1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

படமும் கவிதையும் - Picture & Poetry

Discussion in 'Regional Poetry' started by jskls, Jun 15, 2016.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    இதழ் விரிந்து சிரிக்கும் பூவை போல் குழந்தை பவழ இதழ் விரித்து சிரித்ததோ .இது குழந்தை பருவம்
     
  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @PavithraS இது மனக் குமுறல்
     
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @PavithraS இது முதுமை பருவம்
     
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    அன்னையே தமிழ் அன்னையே
    நீ பிறந்த மண்ணில்
    உன்னை மறந்து போனோம்
    கடல் கடந்து வான் கடந்து
    நீ கால் பதித்த மண்ணில்
    மலர்ப் பாதை அமைத்து
    அரியாசனத்தில் அமர்த்தும்
    அன்பினை கண்டு
    மனம் விம்முகிறது பெருமிதத்தால்
    கண்கள் நிறைகிறது ஆனந்த கண்ணீரால்
     
    kaniths, jskls and PavithraS like this.
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பெரியம்மா-தாங்கள் பதிந்த ரோஜாவிற்கான என் பதிவுகளை மிகவும் இரசித்துப் படித்திருக்கிறீர்கள் என்பதை உணர முடிகின்றது. அழகான பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி !

    தமிழன்னை என்றும் தாழாள். சொந்த மண்ணிலே வேரூன்றிய தனது பிள்ளைகளோடு,திரைகடல் ஓடியும் திரவியம் தேடியும் வாழும் மற்றக் குழந்தைகளின் மனதிலும் என்றும் நீங்காமல் ஆட்சி செய்வாள். அதற்கான முயற்சியை அவரவர் சக்திக்கேற்ற வகையில் செய்து கொண்டே இருப்போம். ரோஜாவின் வாசத்தை யாராலும் மூடி மறைக்கவோ,தடுக்கவோ இயலாது. ஒப்பற்ற ரோஜாவாம் தமிழ்மொழியின் வாசமும் தடையின்றி எத்திக்கும் பரவியிருக்கிறது,இனியும் தமிழ் மணக்கும் என்றே நம்புவோம்.
     
    periamma and anupartha like this.
  6. anupartha

    anupartha Gold IL'ite

    Messages:
    220
    Likes Received:
    975
    Trophy Points:
    190
    Gender:
    Female
    Thanks for the tag periamma. I would have otherwise missed this beautiful picture. But kavidhaithaan sariya vara matangardhu :). Still I have tried. A bit dry..words fail me in describing the beaut of this image.

    வடியும் பனித்துளியின் பாரம் தாங்காமல்
    தன் இதழ்களையே இழந்தாலும்
    ரோஜா மலர் பனித்துளித்தனை
    ஏதிர்நோக்கி தினமும் மலர்கிறது
    தன இழப்பை அறிந்தே அதனுடன்
    உறவு கொள்கிறது
    மதி மயக்கும் தன் வாசத்திற்கு
    அம் மலர் கொடுக்கும் விலையதுவாம்
    மண்ணிலே வீழ்ந்தாலும்
    மலராக மரத்திலே இருந்தாலும்
    மனம் கிறங்கும் வாசம் தன்னை விடுவதில்லை ரோஜா.
    தன்னை வீழ்த்தும் பனித்துளியை
    மணமாய் மாற்றி வெற்றி கொள்ளும்
    ரோஜா, மலர்களின் ராணியன்றோ!
     
    kaniths, jskls, PavithraS and 2 others like this.
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    நீ வரப் பூத்து
    நீங்கிட வாடிடுவாள்
    அன்னையும். பாவம்!

    மலர்வதுவும்
    உதிர்வதுவுமாக
    பல பேர் வாழ்க்கை!

    மலர்ந்திடுவாள்
    ஈன்று புறந் தந்தாளும் ,
    சேயும் மிளிர!

    கற்றவை எல்லாம்
    காணாது போகும் தான்,
    அன்னையின் முன்னே!

    மலர்ப்பூம்பாதம்
    என மொழிந்தே ஒற்றி
    மகிழ்வாள் பாவம்!

    அத்தனை பேரும்
    அருகில். ஆனால் அவள்
    அன்றும் தனியே!

    பூவால் அர்ச்சிக்க,
    தேனில் முழுக்காட்டவும்
    தகுந்தவள் தான்!

    என்றைக்கோ பூத்து
    என்றைக்கும் வாடாததை
    எப்போதும் தேர்வோம்!

    பட்டுச் சிறகு
    ஒவ்வொன்றாய் உதிர்ந்திடும்
    சேய்கள் பிரிய!

    பாலை காணாது
    பால் வற்றாது பொழியும்
    பாவையாம் தாயும்!

    இன்று பூத்தது
    நாளை உரமாகிடும்
    பிறவற்றுக்கு!
     
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @anupartha அருமையான வார்த்தைகளை கோர்த்து கவிதை எழுதி விட்டு ,கவிதை சரியாய் வரலைன்னு சொல்ற உங்களை என்ன சொல்வது என்று தெரியவில்லை .
     
    PavithraS likes this.
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @rgsrinivasan தாயும் சேயும் கருத்தில் வைத்து தந்த கவிதை .மிக நன்று
     
    rgsrinivasan likes this.
  10. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female

Share This Page