1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நூற்றில் ஒரு வார்த்தைகள்

Discussion in 'Posts in Regional Languages' started by mathangikkumar, Mar 17, 2014.

  1. mathangikkumar

    mathangikkumar Platinum IL'ite

    Messages:
    1,438
    Likes Received:
    1,659
    Trophy Points:
    283
    Gender:
    Female
    [h=3][/h]இன்னிக்கு நாம நம்ம ஆசிரியர் கொடுக்கற சாபத்தையும் திட்டையும் எப்படி வரமா மாத்தறதுனு சொல்லப் போறேன்..........

    1. நீ மாடு மேய்க்கத்தாண்டா லாயக்கு - இதுக்காக எல்லாம் கவலைப் பட வேண்டாம்..........சிம்பிளா ஒரு மாட்டுப் பண்ணை ஆரம்பிச்சுடுங்க............. நமக்கும் லாபம்............ஆசிரியருக்கும் திருப்தி அவர் சொன்னத நாம பண்ணிட்டோமேனு..................

    2. நீ எல்லாம் நடுத்தெருவுலதாண்டா நிப்ப - இது ஒரு பிரச்சினையே இல்லைங்க..........பேசாம Traffic Police Exam எழுதி பாஸ் பண்ணிடுங்க............ Problem solved...........

    3. பொறம்போக்கு......... பொறம்போக்கு...... - சாபத்துலயே சூப்பரானது இதுதாங்க.........அரசியல்ல குதிங்க........அரசியல்வாதி ஆயிடுங்க.......... அப்புறம் என்ன எல்லா பொறம்போக்கும் நம்மகிட்டதான்..........அட நான் நிலத்தைத் தாங்க சொன்னேன்...........

    4. எதைக் கேட்டாலும் மரம் மாதிரி நிக்கிறான் பாரு....வாயைத் தொறடா - வேற என்ன நேரா பிரதமர் ஆயிட வேண்டியதுதான்.........

    ஆனா ஒண்ணுங்க........அவர் என்ன வேணா திட்டட்டும்............ஆனா இப்ப சொல்லப் போற சாபத்தை மட்டும் வாங்கிடாதீங்க.......... அது என்னன்னா.............

    "நீ எல்லாம் உருப்படவே மாட்டடா............உருப்படவே மாட்ட........... வாழ்க்கைல ரொம்ப அடிபடுவ பாரு......."

    இந்த சாபத்தை மட்டும் வாங்கிட்டீங்க........... அவ்வளவுதான்........... என்ன நடக்கும்னு சொல்லித்தான் ஆகணுமா..............
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    கல்யாணம் நடந்துடும் பா...........கல்யாணம் நடந்துடும்.............

    ...........................................


    பள்ளிக்கூடத்துலrough note எது, homework note

    எதுன்னு தெரியாம இருந்தவனெல்லாம்....!
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    இப்போ Samsung note வச்சுக்கிட்டு சுத்தறான்..

    ,,,,,,,

    தெரிந்து கொள்ளுங்கள்

    ---------------------------------
    1. நீ அனுபவி -- அது தான் ஞானம்.

    2. பிறரை அனுபவிக்கச் செய்--அது தான் தர்மம்.

    3. உங்கள் நம்பிக்கையை பணத்தின் மீது வைக்காதீர்கள்; பணத்தை நம்பிக்கையான இடத்தில் வையுங்கள்.

    4. உப்பு விளைவதும் தண்ணீரிலே, கரைவதும் அதிலேயேதான்.

    5. ஜலதோஷத்திற்குச் சாப்பாடு போடுங்கள்; ஜுரத்திற்கு பட்டினி போடுங்கள்.

    6. கனவுகளை நேசியுங்கள். ஆனால்- நிஜத்தோடு நெருங்கி வாழுங்கள்.

    7. கந்தலானாலும் அதிகமாக கசக்காதீங்க, மேலும் கந்தலாகும்.

    8. வளமான காலத்தில் நண்பர்கள் நம்மை தெரிந்து கொள்கிறார்கள். வறுமை காலத்தில் நாம் நண்பர்களைத் தெரிந்துகொள்கிறோம்.

    9. உன்னுடைய பிள்ளைகள் கெட்டவர்களாயிருந்தால், நீ அவர்களுக்கு சொத்து சேர்த்து வைக்க தேவையில்லை.

    10. உன் பிள்ளைகள் நல்லவர்களாயிருந்தால், உன்னுடைய சொத்து அவர்களுக்கு தேவையில்லை.

    ........

    ............
    அறஞ் செய இரும்பு

    ஆறுவது காபி

    இயல்வது பெட்டிங்

    ஈவது லஞ்சம்

    உதவுவது கடத்தல்

    ஊதுவது சிகரெட்

    எப்படியும் பணம் சேர்

    ஏமாற்றிப் பிழை

    ஐஸ் வைக்கக் கற்றுக்கொள்

    ஒருவனை (ளை) மட்டும் நேசி

    ஓசியில் வாழப் படி.

    ஒள… (தெரியலீங்க)

    ....................


    நவீன திருக்குறள்…

    அகர முதல எழுத்தெல்லாம் தகர
    சிலேட்டில் எழுதிப் பழகு.

    ஆட்டலில் நல்லாட்டல் மாவாட்டல் அவ்வாட்டல்
    ஓட்டலில் ஆட்டப் படும்.

    கற்க கசடற கற்பவை கற்றபின்
    நிற்க Employment Office முன்.

    இன்பத்துள் இன்பம் சொறியின்பம் அவ்வின்பம்
    சொரிந்தபின் துன்பம் தரும்.

    எல்லா விளக்கும் விளக்கல்ல எரியாத
    Municipality விளக்கே விளக்கு.

    கற்ககசடற கற்கண்டு குமுதம் கற்றபின்
    விற்க பாதி விலைக்கு …

    போடுக தண்ணி போடுக போட்டபின்
    ஆடுக அதற்கு தக.
    புதுக்குறளமுதம்.....


    1.அம்மா சுட்ட தோசை ருசித்திடும்-
    ருசிக்காதே மனைவி சுட்ட தோசை...

    2.முதுகில் குத்துவோரை ஒறுத்தல் அவர் மூக்குவீங்க
    மூஞ்சியில் குத்தி விடல்...

    3.கள்ளஓட்டு லஞ்சம் வெட்டுக்குத்து இந்நான்கும்
    செய்வது அரசியல்வாதிக்கியல்பு...

    4.யாகாவாராயினும் Password காக்க காவாக்கால்
    சோகாப்பர் hack செய்யப்பட்டு.

    5.விரும்பிய மனம் விரும்பா விடின்
    துரும்பா இளைப்பார் தூய காதலர்..

    6.ரன் எடுத்து ஆடுவாரே ஆடுவார்...
    மற்றெல்லாம் டக்கெடுத்து பின் செல்பவர்

    7.CHAT எனில் FB-CHATசெய்க இல்லையேல்
    CHATடலின் CHATடாமை நன்று

    8.மாவினால் சுட்ட வடை உள்ளாறும் ஆறாதே
    வாயினால் சுட்ட வடை

    9.மொக்கை போடுதல் எல்லார்க்கும் எளிது
    அரியவாம் கடலைபோ டுதல்

    10.பீடியால் சுட்ட புண் உள்ளாறும்
    ஆறாதே லேடியால் கெட்ட மனம்

    11.கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை தன் திருமணத்தன்று
    தாகசாந்தி செய்ய மறுக்கும் நண்பனுக்கு

    12.போடுக கடலை போடுக போட்டபின் பில்லுகட்டுக அதற்குத் தக...

     
    Loading...

Share This Page