1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நீ இன்றி நானும் இல்லை கண்ணம்மா-கதைப்பகுத

Discussion in 'Stories in Regional Languages' started by amlu, Aug 12, 2014.

  1. amlu

    amlu Bronze IL'ite

    Messages:
    43
    Likes Received:
    26
    Trophy Points:
    38
    அத்தியாயம்-1
    சார் என்னோட பொண்ண காணும் சார் ப்ளீஸ்.. நீங்க தான் சார் கண்டு பிடிச்சு கொடுக்கணும்..”
    “ஏன்மா இப்படி எங்களோட உயிரை வாங்கிட்டு இருக்க.. உங்க பொண்ணு எவன் கூட ஓடி போனாளோ?..”
    “சார் என்னோட பொண்ணு அப்படிப்பட்ட பொண்ணு இல்லை சார்.. உங்க வாய்க்கு வந்தபடி பேசாதிங்க..”
    “என்னமா ஓவரா பேசுற..சரிமா அவ போட்டோ கொடுத்துட்டு போ.. விசாரிச்சிட்டு சொல்றேன்..”
    சரஸ்வதியின் ஒரே மகள் தான் காவ்யா.. நேற்று படிக்க காலேஜ் போனவள்தான் இன்னும் வீடு திரும்பவில்லை.. அவள் மொபைலுக்கு கால் செய்தால் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு தான் வந்தது..சரஸ்வதியின் கணவன் ராஜனுக்கு வெளிநாட்டில் வேலை.. அவருக்கு தொடர்பு கொண்டு பேசினால் அவர் உடனே இந்தியா வருவதாக சொன்னார்..
    தவம் இருந்து பெற்ற அந்த தாயின் உள்ளம் பதறியது.. நேற்று காணாமல் போனவள் யாரிடம் மாட்டிகொண்டு கஷ்ட படுகிறாளோ அல்லது விபத்து ஏதும்..நினைக்கும் போதே நெஞ்சம் பதறியது..
    அவர் நேராக சென்றது கோவிலுக்கு மகளை காப்பாற்றி தரும்படி வேண்டிக்கொள்ள.. அவர் மகளின் வாழ்க்கை விதியின் பிடியில் இருப்பதை அந்த தாய் அறிந்து கொள்ளாதது அதோ பரிதாபம்...
     
    4 people like this.
    Loading...

  2. vsuganya

    vsuganya Bronze IL'ite

    Messages:
    61
    Likes Received:
    41
    Trophy Points:
    38
    Gender:
    Female
    Re: நீ இன்றி நானும் இல்லை கண்ணம்மா-கதைப்பகு&#2

    Good start....! Just a suggestion- Pls post lengthy ones....:)

    Waiting for the next post..... !!!
     
    1 person likes this.
  3. amlu

    amlu Bronze IL'ite

    Messages:
    43
    Likes Received:
    26
    Trophy Points:
    38
    Re: நீ இன்றி நானும் இல்லை கண்ணம்மா-கதைப்பகு&#2

    சென்னை
    ஏஞ்சலின் காலையில் எழுந்தவுடன் வேறுபாட்டை உணர்ந்தாள்.. எதோ ஆடவன் மார்பின் மேல் படுத்து இருந்தாள்.. கண்ணை கசக்கி பார்த்தால் சித்தார்த்.. அவள் கணவன் மூன்று மாதம் முன்பு தான் தாலி கட்டி மனைவியாக்கினான்.. சிறு வயதிலிருந்து கூட வளர்ந்தவன் ஆனால் அவள் மனம் தான் அவனை கணவனாக ஏற்கவில்லை.. ஏன் அவள் பெற்றோரிடம் கூட வெளிப்படையாக பேச முடியாமல் ஏதோ ஒன்று தடுக்கிறது?.. அனைவரிடமும் விலகியே இருந்தாள்..சித்தார்த்திடம் முதல் இரவில் கூட கொஞ்சம் நாள் கழித்து குடும்பம் வாழ்வை ஆரம்பிக்கலாம் என்று கேட்டு பார்க்க நினைத்தாள்..ஆனால் அவன் கண்களில் காதலை தேக்கி வைத்து அவளை நெருங்கும் போது பாவம் அவள் என்ன செய்வாள்.. சித்தார்த் அந்தரங்க நேரங்களில் ஏஞ்சல் என்று அழைத்து கொஞ்சும்போது மயங்கியது அந்த பேதை நெஞ்சம்..அவள் மனமோ இது உன் இடம் இல்லை விலகி போ என்று ஏலமிட்டது ஆனால் அவள் அவனை விட்டு விலகி அவனை காயப்படுத்த விரும்பவில்லை..
     
    2 people like this.
  4. amlu

    amlu Bronze IL'ite

    Messages:
    43
    Likes Received:
    26
    Trophy Points:
    38
    Re: நீ இன்றி நானும் இல்லை கண்ணம்மா-கதைப்பகு

    விஸ்வநாதன்-மேரியின் ஒரே புதல்வன்.. சித்தார்த்ms neuro முடித்து விட்டு விஸ்வநாதனின் hospital பார்த்துக்கொள்கிறான்..
    விஸ்வநாதன் மேரி காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர்.. விஸ்வநாதன் தங்கையை மேரியின் தம்பி ஜான் திருமணம் செய்துவைத்தார்..ஜான்க்கு இரு பிள்ளைகள்..மூத்தவள்- ஏஞ்சலின்..சின்னவன் பெயர்-மைக்கேல்.. ஏஞ்சலின் சித்தார்த் அத்தான் விருப்பப்படி Interior Designing Course முடித்துவிட்டு தந்தையின் constuction கம்பெனியில் அவருக்கு உதவியாக வேலை பார்க்கிறாள்..
    மைக்கேலுக்கு எப்போவும் சித்தார்த் தான் முன் உதாரணம்..அவன் சொன்னால் மறு பேச்சு பேசாமல் கேட்டுக்கொள்வான்..சித்தார்த் செய்தால் சரியாக தான் இருக்கும் என்ற நம்பிக்கை.. நம்பிக்கை பொய் ஆகும் போது??..
    மைக்கேல் அவன் ஜான் கம்பெனியை பார்த்துக்கொள்ள be சிவில் படிக்க சொல்லிய ஒரே காரணத்திற்காக அவனும் be சிவில் எடுத்து படித்தான்..
     
    Last edited: Aug 15, 2014
    1 person likes this.
  5. amlu

    amlu Bronze IL'ite

    Messages:
    43
    Likes Received:
    26
    Trophy Points:
    38
    Re: நீ இன்றி நானும் இல்லை கண்ணம்மா-கதைப்பகு&#2

    சித்தார்த் ஏஞ்சலினை கல்யாணத்திற்கு பிறகு வேலைக்கு போக வேண்டாம் என்று சொல்லியதால் அவளும் வீட்டில் மேரியை கவனமாக பார்த்துக்கொள்கிறாள்.. கம்பெனியை மைக்கேல் பார்த்துக்கொள்கிறான்.. மேரி இதய நோயாளி.. மேரியை கவனமாக பார்த்துக்கொள்ள சொல்லியதால் அவளும் பார்த்துக்கொள்கிறாள்.. நாட்கள் கடந்தது..ஏஞ்சலின் தாய்மை அடைந்தாள்..
     

Share This Page