1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பஸ்ல ரெண்டு பொம்பளைங்க

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Jul 25, 2024.

  1. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,386
    Likes Received:
    13,135
    Trophy Points:
    615
    Gender:
    Male
    பஸ்ல ரெண்டு பொம்பளைங்க
    ஒரு நாள், பஸ்ல ரெண்டு பொம்பளைங்களுக்குள்ள சண்ட.
    கண்டக்டர் போய் என்னன்னு கேட்டார்.

    ஒரு பொம்பள, இந்த சன்னல மூடுங்க இல்லன்னா நான் குளுர்ல செத்துப்போயிடுவேன்னுச்சாம்.

    இன்னொரு பொம்பள, சன்னல மூடுனா நான் மூச்சடச்சி செத்துப்போயிடுவேன்னுச்சாம்.
    கண்டக்டருக்கு என்ன செய்யறதுன்னு புரியாம பின்னாடி போனப்ப, அங்க ஒரு ஆளு சட்டையெல்லாம் கழட்டி வச்சிட்டு பீடி குடிச்சிகிட்டு இருந்தானாம்.

    அவன்கிட்ட, என்னங்க இந்த பொம்பளைங்க இப்படி சண்ட போட்டுகுதுங்க, என்ன செய்யறதுன்னு தெரியலன்னு சொன்னாராம்.
    அதுக்கு அந்த ஆளு, கொஞ்ச நேரம் சன்னலை சாத்துங்க, ஒரு பொம்பள செத்துடும், அப்புறம் கொஞ்ச நேரம் சன்னலை தெறந்து வைங்க, இன்னொரு பொம்பளையும் செத்துடும், நாம நிம்மதியா போலாம்ன்னானாம்.

    கண்டக்டருக்கு தூக்கி வாரி போட்டுச்சாம்.
    யோவ், என்னய்யா இப்படி சொல்ற!? அவங்க வீட்டுக்காரனுங்களுக்கு யாருய்யா பதில் சொல்றதுன்னாராம்.

    அதுக்கு அந்த ஆளு, கவலப்படாதீங்க, ரெண்டும் எம்பொண்டாட்டிங்கதான், நான் எதுவும் சொல்லமாட்டேன்னானாம்.

    அதே மாதிரி, இப்ப நம்ப அரசியலில் மக்கள் மனநிலையும் இருக்கு.

    நீ அவனை ஒழி, அவன் உன்னை ஒழிக்கட்டும், நாங்கள் நிம்மதியா இருப்போம்.

    சரிதானுங்களா?
     
    Loading...

Share This Page