1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

படித்ததில்-பிடித்தவை ,,,,,,,,,,நீண்ட ஆயுள்??

Discussion in 'Posts in Regional Languages' started by mathangikkumar, Dec 4, 2013.

  1. mathangikkumar

    mathangikkumar Platinum IL'ite

    Messages:
    1,438
    Likes Received:
    1,659
    Trophy Points:
    283
    Gender:
    Female
    [FONT=arial, helvetica, sans-serif]எங்கேயோ எப்போதோ படித்தது இப்போது ஏன் நினைவுக்கு வந்து உங்களையும் படுத்த வேண்டும்?[/FONT]
    [FONT=arial, helvetica, sans-serif]பிரம்மா படைக்கும் தொழிலில் படு வேகமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது ஒரு கழுதையைப்படைத்தபோது என்ன நடந்தது?[/FONT]
    [FONT=arial, helvetica, sans-serif]'' நீ இனி ஒரு கழுதை. உன் வேலை சுமையை சுமப்பது, காலையிலிருந்து இரவு வரை. புல்லை தின்பாய். மூளையில்லை என்று யாரோ யாரையோ திட்டும்போது உன் பேர் தான் சொல்லுவார்கள். உனக்கு வயது ஐம்பது. [/FONT]
    [FONT=arial, helvetica, sans-serif]''ஏதோ நான் செய்த கர்மபலன் கழுதையாக பிறக்க ஒப்புக்கொள்கிறேன். ஆனால் ஐம்பது வருஷம் ரொம்ப ஜாஸ்தி. கொஞ்சம் குறைத்து இருபது வருஷமாகச் செய்யேன்.''[/FONT]
    [FONT=arial, helvetica, sans-serif]''சரி அப்படியே'' என்றார் பிரம்மா. [/FONT]
    [FONT=arial, helvetica, sans-serif]அடுத்தது ஒரு நாய். அதற்கான கட்டளை[/FONT]
    [FONT=arial, helvetica, sans-serif]'' நீ வீட்டைகாப்பாய். ரொம்ப நல்ல நண்பனாக இருப்பாய். கிடைத்தை உண்பாய். நாயே, உனக்கு கிடைக்கும் வயசு 30 வருஷம்.''[/FONT]
    [FONT=arial, helvetica, sans-serif]நாய் கழுதை பேசியதைகேட்டுக்கொண்டிருந்தது அல்லவா. எனவே. பேரம் பேசியது. [/FONT]
    [FONT=arial, helvetica, sans-serif]''சுவாமி முப்பது வருஷம் தாங்கமுடியாது. இவ்வளவு கஷ்டம் ஏன் கொடுக்கிறாய். பாதியாக குறைத்து பதினைந்தாக்கிவிடு ""[/FONT]
    [FONT=arial, helvetica, sans-serif]நாய் 15 வயசைப்பெற்றது.[/FONT]
    [FONT=arial, helvetica, sans-serif]குரங்கு சும்மா இருக்குமா. எனக்கு நீ இடும் கட்டளை கொடியது பிரம்மா. ஆட்டம் ஆடி தாவி குதித்து வேடிக்கை காட்டுகிறேன். ஆனால் இதையே இருபது வருஷம் பண்ண ரொம்ப ரொம்ப கஷ்டமாச்சே. எனக்கு அவர்களைப்போல் பாதி வயசாக பண்ணினால் ஆட்டம் எல்லாம் ஆட முடியுமே. பத்து வயசை பிரம்மா குரங்குக்கு அளித்தார்.[/FONT]
    [FONT=arial, helvetica, sans-serif]இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மனிதன் மெதுவாக பிரம்மா அருகில் வந்தான். [/FONT]
    உன்னை அறிவுள்ளவனாக படித்துள்ளேனே. இருவது வயதும் கொடுத்தேனே. எல்லா மிருகங்களையும் நீ ஆட்டிப்படைக்கலாமே. ஏன் இன்னும் இங்கேயே வட்டமிடுகிறாய். சட்டு புட்டென்று சொல்லிவிட்டு போ.
    எனக்கு கொடுத்த இருபது வயது மிகவும் குறைச்சலாக உள்ளதே. கொஞ்சம் கூட்டவேண்டும் என் வயசை.?
    ''எப்படி நீயே சொல்லேன்?''
    அந்த கழுதைக்கு குறைத்த 30 வருஷம், அதோடு நாய்க்கு தள்ளுபடி செய்த 15 வருஷம், குரங்கு வேண்டாமென்று சொன்ன 10 வருஷம் வீணாக தானே போகிறது. அவற்றை எனக்கு சேர்த்துகொடுத்தால் ஒன்றும் குறைந்து விடாதே''
    ''சரி, கொடுக்காவிட்டால் நீ நகரமாட்டாய். எனவே நீ கேட்டபடியே கொடுத்துவிட்டேன். ''
    மனிதன் வாழ்க்கை 75 வருஷம் எப்படி நடந்தது அதற்கப்புறம்?
    இருவது வருஷம் மனிதகுணம் உள்ளது (கல்யாணம் ஆகும் வரை).!!
    கல்யாணம் ஆகி முப்பது வருஷம் கழுதையாக குடும்ப சுமை யாவும் அவன் முதுகிலும் தலையிலும்!
    குழந்தை குட்டி பிறந்து வளர்ந்து வரும்போது நாயாய் 15 வருஷம் பள்ளிக்கூடம், காலேஜ், ஹாஸ்டல்,வேலை , ஆஸ்பத்திரி என்று எங்கெங்கோ அலைகிறான். கிடைத்ததை முணுமுணுக்காமல் வாலைச் சுருட்டிக்கொண்டு தின்கிறான்.
    வயதாகியபின் குரங்காக ஓரிடம் நில்லாமல் ஓயாமல் ஒழியாமல் பெண் வீடு பிள்ளை வீடு, என்று ஓடிக்கொண்டு அவர்கள் சொல்படி ஆடிக்கொண்டு பேரன் பேத்திக்கு வேடிக்கை காட்டிக்கொண்டு காலம் ஓட்டுகிறான்.
    இப்படி நடக்கிறதோ பல மனிதர்களுக்கு, அவர்கள் கேட்ட நீண்ட ஆயுசு பிரகாரம் என்று எனக்கு புரியவில்லை!!!!.


     
    Loading...

Share This Page