1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பயணக் க(வி)தைகள் .....

Discussion in 'Regional Poetry' started by rajiram, Jan 8, 2011.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
  2. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female

    அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா - 7

    சிங்கம் ராஜாதான்; அதன் கொட்டாவி கூட அழகே!
    அசிங்கமாக மனிதர் முகம் போலப் போகவில்லை!

    இருபது நிமிடங்களிலேயே அந்தப் பயணம் முடிய,
    இருவரும் மீண்டும் பாதி வழியில் இறங்கினோம்!

    இன்னும் சில படங்கள் எடுக்க விழைந்ததால், நான்
    இன்னும் ஒரு முறை அங்கு சுற்றவே விழைந்தேன்.

    கரடிகள் சில உலவிய இடத்தில் நின்று, அங்கு ஒரு
    கரடி சில கம்புகளை நோட்டமிடுவதைக் கண்டேன்!

    சிலம்பாட்ட வீரனோ என்னவோ, போன பிறவியில்?
    சிலம்பாட ஒரு கம்பைத் தேடுவதுபோலத் தேடியது!

    மிக நெருக்கமாகக் கம்பிகள் இட்டதாலும், சிறுத்தை
    மிக வேகமாக உலவியதாலும், நல்ல படம் இல்லை!

    நான் மிகவும் ரசிக்கும் பறவைகளின் கூட்டமிருக்க,
    என் காமராவுக்கு நல்ல வேலை வந்தது! அங்கிருந்த

    பறவைகள் மிகவும் சுறுசுறுப்பு; நீரில் விளையாடின;
    பறந்தன; கூவி மகிழ்ந்தன; கூடிக் குலவின; அழகாக!

    ஒரே ஒரு பெலிகன் மட்டும் துறவி போல அமர்ந்து,
    ஒரே திசையை நோக்கித் தவமிருந்தது, அசையாது!

    வயதான அரசர்கள் வடக்கிருந்து நோன்பு இருப்பது,
    வந்தது ஏனோ எனது நினைவில், அந்த சமயத்தில்!

    குடுமி வைத்த வெள்ளை Egret பறவை, மீன்களைச்
    சடுதியில் பிடிக்க முயன்று, அதில் வெற்றி கண்டது!

    மாலை வேளையில், பறவைகளில் இனிய குரல்கள்
    மாலை மயக்கம் தருவது மறுக்க முடியாத உண்மை!

    தொடரும் ..........................
     
  3. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
  4. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
  5. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
  6. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
  7. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
  8. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா - 8

    இருட்டில் திரியும் இரவு ஜீவிகள் இருந்த இடத்தில்,
    இருட்டு என்றால் கும்மிருட்டு, நுழைவு வாயிலில்!

    மூச்சை அடைக்கும் துர்மணம் வீச, அங்கு உள்ளவை,
    பேச்சு மூச்சு இல்லாதது போலவே, அமைதி காத்தன!

    வேகத்திற்குப் பெயர் போன ஆமை வகைகள் இருக்க,
    வேகமாக அங்கு சென்றேன், அவற்றைப் படம் எடுக்க.

    ஆமையின் வடிவில் ஒரு கூரை அமைந்திருக்க, ஒரு
    ஆமையின் ஓட்டில், நீல நிற வண்ணம் சொட்டியிருக்க,

    கற்சிலை போல ஒரு முதலை படுத்திருக்க, அங்கேயே
    கற்சிலை நிறத்திலே ஒரு பெரிய முதலை உலவி வர,

    எங்களுக்கு என்ன கட்டுப்பாடு எனக் கேட்பது போன்று,
    தங்களுக்குள் சண்டை போட்டன, சிறு குரங்குகள் சில!

    வேலியே இல்லாது, மரத்தடியில் கூட்டமாக இருந்து,
    வெளியே உலவும் அவற்றை, பயத்துடனே பார்த்தேன்!

    வெய்யில் தாழ்ந்துவிட்டதால், நீர்யானைகள் தமக்கு
    வைத்த உணவை நாடி, நீரிலிருந்து வெளியே வந்தன.

    கரும் சட்டையை அணிந்தது போல ஒரு குரங்கு, தன்
    கரும் தேகத்தைப் பார்த்து ரசித்தபடி அமர்ந்திருந்தது!

    இருவரும் பொறுமையாக நடந்தே சுற்றியிருக்கலாம்!
    இரு வண்டிகளிலும் சென்றதே வீணாகத் தோன்றியது!

    வெளியே வரும் சமயம், குளிர்ந்த நீர் நீர்வீழ்ச்சியிலே
    வெள்ளமாகக் கொட்டியது; மகிழ்ச்சி வந்தது மனதிலே!

    இனிய நண்பர்களைக் கண்ட ஆனந்ததுடன், விரைவாக
    இனிய இல்லம் வந்து சேர்ந்து, ஆல்பமும் தயாரித்தேன்!


    உலகம் உய்ய வேண்டும்,
    ராஜி ராம்.
     
  9. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
  10. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female

Share This Page