1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நேற்று மாலை என் பேருந்து பயணம்

Discussion in 'Regional Poetry' started by Caide, Aug 31, 2016.

  1. Caide

    Caide IL Hall of Fame

    Messages:
    6,460
    Likes Received:
    10,829
    Trophy Points:
    438
    Gender:
    Female
    மழையின் ஈரம் தார் பாதையில் இருக்க...
    பேருந்து குடம் தூக்கி நடக்கும் அழகிய மங்கை போல் ......
    ஒரு பக்கம் சரிந்தும் நிமிர்ந்தும்....
    கூட்டத்தை தன்னுள் அடக்கிக் கொண்டு.....
    இதோ என் நிறுத்தம் என்பது போல்...
    சக்கரங்கள் தேக்க என் முன் நின்றது....
    பெண்கள் ஓரிருவர் இறங்க...
    இறுதி என்றாலும் நான் தான் லட்டு என்று அழைத்தது இறுதி இருக்கை....
    மழையின் பின்னணி பாடகன் மண் வாசனை....
    பாடகனை எண்ணி நான் மூச்சை உள் இழுக்க....
    இது தார் சாலை ரசிகையே என்று மூளையும்......
    உன் மூக்கு ஜலதோசம் பிடித்திருகின்றது என்று மூக்கின் சிவப்பும் நினைவுருத்த.....
    என் மீதி பேருந்து பயணத்தை....
    ரசிகன் எனும் காதலன் என் மனதை ஆக்கிரமித்ததான்....
    மழையில் பிள்ளைகள் விளையாடியது மாறி...
    பள்ளிகூடங்கள் முடிந்து வரும் பிள்ளைகள்...
    வெள்ளம் வந்தால் என்ன...
    சுனாமி வந்தால் என்ன..
    நான் இடின்தால் என்ன...
    கரைத்தால் என்ன...
    நீங்கள் மட்டும் தான் வண்ண நிற ஆடைகள் அணிவிிரா......
    என்று ஓங்கி உயர்ந்து நின்ற பல வண்ண வீடுகள்...
    மழை சேர் என்றால் என்ன...
    என் வீடு, என் பெற்றோர், என் மனைவி, என் குழந்தை, என் கதலித்தான் முக்கியம் என்று...
    கழுகென பறக்கும் வண்டிகள்.....
    எங்களில் எது உன் பிரியம்...
    என்று தொங்கும் துணிகள்...
    அம்மா போதும் உன் ரசனை இறங்கலாம் என்று கூறும் மூலை..
    பேருந்து பயணம் உட்கார்ந்தாலே தான் இனிமை...
    நாளை காலை நின்று தான் உன் பயணம் என்று உணர்த்த...
    ரசிகன் போய்......
    வெறுப்பு ஆட்கொண்டது....
     
    periamma and vaidehi71 like this.
    Loading...

Share This Page