1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பரிணாம வளர்ச்சி

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Oct 16, 2024.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,548
    Likes Received:
    10,763
    Trophy Points:
    438
    Gender:
    Female
    தாய்க்கும் மகனுக்குமான ஓர் உரையாடல்;-*
    அம்மா நான் ஒரு மரபணு விஞ்ஞானி
    நான் யு.எஸ்.சில் மனிதனின் பரிணாம வளர்ச்சியைப் பற்றிய விஞ்ஞானத்துறையில் வேலை பார்க்கிறேன். சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாடு! அவரைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா அம்மா?- வாசு.
    அவனது அம்மா புன்னகைத்தவாறே அவனது அருகில் அமர்கிறாள்.
    எனக்கு டார்வின் பற்றி தெரியும் வாசு! ஆனால் நீ தசாவதாரம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா?
    விஷ்ணுவின் பத்து அவதாரங்கள்?
    வாசு இல்லையென பதிலளிக்கிறான்.
    அப்படியென்றால் உனக்கும் Mr.டார்வினுக்கும் தெரியாத ஒன்றை இப்போது கூறுகிறேன். கவனமாகக் கேள்.என்று கூறியபடி தொடங்கினாள்.
    முதல்அவதாரம்மத்ஸ்ய மச்ச அவதாரம்.
    அதன் பொருள் மீன்.உயிரினங்கள் நீரிலேயே முதன் முதலில் தோன்றின! சரிதானே! வாசு கூடுதல் கவனத்துடன் கேட்க ஆரம்பிக்கிறான்.
    அதன் பின் வருவது
    *கூர்ம அவதாரம்* அதன் பொருள் ஆமை!
    ஏனென்றால் பரிணாம வளர்ச்சியில் உயிரினங்கள் நீரிலிருந்து நிலத்திற்கு வருகின்றன! Amphibians.எனவே ஆமை இனம் நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினங்களைக் குறிக்கிறது!
    மூன்றாவதாக வருவது *காட்டுப்பன்றி வராக அவதாரம்*
    இதுல அறிவாற்றல் அதிகம் இல்லாத காட்டு விலங்குகளைக் குறிக்கும். நீங்கள் டைனோசர் என்று கூறிடும் விலங்கைப் போல்.சரியா?"
    வாசு விரிந்த கண்களுடன் தலையை ஆட்டினான்.
    நான்காவது அவதாரம் நரசிம்ம அவதாரம்
    அது பாதி மனிதனும் பாதி விலங்குமாய், பரிணாம வளர்ச்சியில் காட்டு விலங்குகளிருந்து சற்றே மேம்பட்ட அறிவாற்றலை உடைய உயிரினத்தின் வளர்ச்சியைக் குறிப்பது!"
    ஐந்தாவது வாமன அவதாரம்.
    குற்றம் அல்லது நடுத்தரமான உண்மையில் வளர சாத்தியக்கூறுகளை உடைய உயிரினம்.ஏன் தெரியுமா?
    உண்மையில் மனிதரில் இரண்டு வகை!
    Homo Erectus ஆதி மனிதன்; Homo sapiens
    தற்கால மனிதன். பரிணாம வளர்ச்சியில் வெற்றி பெற்ற முழுமையான அறிவாற்றல் பெற்றவர்கள்."
    வாசு பிரமித்துப் போய் தன் அம்மாவின் பேச்சைக் கேட்டிருந்தான்.
    ஆறாவது அவதாரம் பரசுராமன்.
    இது கோடாலி போன்ற ஆயுதங்களைக் கையாளத் தெரிந்த, ஒரு மூர்க்கமான கோபமுடைய, வனம் மற்றும் குகைவாசி!
    ஏழாவது அவதாரம் ராமன்
    முதல் சிந்திக்கும் அறிவாற்றல் மேம்பட்ட மனித இனத்தைக் குறிப்பது!
    சமூக விதிகள், உறவுகளின் அடிப்படை ஆகியவற்றை எடுத்துக் காட்டியது அவதாரம்.
    எட்டாவது அவதாரம் பலராமர் அவதாரம்.
    உண்மையான விவசாய நலன் அறிந்த, வாழ்வில் அதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் அவதாரம்!
    உடல் பலம் கூடி மூர்க்கத்தனம் இல்லாத
    விவசாயத்தைக்
    காப்பதோடு, மல்யுத்தம் முதலியவற்றில் நிபுணராகத் திகழ்ந்தது!
    ஒன்பதாவது அவதாரம் கிருஷ்ணர்.
    நல்ல அரசனாகவும், அரசியல் தந்திரங்களில் தேர்ந்தவனாகவும், சமூகத்திற்கு காதல் வாழ்க்கையின் நெறிகளைப் போதிப்பவனாகவும் வாழ்ந்து மனிதனைச் இனம் செழித்து வாழ வகைகளைக் காட்டிய அவதாரம்.மனிதன் தன் நற்பண்புகளாலும், குணங்களாலும் அரசனாகி புகழுடன் ஆட்சி செய்து அரசியல் தந்திரங்களில் நிபுணனாகி தெய்வமாக வணங்கப்படும் நிலைக்கு உயர்வதென்பது கிருஷ்ண அவதாரமாக உள்ளது.
    "கடைசியாக
    *கல்கி அவதாரம்* உள்ளது!
    நீங்கள் உங்களது ஆராய்ச்சியில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு அற்புத சக்திகளைக் கொண்ட அவதாரம்.
    மரபணுவில் உயர்ந்த ஓர் அவதாரம்!
    வாசு. எதுவும் பேச முடியாமல் தாயைப் பார்க்கிறான்.
    "அற்புதமான தகவல் அம்மா? எப்படி இவ்வாறு நீங்கள் சிந்தித்திருக்கிறீர்கள்?"
    "ஆம் வாசு! இதுதான் உண்மை!
    *இந்தியர்கள் நம் முன்னோர் பல அற்புதமான உண்மைகளை அறிந்தே வைத்திருந்தனர்*.ஆனால் விஞ்ஞானம் என்ற பெயரிட்டு அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லத் தெரியாமல், புராணக் கதைகளாகக் கூறி வந்தனர்.
    *புராணங்கள் அர்த்தமுள்ளவை!*
    நாம் பார்க்கும் விதம்தான். எல்லாம்! புராணங்களோ, விஞ்ஞானமோ. நீங்கள் வைக்கும் பெயர்.உண்மை எல்லாம்ஒன்றே!
    *மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம அவதாரங்கள் மிருகங்களின் வெவ்வேறு நிலைகளையும் இதர அவதாரங்கள் மனித வளர்ச்சியின் வெவ்வேறு நிலைகளையும் சித்தரிக்கின்றன என்பது புரிகிறதா? இதனால்தான் தசாவதாரம்தான் டார்வின் கொள்கைக்கு முன்னோடி என்று சொல்லப்படுகிறது.
    JAYASALA 42
     
    Thyagarajan likes this.
    Loading...

Share This Page