1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நீ இல்லாமல் வாழ்வது அரிதே

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Nov 5, 2022.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,726
    Likes Received:
    12,547
    Trophy Points:
    615
    Gender:
    Male
    நீ இல்லாமல்
    வாழ்வது அரிதே

    உருளைக் கிழங்கு ​
    அவதார மகிமை.

    தோசைக்குள் பதுங்கி , மதிப்பு கூட்டி மசால் தோசை ஆனாய்
    பூரிக்கு பக்கத்தில் இடம் பிடித்து பூரிக்கிழங்கு ஆனாய்
    தேய்த்து மடித்த மைதாவுக்குள் ஒளிந்திருந்து சமோசா ஆனாய்
    சிறிய பூரி ஓட்டை வழியே எட்டிப் பார்த்து பானிபூரி ஆனாய்
    எண்ணெய் கடாயில் பொரித்து எழுந்து தங்க நிற finger chips ஆனாய்
    உருவத்தில் சிறியது என்றாலும்
    உதாசீனம் செய்யாமல்
    பச்சை பட்டாணியுடன்
    தோழமை கொண்டு
    பொரியல் ஆனாய்
    கடலை பருப்புடன் கூட்டணி வைத்து கூட்டு ஆனாய்
    வட இந்தியாவில்
    பச்சைமிளகாய் மற்றும் பன் னுடன்
    நட்பு பாராட்டி
    வடா பாவ் என நாமகரணம் கொண்டாய்
    ருசித்து உண்பவரின்
    இடுப்பு பகுதியை
    புதிய பெயிண்ட் அடித்த மர பெஞ்ச் போல
    இழுத்து வைத்து
    பிடித்துக் கொண்டாலும்
    உருளைக்கிழங்கே !
    நீ இல்லாமல்
    வாழ்வது அரிதே !
     
    Loading...

Share This Page