பகவான் மஹரஷியின் அப்பளப் பாட்டு

Discussion in 'Queries on Religion & Spirituality' started by Thyagarajan, Apr 23, 2021.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,726
    Likes Received:
    12,546
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello: பகவான்
    மஹரிஷியின் அப்பளப் பாட்டு :hello:

    பல்லவி

    அப்பளம் இட்டுப் பாரு – அத்தைச்
    சாப்பிட்டு
    உன் ஆசையைத் தீரு

    அனுபல்லவி

    இப்புவி தன்னில்
    ஏங்கித் திரியாமல்
    சற்போத சுக
    சற்குரு ஆனவர்
    செப்பாது சொன்ன தத்துவம் ஆகிற
    ஒப்பு உயர்வில்லா
    ஓர் மொழியின்படி
    [ அப்பள ]

    சரணம் – 1

    தான் அல்லா ஐங்கோச க்ஷேத்ரம் இதில் வளர்
    தான் என்னும் ஆனமாம் தான்ய உளுந்தை
    நான் ஆர் என் ஞான விசாரத் திரிகையில்
    நான் அல்ல என்றே உடைத்துப் பொடித்து
    [ அப்பள ]

    சரணம் – 2

    சத்சங்கமாகும் பிரண்டை ரசத்தொடு
    சமதமம் ஆகின்ற ஜீரக மிளகுடன்
    உபரதி ஆகும் அவ் உப்போடு உள்ள நல்
    வாசனையாம் பெருங்காயமும் சேர்த்து
    [ அப்பள ]

    சரணம் – 3

    கல் நெஞ்சில் நான் நான் என்று கலங்காமல்
    உள் முக உலக்கையால் ஓயாது இடித்து
    சாந்தமாம் குழவியால் சமமான பலகையில்
    சந்ததம் சலிப்பற சந்தோஷ மாகவே
    [ அப்பள ]

    சரணம் – 4

    மோன முத்திரையாகும் முடிவில்லாப் பாத்திரத்தில்
    ஞான அக்னியால் காயும் நற்பிரம்ம நெய்யதில்
    நான் அதுவாகவே நாளும் பொரித்துத்
    தானே தானாக புஜிக்கத் தன்மய
    [ அப்பள ]

    படித்ததில் பிடித்தது
     
    Last edited: Apr 23, 2021
    vidhyalakshmid likes this.
    Loading...

Share This Page