1. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  2. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

பாடல்களை பாடலாம், படுத்தலாம்...

Discussion in 'Online Games & Puzzles' started by natpudan, Dec 15, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    பாடல்களை பாடலாம், படுத்தலாம்...

    வாருங்கள் வந்து வாருங்கள்

    நண்பர்களே வாருங்கள் இங்கே வந்து வாருங்கள் பாடல் வரிகளை.
    பிடிச்ச வரிகளாய் இருப்பின் கோச்சுக்காதீங்க ப்ளீஸ்.
    சில வரிகளாய் இருந்தாலும் சரி முழுப் பாடலாய்,
    இருந்தாலும் சரி - வாருவதே இதன் நோக்கம்.

    நான் தொடங்கி விட்டேன்,
    வாருங்கள் வந்து வாருங்கள்.
    பாடல்களை பாடலாம், படுத்தலாம்...


    உன் சமயலறையில் நான் உப்பா, சக்கரையா?

    இல்ல தீந்து போன காஸ் சிலிண்டர்....


    உன் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்

    யார் யார் காதுல பூ சுத்தினேன்னா?


    சின்ன சின்ன ஆசை...

    என்ன இந்த செமெஸ்டர்ல பாஸ் ஆகணும்னா?
    (யாம்ஸ், ப்ரியா, ராம், வைஷ் - உங்கள சொல்லல)


    பார்த்த ஞாபகம் இல்லையோ?

    எப்டி இருக்கும் - வாங்கின கடனைக் குடுக்க துப்பிருந்தா தானே....


    நெருங்கும்போது அகப்படாமல் பறந்து போகிறாய்,
    நிழலைப் போல தொடரும் என்னை மறந்து போகிறாய்…

    அப்பவே சொன்னேன் கடன் கொடுக்காதேன்னு...


    அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே

    இப்டி பாடி உயிரை எடுப்பேன்னு தான் போய்ட்டாளோ?


    ஒரே முறை தான் உன்னோடு பேசிப் பார்த்தேன்...

    குரல் சகிக்கல....


    அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்

    ஏன் வீட்ல வாங்குற சாத்துபடிய யாரும் பாக்க கூடாதுன்னா?


    கன்னம் ரெண்டும் சுகமா - அதில் கடைசி முத்தம் சுகமா

    கொஞ்சம் பல்ல விளக்கேம்பா....விளக்கி இருந்தா இந்த டவுட் வருமா?
     
    Last edited: Dec 16, 2010
  2. vdeepab4u

    vdeepab4u Gold IL'ite

    Messages:
    1,395
    Likes Received:
    484
    Trophy Points:
    158
    Gender:
    Female
    மச்சான பார்த்தீங்களா மலைவாழை தோப்புக்குள்ளே

    அந்த வாழை தோப்புலதான் உன் புருஷன வேரயோருத்தியோட பார்த்தேன் போயி பாரு
     
  3. nightingale89

    nightingale89 Senior IL'ite

    Messages:
    224
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    நிலா அது வானத்து மேல..

    நிலா பின்ன வானத்துல மேல இல்லாம, உன் தலை மேலையா இருக்கும்.

    போற்றி பாட டி கண்ணே...

    அடச்சீ.... இப்படி கேட்டு வாங்க வெக்கமா இல்ல...
     
  4. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    என்ன இது , இந்த என் கண்ணுலேயே பாடலையே இவ்வளவு நாளா, எல்லாரும் அசத்தறீங்க,
     
  5. nimmimoorthy

    nimmimoorthy Platinum IL'ite

    Messages:
    1,776
    Likes Received:
    2,048
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நட்ஸ், சூப்பர் ஐடியா :rotfl:thumbsup

    தீபா, அய்யய்யோ :biglaugh

    இரவ பகல குளிரா வெயிலா என்னை ஒன்னும் செய்யாதடி
    ஏன் தெரியுமா நான் ஒரு எருமை .
     
    Last edited: Dec 30, 2010
  6. nightingale89

    nightingale89 Senior IL'ite

    Messages:
    224
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    செல்லமே இது இரவா பகலா

    கண்ணு தெரியலன்றதா டைரக்டா சொல்லு..

    நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்ல எனக்கு

    அது தான் நன்றி ன்னு ஒரு வார்த்தை இருக்கே... சொல்லிட்டு போவியா அத விட்டுட்டு என்னமோ..
     
  7. nightingale89

    nightingale89 Senior IL'ite

    Messages:
    224
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    ஊரு சனம் தூங்கிருச்சு..

    அப்போ நீயும் போர்த்திட்டு தூங்கு.. இத சொல்ல தான் தூங்கிற்றுந்தவள எழுப்புனியா?


    அமைதியான நதியினிலே ஓடம் ஓடும்...

    பின்ன வெள்ளம் வரும் போதா படகு விட முடியும்..
     
  8. vdeepab4u

    vdeepab4u Gold IL'ite

    Messages:
    1,395
    Likes Received:
    484
    Trophy Points:
    158
    Gender:
    Female
    வலம்புரி சங்க போல வழுக்குது உன் கழுத்து
    கழுத்து இல்ல கழுத்து இல்ல கண்ணதாசன் எழுத்து

    இப்ப தான் தெரியுது கண்ணதாசன் ஏன் அப்பவே செத்து போயிட்டர்ருன்னு
     
  9. vdeepab4u

    vdeepab4u Gold IL'ite

    Messages:
    1,395
    Likes Received:
    484
    Trophy Points:
    158
    Gender:
    Female
    மாலையில் யாரோ மனதோடு பேச

    பின்ன உன் மூஞ்சில எவன் முழிக்கிறது
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    தீபா நீண்ட நாட்கள் ஆகியும் படுத்துக் கிடந்த இந்த நூலை,
    படுத்தத் தொடங்கியதற்கு என் நன்றிகள்.

    வருக நைடிங்கேல், நிம்மி அண்ட் லதா.

    வாங்க வாங்க கலக்குவோம், நோ படுத்துவோம்.
     

Share This Page