1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

"பக்தி விஷயங்கள்" [மங்கையர் மலருக்கு நன்&#

Discussion in 'Posts in Regional Languages' started by bharathymanian, Mar 26, 2014.

  1. bharathymanian

    bharathymanian Silver IL'ite

    Messages:
    66
    Likes Received:
    79
    Trophy Points:
    58
    Gender:
    Male
    வி.ஐ.பி.’S வி.ஐ.பி.S

    என் வி.ஐ.பி. ‘அம்மா!’

    - டாக்டர் கமலா செல்வராஜ் செயற்கைக் கருத்தரிப்பு மகப்பேறு நிபுணர்
    [​IMG]

    சென்னை நுங்கம்பாக்கம் திருமூர்த்தி நகரில் ஆரம்பித்துள்ள புதிய மருத்துவமனையில் ஒரு டெலிவரியை வெற்றிகரமாக முடித்துவிட்டு ஆபரேஷன் தியேட்டரை விட்டு வெளியே வந்தார் டாக்டர் கமலா செல்வராஜ். வி.ஐ.பி.க்கள் என்றால் பிரபலமான மனிதர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயமா என்ன? என்னைச் சுற்றி இருந்தவர்களிடமிருந்து நான் வாழ்க்கையில் கற்றுக் கொண்ட விஷயங்கள் ஏராளம். அவர்களில் ஒரு சிலரைப் பற்றிச் சொல்கிறேன்" என்றார்.
    அன்பைப் பரிமாறும் அம்முலு மாமி...முதலில் நான் அம்முலு மாமியைப் பற்றி சொல்லியாக வேண்டும். அவர் எங்கள் அப்பா பக்கத்து உறவுக்காரர். அண்மையில் தன் கணவரை இழந்துவிட்ட அவருக்கு 80 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போது முதுகில் கூன் விழுந்து விட்டது என்றாலும், அவர் இளமையாக தன் கணவரோடு குடித்தனம் நடத்திய நாளிலிருந்து எங்கள் குடும்பத்துக்கு அவர் பழக்கம். அவரது பிள்ளைகள் தனித்தனியாக செட்டில் ஆகிவிட்டாலும், அவர் இன்றைக்கும் மைலாப்பூரில் ஒரு ஃப்ளாட்டில் தன்னந்தனியாக வசித்து வருகிறார். விசேஷ நாட்களில் அவர் பூஜை செய்வதற்காக நிறைய வில்வமும், பூ மாலையும் அவருடைய வீட்டுக்கு அனுப்பி வைப்பேன். மும்பையிலிருந்து என் சகோதரிகள் சென்னை வரும்போதெல்லாம், எங்கள் நாலு பேரையும் தன் வீட்டுக்கு வரச்சொல்லி வகைவகையான ஐட்டங்களோடு காலைச் சிற்றுண்டி கொடுத்து உபசரிப்பது அவரது வழக்கம். இந்த வயசில் எதற்காக சிரமப்படறீங்க? ஒரு காஃபி கொடுத்தால் போறாதா?" என்று கேட்டால், எனக்கு உங்களைப் பார்த்தா, உங்க அம்மா நினைவு வந்திடும். அவ இருந்தா, உங்களுக்கெல்லாம் இப்படி வாய்க்கு ருசியா சமைச்சுப் போடுவாள் இல்லையா?" என்று சொல்லுவார். எதையும் எதிர்பார்க்காமல், அன்பை மட்டுமே கொடுக்கத் தெரிந்த அம்முலு மாமி ஒரு புனிதமான ஆத்மா!

    [​IMG]

    கடவுள் பக்தி மிகுந்த கங்கம்மா பாட்டி எங்கள் அப்பாவின் அம்மா கங்கம்மா பாட்டி. அவரது பக்தி ஈடு இணையில்லாத பக்தி. சரணாகதி தத்துவத்துக்கு சிறந்த உதாரணம் அவர். அவரது உச்ச பட்ச கடவுள் நம்பிக்கைக்கு உதாரணமாக ஒரு சம்பவம். 1964 தனுஷ்கோடி புயலில்போது ராமேஸ்வரத்துக்குப் போயிருந்தார்கள் அப்பாவும், சாவித்திரியும். புயலில் சிக்கிக் கொண்ட அவர்களைப் பற்றி தகவல் ஏதும் கிடைக்காத நிலையில், அவர்கள் மரணமடைந்து விட்டதாகவே எல்லோரும் நினைத்துவிட்டார்கள். நடிகர் முத்துராமன் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டிருந்த அவர், எங்கள் குடும்பத்தினரிடம், அப்பா மரணமடைந்துவிட்டார் என்ற எண்ணத்துடனே, சோகமாக துக்கம் விசாரிக்கும் வகையில் பேசிக்கொண்டிருந்தார். அந்த ஹாலில் அமைதி ஆட்கொண்டிருந்த நேரத்தில் அங்கே வந்த கங்கம்மா பாட்டி, அவனுக்கு ஒண்ணும் ஆகலை; நாலு நாள்ல பத்திரமா திரும்பி வந்திடப்போறான். யாரும் வீணா கவலைப்பட வேணாம்" என்று சொல்லிவிட்டு, தன் அறைக்குள்ளே போய் உட்கார்ந்து கொண்டு ஜபம் செய்ய ஆரம்பித்துவிட்டார். அவரது சரணாகதி பக்திக்கும், ஜபத்துக்கும் பலன் கிடைத்தது. அப்பாவும், சாவித்திரியும் அவர்களோடு சென்ற இன்னும் சிலரும் பத்திரமாகத் திரும்பி வந்தார்கள்.

    அபார பொறுமைசாலி பாப்ஜி அப்பா ராமேஸ்வரம் சென்றபோது ஒரே ஒரு தடவை புயலில் சிக்கிக் கொண்டார். ஆனால், ஒரு பெண் என்ற முறையில் எங்கள் அம்மா சந்தித்த வாழ்க்கைப் புயல்கள் ஏராளம். ஆனாலும், பூமித்தாயைப் போல அவர் அபார பொறுமைசாலி. ஒரு பிரபல சினிமா நட்சத்திரத்தின் குழந்தைகள் என்கிற அடையாளம் கொஞ்சமும் இல்லாமல், கலாசார முறையில் பக்தி சிரத்தையோடு, நல்ல பழக்க வழக்கங்களைச் சொல்லிக் கொடுத்து, தாராளமாக அன்பு காட்டி, அதே சமயம் கண்டிக்க வேண்டிய போது கண்டித்து எங்களை முழுப் பொறுப்பேற்று வளர்த்து ஆளாக்கியவர் அம்மாதான். இன்றைக்கும் எனக்கு விஷ்ணு சஹஸ்ரநாமம் மாதிரியான ஸ்லோகங்கள் எல்லாம் தெரிந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் அம்மாவும், பாட்டியும்தான். என்னுடைய பேரக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் ஆசை எனக்கு இருந்தாலும், அதற்கு எனக்கும் சரி, அவர்களுக்கும் சரி நேரமில்லை என்பதில் எனக்கு ரொம்ப வருத்தம்.

    [​IMG]

    டெடிகேடட் திறமைசாலி தேவகி டாக்டர் சுரேஷின் மெடிஸ்கேன் லேபாரட்டரியில் சோனாலஜிஸ்டாக இருக்கும் தேவகி ஓர் அபூர்வமான பெண்மணி. வழக்கமாக, ஸ்கேன் படங்களைப் பார்த்து, அதற்குரிய விளக்கங்களை டாக்டர் சுரேஷ் சொல்ல, அவரது செகரட்டரியான தேவகி சுருக்கெழுத்தில் அதை எடுத்துக் கொண்டு, ரிப்போர்ட்டைப் செய்வார். ஒரு நாள் டாக்டர் சுரேஷ் ஸ்கேனைப் பார்த்துக் கொண்டிருந்தபடி, சிறிது நேரம் வேறு ஒரு முக்கிய வேலையில் மூழ்கி விட்டு, சில நிமிடங்களில்,‘சொல்கிறேன். ரிப்போர்ட்டை எழுதிக் கொள்ளுங்கள்’ என தேவகியிடம் சொல்ல, தேவகியோ, ‘டாக்டர், நான் ரிப்போர்ட்டை எழுதி விட்டேன்‘ என்று சொல்லி, எழுதியதைக் காட்ட டாக்டருக்கு ஒரே ஆச்சார்யம். தினமும், டாக்டர் சொல்லும் மருத்துவக் குறிப்புகளை ஒரு ஸ்டெனோ என்ற முறையில் எழுதிக் கொள்ளாமல், ஸ்கேன் படங்களையும் உற்று கவனித்து, அவற்றுக்கு டாக்டர் தரும் விளக்கத்தையும் கவனமாகக் கேட்டுக் கொண்டதன் பலனாக, அவரே ஸ்கேனைப் பார்த்து, புரிந்துக் கொள்ளும் அளவுக்கு வளர்ந்து விட்டார். தேவகியின் திறமையைப் புரிந்துகொண்ட டாக்டர் சுரேஷ், அவரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்து, முறைப்படி சோனாலஜிஸ்ட் படிப்பை முடிக்க உதவி செய்தார். நடுவில் ஒரு வருட காலம் தினம் ஒரு மணி நேரம் தேவகியை எங்கள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, உதவினார் டாக்டர் சுரேஷ்.தேவகியின் தொழில் டெடிகேஷன் வெகு அபூர்வமானது.
    ---------------------------------------------------------------------------------------------

    எதையும் எதிர்பார்க்காமல் அன்பை பொழியும் புனிதமான 'அம்முலு' பாட்டியும், கடவுள் பக்தி முகுந்த 'கங்கம்மா பாட்டி' போன்ற பல புனிதமான ஆத்மாக்கள் நம்மிடையே, இன்றும் , உலவிக்கொண்டு தான் உள்ளார்கள். அப்படிபட்டவர்கள்தான்...நம் இந்திய பாரம்பரியத்தின், பண்பாட்டின் பிரதிபலிப்புகள். வழிகாட்டிகள். அவர்கள் காட்டிய வழிகளை, நாம் அனைவரும், முறையே பின்பற்றுவோம், பயனடைவோம்.

    "பாரதிமணியன்"
     
    Loading...

Share This Page