1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பாசியாய் பசி.....

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jul 19, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    புத்தக சுமை சுமந்து
    கல்விப் பசியாற
    பள்ளிக்குச் செல்லும் சிறுவன்.
    அவன் நெஞ்சிலும் சுமை.
    இரண்டு நாள்
    பட்டினி போட்ட தன் வயிற்றை எண்ணி.
    பிசுபிசுத்த கல்விப் பசி.
    பாசியாய் உடல் பசி.

    முதலில் வயிற்றுக்குணவு
    பின் செவிக்குணர்வு

    வென்றது இயற்கையின் நியதி.
     
    Loading...

  2. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    ஐம்புலன்களுக்கும் ஆற்றல் தருவது
    வயிற்றுக்கு உணவு.. பின்னர் தான்
    செம்மொழியாயினும், வேறு எந்த
    மொழியாயினும் செவிக்கு உணவு

    பாசியாய் பசி இருக்கும் வரை அது
    படர்ந்து இருப்பது, வெறும் பளிங்கா, இல்லை வைரமா என அறிய முடியாது. நன்று உங்கள் வரிகள் யாஷிகுஷி
     
    Last edited: Jul 19, 2010
  3. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    unmaiyaana nilamai Saroj.. :thumbsup

    Class lunch hour ku munthina period la evlo interestinga class ponaalum tiffin boxla enna irukkum nu thaan yosichitu irukka thonum enaku.. daily nalla saapidra enake ippadi na 2 naal patini na ennala yugikka mudiyudhu..
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வயிற்றுப் பசி நீக்கு,
    அறிவுப் பசி எடுக்கும்,
    விடை பெறுவான் மீண்டும்,
    வயிற்றுப் பசியில் வாடாமல் இருக்க.
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    வயிறு பசியாய் இருக்கும் போது புல் கூட பூதமாய் தெரியும் என்பார்கள்...... உங்கள் வரிகள் அதை உண்மையாக்குகிறது....:):thumbsup
     
  6. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Dear Saro,

    Kavithai manathai pizhinthu vittathu. Indru pala chiruvargal nilamai ithuthaane. Vayitrukku unavalikka mudinthaal thaane arunthuvaan. appothuthaane avan arivuppasiyai patri ennuvaan. Illaavittal ?



    ganges
     
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Saroj,

    Nekizhchiyaana kavithai..manasu konjam valithadhu..
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    உணர்வுகள் உணரப் படவேண்டுமாயின், உணவு வேண்டும்.. இயற்கையின் நியதியை மாற்ற முடியாது எதனாலும்.

    உங்கள் பாசியாய் பசி, நல்ல படிப்பினை. இதை படிக்க வாய்த்தது எனக்கு கொடுப்பினை
     
    Last edited: Jul 20, 2010
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    பசி வர பத்தும் பறக்கும்....இந்த பத்து என்பது பற்று என வர வேண்டும்.....அதாவது பசி வந்தால் நாம் மற்ற காரியங்களில் வைத்திருக்கும் பற்று பறந்துவிடும் .....கண் இருட்டி முன் இருப்பது வைரமா ,வைடூரியமானு தெரியாது ...காதடைத்து வரும் ஒலி தமிழா புரியாது, அப்புறம் செம் மொழியாவது எப்படி ....எல்லாம் மாயாமாகி விடும்.
    படித்து கொடுத்த பதிலுக்கு நன்றி
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஆம்மாண்டா ... என பையன் வீட்டுகுள்ள கால் வைக்கும் போதே அம்மா இன்னைக்கு என்ன சாப்பாடுன்னு கேட்டிட்டு தான் உள்ள வருவான்.அப்படி இருக்கும் போது பசில வாடுற பிள்ளைக்கு படிப்பு ஏறுமா.மொதல்ல இருக்கிற பசிய அடக்கினா தான் அடுத்த பசி எட்டில் ஏறும்.
    படித்து கொடுத்த கருத்துக்கு நன்றி
     

Share This Page