1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பயணக் க(வி)தைகள் .....

Discussion in 'Regional Poetry' started by rajiram, Jan 8, 2011.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
  2. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female

    அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா - 5


    ஒரு கிளி கண்ணாடியில் அழகு பார்த்தது; அடுத்து
    ஒரு காட்டுக் கோழி, மிக அவசரம் போல் திரிந்தது!

    நெட்டை உருவோடு நடை பயின்று வந்தது, அங்கே
    ஒட்டகச்சிவிங்கி ஒன்று; அதன் துணை அதனருகில்!

    இரு நிறங்களும் வேறாக விளங்குவது ஆச்சரியம்!
    வரிக்குதிரை பொம்மையில், ஒரு தண்ணீர்க் குழாய்!

    வரிக்குதிரையும் நெருப்புக் கோழியும் நண்பர்களே;
    வரிக்குதிரைக்கு அருகிலேயே நெருப்புக் கோழிகள்!

    காட்டில், தன் பார்வைத் திறனால், எதிரிகள் வரவை
    நோட்டமிட்டு அறிவிக்குமாம், நெருப்புக் கோழிகள்!

    கேட்கும், நுகரும், திறன் மிக்க வரிக்குதிரைகளோ,
    கேட்டு, நுகர்ந்து, எதிரிகள் வரவை அறிவிக்குமாம்!

    'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை', என மனிதருக்குக்
    கோடி காட்டும் வகையில் இவைகள் வாழ்கின்றன!

    அங்கங்கே பாம்புப் புற்றுகள் இருந்தன; பாம்புகளும்
    அங்கே உலவுமாம்; மான்களும் கூட உலவிடுமாம்!

    அறிவிப்புப் பலகைகள் வைத்தும் கூட, பயத்தையே
    அறியாததுபோல், காதல் ஜோடிகள் காட்டினுள்ளே!

    பள்ளிப் பருவப் பிள்ளைகள் ஜோடியாக உலவினர்!
    பள்ளியிலே என்ன கூறி விடுமுறை எடுத்தனரோ?

    பசி எங்களுக்கு மெதுவாகத் தோன்றி வருத்த, எம்
    பசி ஆற்றிட, நுழைவாயில் அருகில் அமைந்த ஒரு

    உணவகத்திற்குச் சென்ற பின்பு, இரண்டு மணிக்கு,
    உலவும் சிங்கங்கள் காண, சீட்டுகள் வாங்கினோம்!

    தொடரும் .....................
     
  3. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
  4. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
  5. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
  6. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
  7. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
  8. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
  9. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female

    அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா - 6

    'Lion safari' என்று சொன்னதும், அங்கே உலவி வரும்
    Lion கள் நிறைய இருக்குமே என்று ஆனந்தித்தோம்!

    முப்பது ரூபாய் டிக்கட் வாங்கிக் கொண்டு, இருவரும்
    அப்போதே பாதுக்காப்பான வண்டியிலே ஏறினோம்!

    இருபத்தைந்து பேர்கள் சேர்ந்ததும், வண்டி புறப்பட்டு,
    இரண்டு வலிய இரும்பு வலைக் கதவுகளைக் கடந்தது!

    ஏதோ 'ஜுராசிக்' பார்க்கில் நுழைவதுபோல் தோற்றம்!
    'அதோ பாருங்கள் இரு சிங்கங்கள்!' என்றார் ஓட்டுனர்!

    விரிந்த கண்களுடன் நோக்கினால், சிங்க ராஜா ஒன்று
    இருந்தது தன் ராணியினருகில், ஆழ்ந்த உறக்கத்தில்!

    சற்றும் அசையாமல் அப்படியே கிடந்தது; அதன் பின்
    ஒற்றைக் கண்ணை, ஒரே முறை திறந்து பார்த்த பின்,

    மீண்டும் நித்திரையில் ஆழ்ந்தது! சிங்க ராணி, தனது
    நீண்ட நித்திரை கலைந்துவிடாது, நன்கு உறங்கியது!

    புகைப்படங்களை வண்டிக்குள் இருந்தே எடுத்த பின்,
    புறப்பட்ட வண்டியின் அடுத்த நிறுத்தம், மிக அருகில்!

    பாதுக்காப்பாக அமைத்த ஒரு பகுதியில், ஒரு ஜோடி;
    பாதுகாத்தது தன் இரண்டு மாதக் குட்டிகள் மூன்றை,

    தாய்ச் சிங்கம் அடுத்திருந்த பகுதியில்! அவ்வளவே!
    தாய்ச் சிங்கத்தைப் படம் எடுப்பதே, கடினமாயிற்று!

    படம் எடுக்க நான் படும் பாட்டைப் பார்த்த ஓட்டுனர்,
    படம் தான் எடுப்பதாகக் கூறி, அந்த சிங்க ஜோடியை,

    வண்டியின் கதவைத் திறந்து, வீரர் போல எடுத்தார்,
    வண்டியருகில் உறங்கும் சிங்கம் வராது என்று நம்பி!

    தொடரும் .....................
     
  10. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female

Share This Page