1. Have an Interesting Snippet to Share : Click Here
  Dismiss Notice

பண்பாடு வருங்காலத்தவருக்கு வஞ்சனை செய்&#

Discussion in 'Posts in Regional Languages' started by mathangikkumar, Oct 5, 2014.

 1. mathangikkumar

  mathangikkumar Platinum IL'ite

  Messages:
  1,438
  Likes Received:
  1,659
  Trophy Points:
  283
  Gender:
  Female
  நமது பழைய சாஸ்திரங்களில் இல்லாத கலைகளோ ஸயன்ஸ்களோ மற்ற விஷயங்களோ இல்லவே இல்லை. போஜராஜன் செய்துள்ள ஸமராங்கண சூத்திரம் என்ற நூலில் பலவிதமான மிஷின்கள் செய்யும் முறைகள்கூட உள்ளன. அதில் ஆகாயவிமானத்தைப் பற்றிக்கூட வருகிறது என்றால் ஆச்சரியமாயிருக்கும்! போஜன் இந்த விமானத்தைப் பற்றிய சித்தாந்த முறையை (Theory) மட்டுமே சொல்லிவிட்டு, "நடைமுறையில் (Practical) இதைப் பண்ணும் வழியை நான் சொல்லாததால் எனக்கு அது தெரியாது என்று நினைக்க வேண்டாம்; நடைமுறையைச் சொல்லி இந்த விமானம் செய்யப்பட்டால், ஜனங்களுக்கு சௌகரியத்தை விட அசௌகரியமே அதிகமாகும் என்றே சொல்லவில்லை" என்கிறார்.

  ஆகாய விமானம், அணுசக்திக் குண்டு இவற்றையெல்லாம் நடைமுறைக்குக் கொண்டு வந்ததன் அனர்த்தத்தை நாம் உலக யுத்தத்தில் கண்கூடாகப் பார்த்து விட்டோம். அது ஒரு புறம் இருக்கட்டும்.

  போஜன் சொல்லியிருக்கிற ஆகாயவிமான 'தியரி'யைச் சில என்ஜினீயர்களுடன் சேர்த்து படித்துப் பார்த்ததில் பலூன், ஜோர்டான் என்ஜின் போன்ற ஒரு முறையை போஜன் சொல்கிறார் என்று தெரிய வந்தது.

  பழைய காலத்தில் ஒவ்வொரு கலைக்கும் ஸயன்ஸுக்கும் தனித்தனி நூல்கள் இருந்தன. இந்த நூல்கள் ஒவ்வொன்றையும் டைஜஸ்ட் மாதிரி ஒரு அத்தியாயமாகச் சுருக்கி 'பிருஹத் ஸம்ஹிதை' என்ற புஸ்தகத்தை வராஹமிஹிரர் எழுதியிருக்கிறார். கிட்டத்தட்ட 1500 வருஷங்களுக்கு முன் எழுதப்பட்ட இந்தப் புஸ்தகத்தில் தாவர சாஸ்திரம், மிருக சாஸ்திரம், பட்சி சாஸ்திரம், தாது சாஸ்திரம் இப்படி சகல விஷயங்களும் அடங்கியிருக்கின்றன.

  பழங்காலத்தவரின் என்ஜினீயரிங் ஞானம் இன்றுள்ள நிபுணர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

  இவற்றுக்கெல்லாம் ஆதார நூல்கள், சாஸ்திரங்கள் உள்ளன. ஆயிரம், பதினாயிரம் வருஷங்களாக — தலைமுறை தலைமுறையாக — ரக்ஷிக்கப்பட்டு நம் கைக்கு வந்துள்ளன. இந்த நாள்போல் அச்சுப் புஸ்தகம் போடத் தெரியாத காலங்களிலும் இவற்றை நம் முன்னோர்கள் எப்படியோ காத்து நம் வரைக்கும் தந்துவிட்டார்கள். இப்படி யுகாந்தரமாக வந்த சாஸ்திரங்களை எல்லாம் நமக்குச் சகல வசதி இருந்தும், அடுத்த தலைமுறைக்குக் காத்துத் தராமல் இருக்கிறோம். ஆயிரம், பதினாயிரம் வருஷங்களாகத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த இழையை அறுத்து விடுகிற 'பாக்கியம்' நமக்கே ஏற்பட்டிருக்கிறது.

  குருடன் ஒருவன் கையில் லாந்தருடன் போய்க் கொண்டிருந்தானாம். எதிரில் வந்த ஒருவன் 'உனக்குத்தான் கண் தெரியவில்லையே, லாந்தர் ஏன் எடுத்து வருகிறாய்?' என்று கேட்டான். அதற்குக் குருடன், 'எனக்கு கண் இல்லாவிட்டாலும் உனக்குக் கண் இருக்கிறது அல்லவா? அதற்காகத்தான் இதை எடுத்து வருகிறேன். இல்லாவிட்டால் இந்த இருட்டில் நீயே என்மேல் தடுக்கி விழுந்திருப்பாயே' என்றானாம். அதுபோலவே பழைய சாஸ்திரங்கள் நமக்குப் புரியாவிட்டாலும், எதிர்காலத்தில் யாருக்காவது புரியலாம்; பயனாகலாம் என்பதனாலாவது அவற்றை நாம் ரக்ஷித்தாக வேண்டும். "வசதியே இல்லாத காலங்களில் யுகாந்தரமாக ரக்ஷிக்கப்பட்ட சாஸ்திரங்களை நமக்கு முதல் தலைமுறையினர் எல்லா வசதியிருந்தும் காப்பாற்றாமல் அழித்து, நம்மை வஞ்சித்து விட்டார்கள்" என்று, வருங்காலத் தலைமுறையினர் நம்மைக் குற்றம் சொல்ல இடம் வைக்கலாமா?

  பழைய காலங்களில் சாஸ்திர ரக்ஷணம் அரசர்களின் பொறுப்பிலிருந்தது. இப்பொழுது ராஜாக்கள் இல்லை; ராஜ்ய, மத்ய சர்க்கார்கள்தாம் உள்ளன. அவற்றுக்கு நிம்மதியே இல்லை. ஒரு பக்கம் பாஷை சண்டை; ஒரு பக்கம் எல்லைச் சண்டை. ஏகப்பட்ட பாலிடிக்ஸ், ஊழல் இப்படிப் பல கஷ்டங்கள். அந்தக் காலத்தில் ஒரு ராஜாவுக்கும் இன்னொரு ராஜாவுக்கும் சண்டை நடந்தது என்றால், இப்பொழுது ஒரு ராஜ்ஜியத்துக்கும் இன்னொரு ராஜ்ஜியத்துக்கும் சண்டை; ஒரு வர்க்கத்துக்கும் இன்னொரு வர்க்கத்துக்கும் சண்டை; ஒரு கட்சிக்கும் இன்னொன்றுக்கும் மண்டை உடைகிறது. எனவே, சாஸ்திர ரக்ஷணத்திற்கு அரசாங்கத்தை எதிர்ப்பார்த்துப் பிரயோஜனமில்லை. 'சுற்றுப்புறத்தில் எல்லாம் ஒரே பூசல்; குடும்பத்திலும் தொல்லை' என்று நாம் தட்டிக்கழிக்கக்கூடாது. வனவிலங்களுகளைப் பாருங்கள். சிங்கம் புலியை அடிக்கிறது. புலி மானை அடிக்கிறது. இருந்தாலும், காட்டிலே சிங்கக்குட்டியும், புலிக்குட்டியும், மான் குட்டியும் வளர்ந்துகொண்டும் விளையாடிக்கொண்டும்தான் இருக்கின்றன. அப்படி இருக்க நாமும் பழக வேண்டும். எத்தனை இடையூறு இருப்பினும், நமக்கு எதிர்காலத்தினரிடம் உள்ள கடமையையும் பொறுப்பையும் உணர்ந்து பழைய சாஸ்திரங்களை ரக்ஷித்துத் தரவேண்டும்.
  (படித்ததில் பிடித்தது )
   
  Loading...

 2. mathangikkumar

  mathangikkumar Platinum IL'ite

  Messages:
  1,438
  Likes Received:
  1,659
  Trophy Points:
  283
  Gender:
  Female
  Re: பண்பாடு வருங்காலத்தவருக்கு வஞ்சனை செய&#302

  [h=3]இந்து சம்பிரதாயங்கள்[/h]

  சாப்பிடும்போது கால்கள் ஈரமாக இருக்கவேண்டும்.
  இரவு படுக்கைக்கு செல்லும்போது, ஈரமில்லாமல் இருக்கவேண்டும்.
  குளிக்கும்போது ,எடுத்தவுடன் தலைக்கு நீரை ஊற்றிக்கொள்ளக்கூடாது.
  முதலில் பாதத்தில் ஊற்றி பிறகு உடலில் விட்டுக்கொண்டு கடைசியாகத்தான் தலையில் நீரை
  விட்டுக்கொள்ளவேண்டும்.
  துடைத்துக்கொள்ளும்போது முதலில் தலையை துவட்டக்கூடாது.
  பின்பக்க முதுகைத்தான் துடைக்கவேண்டும்
  நாம் தினமும் குளிக்கும்போது , மகாலக்ஷ்மியும் அவரது அக்கா மூதேவியும் , வாசலில் காத்துகொண்டு நிற்கிறார்கள்.
  ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு நம் உடலில் வந்து அமர்வதற்கு.
  நாம் குளித்து முடித்தவுடன் யார் முதலில் வந்து அமர்வது என்று அவர்களுக்குள் ஒரு விவாதம்
  .அந்த விவாதப்படி, அக்காதான் முதலில் சென்று உட்காரவேண்டும் என்கிறபடியால், நாம் குளித்து முடித்தவுடன், தலையை துவட்டிக்கொள்ளக்கூடாது .
  அப்படி துடைத்தால், அங்கு மூதேவி வந்து அமர்கிரபடியால் நம் புத்தி வேலை செய்யாது.
  ஆகவே, முதலில் முதுகை துடைக்கவேண்டும்.
  அப்போது மூதேவி முதகில் அமர்வாள். அடுத்தது நம் முகத்தில் மகாலட்சுமி அமர்வாள்.
  நாம் சென்ற இடமெல்லாம் நமக்கு அதிக வரவேற்ப்பு கிடைக்கும்.
  முதலில் மூஞ்சியை துடைத்துகொண்டால் மூதேவி அமர்வாள்.
  நம்மை பார்த்தாலே பலருக்கு பிடிக்காது.
  இதுவே காரணமாகும்.


   
 3. kalpavriksham

  kalpavriksham Gold IL'ite

  Messages:
  884
  Likes Received:
  471
  Trophy Points:
  138
  Gender:
  Female
  Re: பண்பாடு வருங்காலத்தவருக்கு வஞ்சனை செய&#302

  ini avvaname seivom!
  puramudhugu mudhalil,mugamadhu kadaiyil!

  nanna rasichchu siriththen

  pranams
   
  1 person likes this.

Share This Page