1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

*நெஞ்சைத் தொட்ட பதில்!*

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Aug 8, 2016.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    *நெஞ்சைத் தொட்ட பதில்!*
    செட்டி நாட்டு வீதியொன்றில் கீரைவிற்றுகொண்டு செல்கிறாள் ஒருபெண். வீட்டு வாசலில் மகனோடுஅமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளைக் கூப்பிடுகிறாள்.
    " ஒரு கட்டு கீரை என்ன விலை....?"
    " ஓரணாம்மா"
    "ஓரணாவா....? அரையணாதான்தருவேன். அரையணான்னு சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டு போ"
    "இல்லம்மா வராதும்மா".
    " அதெல்லாம் முடியாது. அரையணாதான்". பேரம் பேசுகிறாள் அந்தத் தாய்.பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்தபெண் கூடையை எடுத்துக்கொண்டு சிறிது தூரம் சென்றுவிட்டு, "மேல காலணா போட்டு கொடுங்கம்மா" என்கிறாள்
    "முடியவே முடியாது. கட்டுக்குஅரையணாதான் தருவேன்"... என்று தாய் பிடிவாதம் பிடித்தாள்.
    கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு "சரிம்மா உன் விருப்பம்" என்று கூறிவிட்டு நாலு கட்டு கீரையைக் கொடுத்துவிட்டு ரெண்டணா காசை
    வாங்கிக் கொண்டு கூடையை தூக்கிதலையில் வைக்க போகும் போது கீழேசரிந்தாள்.
    *"என்னடியம்மா காலை ஏதும் சாப்பிடலையா...?"* என்று அந்த தாய் கேட்க,
    "இல்லம்மா போய்தான் கஞ்சி காய்ச்சிணும்"
    "சரி. இரு இதோ வர்றேன்." என்றுகூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள்,திரும்பும்போது ஒரு தட்டில் ஆறு இட்லிகளையும், அவற்றிற்குத் தேவையான சட்னியையும் வைத்துக் கொண்டு வந்தாள். "
    ”இந்தா சாப்பிட்டுவிட்டுப் போ" என்று கீரைக்காரியிடம் கொடுத்தாள்.
    எல்லாவற்றையும்பார்த்துகொண்டிருந்த அந்தத் தாயினுடைய மகன்" ஏம்மா அரையணாவுக்கு பேரம் பேசுனீங்க..ஒரு இட்லி அரையணான்னு வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு ரெண்டரையணா வருதும்மா.....? என்றுகேட்க
    *அதற்கு அந்த தாய், "வியாபாரத்துல தர்மம் பார்க்ககூடாது, தர்மத்துல வியாபாரம் பார்க்ககூடாதுப்பா" என்று நெத்தியடியாகக் கூறினாள்.*
    நெஞ்சைத் தொட்ட அந்தப் பதில், அன்று முழுவதும் மனதையே சுற்றி வந்தது
     
    periamma and deeprapriya like this.
    Loading...

Share This Page