1. Would you like to join the IL team? See open jobs!
  Dismiss Notice
 2. What can you teach someone online? Tell us here!
  Dismiss Notice
 3. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
  Dismiss Notice

படித்ததில் பிடித்த நகைச்சுவை

Discussion in 'Jokes' started by malarvizhi, Jul 20, 2010.

 1. malarvizhi

  malarvizhi New IL'ite

  Messages:
  4
  Likes Received:
  0
  Trophy Points:
  0
  Gender:
  Male
  நம்ம தலைவரின் பாராட்டு விழாவிற்குப்
  பிற மொழிக் கவிஞர்களை மட்டும்
  கூப்பிட்டு இருக்கீங்களே, ஏன்?

  அவரைப் பாராட்ட தமிழில் வார்த்தைகளே
  இல்லையாம்!


  >தஞ்சை தாமு
  ===============================
  அவர் அ.தி.மு.க காரர்னு எப்படி சொல்றே?
  குஷ்பு இட்லி வேணாங்கறாரே..!

  >சிக்ஸ்முகம்
  ===============================
  தலைவர் அறிக்கை;
  ”கட்சியில் ஒரு தொண்டரைக்கூட இழக்க நான்
  விரும்பவில்லை என்பதால்…நான் மட்டும்
  ஆளும் கட்சியில் சேர்ந்து கொள்கிறேன்..!”


  >எம்.எம்.தேவதாசன்
  ==============================
  அந்தப் போலி டாக்டரைக் கைது பண்றப்ப
  ஏன் அழுகிறார்?

  அவர் குழந்தைகள் ஸ்பெலிஷ்டா
  இருந்தவராம்..!


  >சிக்ஸ்முகம்
  =================================
  தலைவர் தொண்டர்களுக்கு தரிசனம் தரப்
  போகிறாராம்..!

  என்ன ஏற்பாடு செய்யணும்?
  தொண்டர்களைத்தான்..!

  >தே.ராஜாசிங் ஜெயக்குமார்
  ===================================
  நன்றி; ஆனந்தவிகடன் 30-6-10

   
  Loading...

 2. malarvizhi

  malarvizhi New IL'ite

  Messages:
  4
  Likes Received:
  0
  Trophy Points:
  0
  Gender:
  Male
  என்ன இது..டாக்டர் வாள், குத்தீட்டி
  எல்லாம் மாட்டியிருக்காரு…?

  அவரு ராஜபரம்பரையாம்..ஆபரேஷன்
  எல்லாம் இந்த ஆயுதங்களால்தான்
  தினம் பண்ணுவாராம்..!


  ===========================

  ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் என் ஆளு
  மலைக்கோயிலுக்கு பின்னாலேயே
  ஏறுவார்…பின்னாலேயே இறங்குவார்…!

  ஏதாவது வேண்டுதலா? ரொம்ப ஆபத்து
  ஆச்சே?

  அட நீ ஒண்ணு…நான் முன்னால போவேன்,
  அவரு பின்னாலே வந்திட்டிருப்பாரு..!


  ============================

  டாக்டர்..இருபதாம் நெம்பர் ரூம்ல
  கால் உடைஞ்சிருச்சாம்…!

  அப்படியா…எக்ஸ்ரே, ஆபரேஷன் எல்லாத்துக்கும்
  ரெடி பண்ணு…அட்வான்ஸா ஒரு ஐம்பதாயிரம்
  உடனே கட்டச் சொல்லு..க்விக்!

  டாக்டர்…நோயாளி படுத்திருந்த கட்டில் கால்
  உடைஞ்சிருச்சாம்..!


  ================================

  சென்ஸ் எடுக்கப் போறதுல உனக்கு
  பர்சனலா ஏதோ லாபம்னியே ..என்னது?

  என் பொண்ணுக்கு நல்லா வரனா
  பார்த்துட்டேனே!


  ============================

  காலை தூங்கி எழுந்ததும் நான் என்
  மனைவி முகத்தைப் பார்ப்பேன்!

  அவ்வளவு பாசமா?
  அதெல்லாமில்லை…நரிமுகத்துல விழிச்சா
  நல்லது நடக்கும்கிற நம்பிக்கைதான்!


  =============================
  (படித்ததி பிடித்தது
   
 3. mathivanee

  mathivanee New IL'ite

  Messages:
  80
  Likes Received:
  1
  Trophy Points:
  8
  Gender:
  Female
  good jokes, thanks for posting.
   
 4. malarvizhi

  malarvizhi New IL'ite

  Messages:
  4
  Likes Received:
  0
  Trophy Points:
  0
  Gender:
  Male
  மைக்ரோ கதை
  --------------------
  ஆஸ்திரேலியா நாட்டு பஞ்சவர்ணக்
  கிளியொன்றை வளர்த்தவன் திடீரென
  கம்பெனி வேலையாக ஆஸ்திரேலியா
  கிளம்பினான்.​


  தான் வளர்த்துக் கொண்டிருந்த
  கிளியைப் பார்த்து,​​ “உன்னுடைய சொந்த
  நாட்டுக்குப் போறேன்.​ உன் ஜோடிக் கிளிக்கு
  ஏதாவது தகவல் சொல்லணுமா?” என்றான்.


  “நான் அழகான கூண்டில் அடைப்பட்டிருப்பதாகச்
  சொன்னால் போதும்..”என்றது கிளி.


  ஆஸ்திரேலியா சென்றவன் வேலை முடிந்ததும்
  காட்டில் தேடி அலைந்து ஜோடிக் கிளியை
  கண்டுபிடித்து,​​ சேதியைச் சொன்னான்.​
  அதைக் கேட்டதும் ஜோடிக்கிளி மயங்கி கீழே
  விழுந்தது.


  திடுக்கிட்டவன் திரும்ப ஊருக்கு வந்து நடந்ததைச்
  சொன்னான்.​ அதைக் கேட்டு கூண்டுக் கிளியும்
  மயங்கி கீழே விழுந்தது.​ அவன் வருத்தத்துடன்
  கிளியை வெளியே வீசி எறிந்தான்.


  சட்டெனக் கிளி எழுந்து பறந்தபடி சொன்னது,​​
  “என் ஜோடி கிளியும் சாகவில்லை.​ நான்
  தப்பிக்க உன் மூலமாக வழிமுறையைச்
  சொல்லி அனுப்பியது.​ அவ்வளவுதான் நண்பா,​​
  வரட்டுமா!” என்று கூறிச் சென்றது.


  ====================================

  >அ. யாழினி பர்வதம்,
  நன்றி; தினமணி
   
 5. malarvizhi

  malarvizhi New IL'ite

  Messages:
  4
  Likes Received:
  0
  Trophy Points:
  0
  Gender:
  Male
  கபாலிக்கு ஓவரா இடம் கொடுத்துட்டோம் சார்..!
  என்னாச்சு?

  என்னை பங்காளின்னு கூப்பிடுறான்..!

  >அ.ரியாஸ்

  =================================

  நாங்கள் ஆட்சிக்கு வந்தால்…

  தலைவரே…ஆட்சியில் இருக்கிறது நம்ம
  கட்சிதான். அதை மறந்து மப்புல இப்படி
  பேசித் தொலைக்கலாமா?


  >சொக்கம்பட்டி தேவதாசன்

  ================================

  மன்னர் பண்றது நல்லா இல்லே…!
  என்ன?

  தினமும் காத்தால அந்தப்புரத்திலே வெற்றிக்
  கொடி ஏத்தறார்…!


  அ.ரியாஸ்

  ==================================

  கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து
  கொண்டிருந்தது.


  “”குற்றம் சாட்டப்பட்டவர் உங்களிடம் என்ன
  சொன்னார்” என்று வாதியைப் பார்த்துக் கேட்டார்
  வக்கீல்.


  “”ஐயையோ!​ நான் அதைச் சொல்லமாட்டேன்.​
  நல்ல மனிதர்களிடம் சொல்லக்கூடிய வார்த்தைகள்
  அல்ல அவை” என்றான் வாதி.


  வக்கீல் சொன்னார்:
  “”அப்படியானால் அதை நீதிபதியிடம் மட்டும்
  ரகசியமாகச் சொல்லுங்கள்.”


  >எஸ்.சுவாமிநாதன்
  ==================================
  (படித்ததில் பிடித்தது)
   
 6. malarvizhi

  malarvizhi New IL'ite

  Messages:
  4
  Likes Received:
  0
  Trophy Points:
  0
  Gender:
  Male
  தலைவர்கிட்டே அவருடைய பையன் சண்டை
  போட்டுக்கிட்டு இருக்கானே, சொத்து பிரிக்க
  சொல்லியா?


  இல்ல… கட்சியைப் பிரிக்கச் சொல்லி…!

  >பெ.பாலகிருஷ்ணன்

  =================================

  ஏன் எல்லா பேஷண்டையும் டாக்டர்
  அவசரப்பிரிவிலேயே அட்மிட் பண்ணச்
  சொல்றார்?


  அவருக்கு அவசரமா பணம் தேவைப்படுதாம்..!

  >அ.ரியாஸ்

  ================================
  தலைவர் பேச ஆரம்பிச்சிட்டா இடையிலே
  நிறுத்தவே மாட்டார்..!


  ஏன் அப்படி?

  நிறுத்தினா மனப்பாடம் பண்ணினது மறந்துடும்!

  >பி.பாலாஜி

  =================================

  மேடை நாடக இயக்குநரை கல்யாணம் பண்ணிக்க
  சம்மதிச்சது தப்போனு தோணுது…!


  எப்படி?

  அவர் முதலிரவுக்கு ஒத்திகை பார்க்கணும்னு
  இம்சை பண்ணறாருடி..!


  >குருவை சோலா செல்வாஷ்

  =================================
  நன்றி; குமுதம் 26-5-10
   
 7. malarvizhi

  malarvizhi New IL'ite

  Messages:
  4
  Likes Received:
  0
  Trophy Points:
  0
  Gender:
  Male
  மாமியார் ரொம்ப பொல்லாதவங்க…!

  என்ன பாட்டி, கதையை பாதியிலேயே
  நிறுத்திட்டு, ஹார்லிக்ஸ் குடிக்கறே?

  இது விளம்பர இடைவேளைடா செல்லம்…!

  >லெ.நா.சிவகுமார்

  ==============================

  என் மாமியார் ஆனாலும் ரொம்ப
  பொல்லாதவங்க…!

  நிஜமாவா?

  ஆமாம் டீ.வி.சீரியல்ல வர்ற மருமகளைக்
  -கூடத் திட்டுவாங்கன்னா பாரேன்…!

  >வி.சாரதி டேச்சு

  ===============================

  ஒரே தப்பை நீங்க ரெண்டு பேரும்
  செஞ்சிருந்தாலும், உன் அம்மா உன்னை
  விட்டுட்டு உன் அக்காவை மட்டும் ஏன்
  அடிக்கிறாங்க?

  அவ எங்க பாட்டி சாயல்ல இருக்கிறாளாம்..!

  >வெ.சீதாராமன்

  ================================

  எனக்கு அடுத்த வாரம் கல்யாணம், அவசியம்
  வந்திடுங்க…!

  உங்களுக்கு ஒரு ஆபத்துன்னா வராம
  இருப்பேனா?

  >பி.பாலாஜிகணேஷ்
  ================================

  ‘சாகும்வரை உண்ணாவிரதம்’னு சொல்லிட்டு
  ரெண்டே நாள்லே உண்ணாவிரதத்தை
  முடிச்சிக்கிட்டாரே தலைவர்?

  நிருபர்கள் கேட்டதுக்கு ‘சாகும்வரை அடிக்கடி
  இந்த மாதிரி உண்ணாவிரதம் இருப்பேன்’ னுதான்
  சொன்னாராம்!

  >சீர்காழி வி.ரேவதி
  ====================================
  (படித்ததில் பிடித்தது)
  நன்றி; கல்கி 18-7-10
   
  Last edited by a moderator: Jul 28, 2010
 8. kiruthikathir

  kiruthikathir New IL'ite

  Messages:
  41
  Likes Received:
  1
  Trophy Points:
  8
  Gender:
  Female
  hi malar.....
  super jokes.....keep it up......send more jokes plz......
   
 9. malarvizhi

  malarvizhi New IL'ite

  Messages:
  4
  Likes Received:
  0
  Trophy Points:
  0
  Gender:
  Male
  சிறந்த போலீஸ்...
  -----------------------
  சிறந்த போலீஸ் force யார் என்று
  கண்டறிய நடந்த போட்டியில், இங்கிலாந்து
  போலீஸ், ஸ்காட்லாந்து போலீஸ் மற்றும்
  நம் போலீஸ் கலந்து கொள்கிறார்கள்…


  விதிமுறை இதுதான், அனைவரையும் கிர்
  காட்டில் (சிங்கங்கள் நிறைந்த காடு) கொண்டு
  போய் விட்டு விடுவார்கள்…


  யார் யார் எவ்வளவு நேரத்தில் சிங்கத்தை
  கொண்டு வருகிறார்களோ அதை பொருத்து
  வெற்றி…


  முதலில் ஸ்காட்லாந்து யார்ட் போலீஸ்
  அரை மணி நேரத்தில் ஒரு சிங்கத்தை குண்டு
  கட்டாக கட்டி தூக்கி வந்தனர்…


  அடுத்து இங்கிலாந்து போலீசார் முக்கால் மணி
  நேரத்தில் ஒரு சிங்கத்தை இழுத்து கொண்டு
  வந்தனர்…


  ஒரு மணி நேரம் ஆகியும் நம்மவர்கள் வராததினால்
  சந்தேக பட்ட குழுவினர் காட்டுக்குள் நம் போலீசை
  தேடி போயினர்…


  அங்கே, மரத்தில் ஒரு கரடியை கட்டி வைத்து
  விட்டு நம் போலீசார் அடி பிண்ணி, சொல்லி
  கொண்டு இருந்தனர்,


  “ஹே ஒழுங்கா ஒத்துக்கோ நீ தானே சிங்கம்”
  “அடி வாங்கியே சாகாத, ஒழுங்கா நீ தான்
  சிங்கம்னு ஒத்துக்கோ.”
  ==========================
   

Share This Page