் சோதிமுகம்; ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே! கண்ணமா!

    வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;பண்ணுசுதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு; எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே; கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே!கண்ணம்மா!

    வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு; பேசும்பொருள் நீ யெனக்குப் பேணுமொழி நானுனக்கு;நேசமுள்ள வான் சுடரே; நின்னழகை யே துரைப்பேன்! ஆசை மதுவே, கனியே,அள்ளு சுவையே கண்ணமா!

    காதலடி நீயெனக்கு, காந்தமடி நானுனக்கு;

    வேதமடி நீயெனக்கு, வித்தையடி நானுனக்கு;

    போதமுற்ற போதினிலே பொங்கி வருந் தீஞ்சுவையே!

    நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா!

    நல்லவுயிர் நீயெனக்கு,நாடியடி நானுனக்கு;

    செல்வமடி நீயெனக்கு,சேமநிதி நானுனக்கு;

    எல்லையற்ற பேரழகே! எங்கும்நிறை பொற்சுடரே!

    முல்லைநிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா!
     
    Karthiga likes this.
  8. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Veni,

    How I missed this thread this long...

    So sweet of you to start such a great thread..

    I love the all the songs our fellow ILites mention here..I love this poem especially a lot,

    அக்கினிக் குஞ்சொன்று...

    நின்னைச் சரணடைந்தேன் ...

    ...கொடுங்கூற்றுக் கிரைஎனப் பின் மாயும்
    பல வேடிக்கை மனிதர் போல் நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ..
     
  9. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Sathana,I too love this poem....
     
  10. MANGAIT

    MANGAIT Junior IL'ite

    Messages:
    68
    Likes Received:
    5
    Trophy Points:
    13
    Gender:
    Female
    வண்ணக்கம் தோழியரே :)

    எனது பங்களிப்பாக எனக்கு மிகவும் பிடித்த பாரதியின் கவிதை ..........இந்தியாவின் சிறப்புகளை தமது அருமையான வார்த்தைகளில் வடித்துள்ளார் மகாகவி.......


    பல்லவி
    பாரத தேசமென்று பெயர் சொல்லுவார் - மிடிப்
    பயங்கொள்ளு வார் துயர்ப்பகை வெல்லு வார்

    சரணங்கள்

    வெள்ளிப்பனி மலை மீது உலாவு வோம் - அடி
    மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்
    பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம் - எங்கள்
    பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்

    சிங்கள தீவினுகோர் பாலம் அமைப்போம்
    சேதுவை மேடுறுத்தி வீதி சமைபோம்
    வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
    மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்

    வெட்டு கனிகள் செய்து தங்கம் முதலாம்
    வேறு பலபொருளும் குடைந்தெடுப் போம்
    எட்டு திசைகளிலு சென்றிவை விற்றே
    எண்ணும் பொருள னைத்தும் கொண்டு வருவோம்

    முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே
    மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே
    நந்தி நமக்கினிய பொருள் கொநர்ந்தே
    நம்மருள் வேண்டுவது மேற்கு கரையினிலே

    சிந்து நதியின் மிசை நிலவினிலே
    சேர நன்னடிளம் பெண்களுடனே
    சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து
    தோணிக லோட்டி விளையாடி வருவோம்

    கங்கை நதிப்புறத்து கோதுமைப் பண்டம்
    காவேரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்
    சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
    சேரத்து தந்தங்கள் பரிசளி ப்போம்

    காசி நகர்புலவர் தம் உரை தான்
    காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்
    ராசபுத் தானது வீரர்களுக்கு
    நல்லியர்க் கன்னடத்து தங்கம் அளிப்போம்

    பட்டில் ஆடையும் பஞ்ச்னில் உடையும்
    panni மலைகளென வீதி குவிப்போம்
    கட்டித் திரவியங்கள் கொண்டு வரு வார்
    காசினி வணிகருக்கு அவை கொடும்போம்

    ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
    ஆளைகக் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
    ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
    உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்

    குடைகள் செய்வோம் பல படைகள் செய்வோம்
    கோணிகள் செய்வோம் இரும்பாணிகள் செய்வோம்
    நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
    ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள் செய்வோம்

    மந்திரம் கற்ப்போம் வினைத்தந்திரங் கற்ப்போம்
    வானையளப்போம் கடல் மீனையலப்ப்ம்
    சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்
    சந்தி தெருப்பெருக்கும் க்கும் சாத்திரம் கற்ப்போம்

    காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்
    கலை வளர்ப்போம் நல்ல கொள்ளர்ருளை வளர்ப்போம்
    ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம்
    உலகத் தொழில் அணைத்தும் முவந்து செய்வோம்

    சாதி இரண்டொழிய வேரில்லை என்றே
    தமிழ் மகள் சொல்லிய சொல் அமில்தேன்போம்
    நீதி நேர் நெறியிநின்று பிறார் க்கு உதவும்
    நேமையர் மேலோர் கீழவர் மற்றோர்


     

Share This Page