1. Have an Interesting Snippet to Share : Click Here
  Dismiss Notice

பத்து வயதினிலே

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Dec 20, 2020.

 1. Thyagarajan

  Thyagarajan Finest Post Winner

  Messages:
  10,136
  Likes Received:
  10,968
  Trophy Points:
  590
  Gender:
  Male
  :hello:பத்து வயதினிலே:hello:

  மஹா பெரியவா ஒரு சிறு குறிப்பு

  இவர் மிக இளம் வயதிலேயே சந்நியாசம் மேற்கோண்ட காஞ்சி சங்கர மடாதிபதியாவார்.
  10 வயதிலேயே அப்பொறுப்பிற்கு வந்தவர். நான்கு வேதம் ஆறு சாஸ்த்திரம் புராணங்களை சுயமாக கற்றுத்தேர்ந்தவர்.
  சுமார் 18 மொழிகளில் பேச எழுத படிக்கத் தெரிந்தவர். தமிழ் மொழி குறிப்பாக கல்வெட்டு மொழிகளில் இலக்கணத்தோடு விவாதிக்கும் ஆற்றல் பெற்றவர். இந்து மத வேதங்கள் உபநிடதங்கள் தழைக்க அருளியவர்.


  எண்ணற்ற வசதிகள் அருட்கொடையாளர்கள் வழங்கிய போதும் கால்நடையாகவே இந்தியா முழுவதும் மும்முறை வலம்வந்து ஒவ்வொரு 15 கிமீ அருகிலுள்ள கிராமத்தில் தங்கி பக்தி நெறி பரப்பியவர்.

  எவ்வளவு வசதிகளிருப்பினும் மாட்டுத்தொழுவத்தில் கொசுக்கடியில் படுத்துறங்கியவர்.
  எண்ணற்ற உணவுகள் வந்தும் அதைத் தவிர்த்து நெல் பொறி போன்ற ஆகாரம் அதுவும் ஒருவேளை மட்டும் உண்டு வாழ்ந்தவர்.

  எளிமையான மக்களுக்கு பக்தி நெறியே சிறந்தது என அருளிய அருட்கொடையாளர்.

  99 வருடங்கள் வாழ்ந்து 100 ஆண்டில் சில மாதங்கள் வாழ்ந்தவர்.
  அதிகப்படியான 88 சாதூர்மாஸ்யம் என சந்திர பிறையை பார்த்தவர்.(சந்யாசிகளின் வயதை கணக்கிடும் முறை)

  உலகம் முழுவதுமுள்ள இந்துக்களின் ஆன்மீக குரு. மேலும் எண்ணற்ற மனிதர்களின் சாதி மதம் கடந்த ஆதர்ஸன குரு.

  போப் ஜான் பால் 2, முகம்மது கொமேனி, தலாய் லாமா, மேல் மருவத்தூர் போன்ற ஆன்மீக பிற மத குருமார்கள் இவருடன் பேசி தொடர்பிலிருந்தார்கள்.

  இவர் சமாதி அடைந்த நேரத்தில் எண்ணற்ற முஸ்லீம்கள்/கன்யாஸ்த்ரிகள் சிந்திய கண்ணீரைப்பார்த்து இந்து மதத்தினர் கூட ஆச்சர்யபட்டார்கள்.

  Queen elizabath /canadian president முதல் உள்ளூர் அரசியல் பிரமூகர் வரை இவரிடம் தனி மதிப்பு வைத்திருந்தனர்.

  கடவுள் நம்பிக்கையற்ற M.R. ராதா, ப்ளீட்ஸ் ஆசிரியர் கரஞ்சியா, கண்ணதாசன் போன்றோரும் பின்னாளில் இவரை சந்தித்து ஆன்மீகவாதியானார்கள்.

  கலைஞர் அவர்களின் காஞ்சியிலே ஒரு பெரியவருண்டு என்ற பேச்சு இவரது உள்ளன்பை வெளிப்படித்திய கட்டுரையாகும்.முனி வாழ்க்கை வாழ்ந்தார் எனவும் பேசியுள்ளார்.

  காஞ்சி சங்கரமடத்திற்கு ஒட்டியுள்ள சிறு மசூதி தாமே மனமுவந்து வழங்க வந்தபோது அதை மறுத்து, உங்களின் பாங்கொலியில் அல்லாவிடமிருக்கிறேன் என பகர்ந்தவர்.
  ஐந்து வேளை தொழுக முஸ்லீம்களை வலியுறுத்தியவர்.

  உலகப் புகழ் வாய்ந்த கிறிஸ்தவ பாடகர் இந்துமதம் தழுவ அவரிடம் சென்ற போது "உன் மதத்தில் என்ன இல்லை என இங்கு வருகிறாய் "என வினவி இன்றளவும் அப்பாடகர் தன் கிருத்தவ மதத்திலேயே இருக்கச் செய்தவர்.
  நீதியரசர் மூ.மூ.இஸ்மாயில் அவர்களின் எண்ணற்ற சந்தேகங்களுக்கு அறிவு விளக்கமும் சிக்கலான தீர்ப்புகளில்"உள்முகமாக" உதவியவர் என அவர் வாயிலாகவே வெளிப்படுத்தியுள்ளார்.

  சுதந்திர போராட்டத்தில் தானும்கலந்து , சாத்வீகமான அவர் முறையில் மக்களை கலந்து கொள்ளச்செய்தவர்.

  ரமண பகவான் புகழ்
  வெளியுலகுகத் தெரிய
  காரணமாயிருந்த "பால் பிரண்டன் "என்ற ஐரோப்பிய பயணி ஞானம் தேடி இவரை அணுகியபோது உனக்கான குரு திருவண்ணாமலையில் இருக்கிறார் என சிஷ்யனுக்கு குருவைக்காட்டிய
  ஞான குரு.

  தன்னை நாடி இன்றளவும் வரும் எண்ணற்ற ஆத்மாக்களுக்கு அற்புதங்கள்நிகழ்த்திக்கொண்டிருப்பவர்.

  தர்க்க சாஸ்திரம் ஜோதிடம் மருத்துவம், வான சாஸ்திரம் போன்றவற்றில் அத்துறையில் வல்லுவர்களோடு உரையாடும் அளவு ஆழ்ந்த ஞானமுள்ளவர்.
  எண்ணற்ற நூல்கள் வியாக்கியானம் எழுதியவர்.

  திருப்பாவை திருவெம்பாய் திருப்பள்ளி எழுச்சி தேவாரம் திருவாசகம் திவ்விய பிரபந்தம் போன்றவை, இன்று எழுச்சியோடு கோவில்களில் பாடப்படுவதற்கு இவரது எழுச்சியூட்டலே காரணமாகும்.

  இன்றளவும் நாகப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் விளையும் முதல் சாகுபடி நாகூர் ஆண்டவருக்கே அர்ப்பணியுங்கள் என்று கூறியவர்.

  டாடாவிலிருந்து பிர்லா நாட்டுக்கோட்டையார் ஆற்காடு நவாப்கள் VGP போன்ற அனைத்து மதத்தினருக்கும் "மக்கள் சேவையே மகேசன் சேவை" என உணர்த்தி அப்பாதையில் இவர்களை திருப்பச் செய்து இழுத்து வந்தவர்.

  இன்று பிரதோஷம் போன்ற கூட்டங்கள் சேர்வதற்கு இவரே காரணம்.

  மூன்று இலட்சம் ஆலயங்களில் இன்று ஒரு வேளை பூஜையாவது நடைபெறுவதற்கு இவரே காரணம். இசைஞானி இளையராஜா இவர்மீது ஆழ்ந்த பற்று கொண்டவர்.

  விமான விபத்தில் 300 பேர் இறந்த போது கூட்டுபிரார்த்தனை என ஒன்றை ஏற்படுத்தி மோக்ஷ தீபம் என்ற முறையை ஏற்படுத்தியவர்.

  வேதாத்ரி மகரிஷி, விசிறி சாமியார், ரவிசங்கர், குருஜி தலாய் லாமா போன்றோர் இவரிடம் தனிப்பட்ட முறையில் மரியாதை வைத்திருந்தனர்.

  இப்படி சிறுவராக, இளைஞராக, மனிதராக, தனி ஒருவராக ஞானியாக அவதரித்த அற்புத மகான்
  உலகிலுள்ள அனைத்து மத நல்லுள்ளங்களாலும்
  "காஞ்சிப் பெரியவர்" "மகா பெரியவா" "நடமாடும் காமாக்ஷி" என போற்றப் படுபவரின் பெயர்
  சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்!
  இது அவர் புகழில் ஒரு பகுதியே.

  தெய்வத்தின் புகழை யார் தான் முழுவதும் உரைக்க முடியும்.
  காஞ்சி பெரியவர் அருள் மொழிகளை தெய்வத்தின் குரல் புத்தகங்களை படித்து உய்வடைக.

  நீண்ட இவ்வரிகளை பொருமையுடன் வாசித்தமைக்கு நன்றி.
   
  Loading...

Share This Page