1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நீயும் சிவம், நானும் சிவம் !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, May 13, 2015.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    திகம்பரராய்ப் பிறந்து வந்தோம் !
    பரம்பொருளை உணர்ந்திருந்தோம் !
    ஜகம் புரியும் மாயையிலே,
    வரமதனை மறந்து விட்டோம் !

    மறந்த வரம் திரும்பப் பெற,
    சிறந்த வழி என்னவென்று,
    துறந்த பல முனிவரிடம்
    அறிந்து கொள்ள விரும்புகின்றோம் !

    இடர் தரும் இப் பிறவி நீக்கி,
    தொடர்ந்து வரும் கருமம் போக்க,
    அடர் இருளை நீக்கும் ஞானச்
    சுடர் நமக்குள் இருக்குதையா !

    நீயும் சிவம் ,நானும் சிவம்,பூமி சிவம்,வானம் சிவம்,
    நாயும் சிவம்,நரியும் சிவம்,ஜீவன் எல்லாமும் சிவம்,
    தூய அன்பு யாவும் சிவம் என்பதனை உணர்ந்து விட்டால்,
    பாயும் அந்த ஞானச் சுடர்! போகும் இந்தப் பாவ உடல் !

    சித்தமெல்லாம் அன்பு என்னும்
    பித்தம் வந்தால் போதுமையா !
    எத்துயரும் விலகி ஓடும் !
    ஏத்தும் இந்த உலகமையா !

    Regards,
    Pavithra

    @periamma, @jskls, @VanithaSudhir- எல்லோருக்கும் திருப்தியா ?:)
     
    8 people like this.
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பவித்ரா பரம திருப்தி .இந்த சின்ன வயசில் இவ்வளவு ஞானமா .
    அன்பே சிவம் .
     
    1 person likes this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பெரியம்மா,
    நான் வாழ்க்கையில் பல அடி பட்ட போதும்,பெரிய அஞ்ஞானி ..உங்க பெரிய வார்த்தைக்கு கொஞ்சமும் தகுதி இல்லாதவள்.. உங்கள் பிரியத்திற்கு நன்றி...

    என்றும் அன்புடன்,
    பவித்ரா
     
    1 person likes this.
  4. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Hi @PavithraS,

    அருமையான வார்த்தைகள் .அழகு தமிழ்.

    நீயும் சிவம் ,நானும் சிவம்,பூமி சிவம்,வானம் சிவம்,
    நாயும் சிவம்,நரியும் சிவம்,ஜீவன் எல்லாமும் சிவம்,
    தூய அன்பு யாவும் சிவம் என்பதனை உணர்ந்து விட்டால்,
    பாயும் அந்த ஞானச் சுடர்! போகும் இந்தப் பாவ உடல் !

    சித்தமெல்லாம் அன்பு என்னும்
    பித்தம் வந்தால் போதுமையா !
    எத்துயரும் விலகி ஓடும் !
    ஏத்தும் இந்த உலகமையா !

    வார்த்தை, வரிகள் மிக அருமை :clap
     
    1 person likes this.
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @Harini73,

    Thank you, Harini !

    Regards,

    Pavithra
     
  6. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,410
    Likes Received:
    24,174
    Trophy Points:
    538
    Gender:
    Male
    Dear Pavithra,

    Excellent choice of words and very well written poem. World - Sivam= Savam and World - Maya = Sivam.

    Viswa
     
  7. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Thank you , Sir !

    Sivam, Savam - crisply explained !

    Regards & Respects,

    Pavithra
     
  8. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அன்பில் சிவத்தை தேடியும்
    சிவத்தில் அன்பை தேடியும்
    மயங்குதே இம்மானுடம்

    மயக்கம் அது தீர்ந்திட்டால்
    அன்பையும் கொள்ளலாம்
    சிவத்தையும் வெல்லலாம்

    பவித்திர வாசகமும் திருவாசகமாய் உள்ளதே !!! உங்கள் கவிதையை போற்ற தகுதி இல்லை. அனுபவிக்க மட்டுமே ஆவல் உள்ளது. நன்றி
     
    3 people like this.
  9. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    நல்ல முயற்சி பவித்ரா! வாழ்த்துக்கள்!

    பித்தனென உனைச் சொல்வாரும்,
    நக்கனென உன்னை இகழ்வாரும்,
    சுற்றமென உனைக் கொள்வாரும்,
    மற்றும் உனை நினையாதாரும்,

    இன்னும், பலரும் எல்லாமும்
    உனக்கொன்றே என அறிவேனையா!
    உன் அன்போ எம் எல்லோரிடத்தும்
    ஒன்றே என்றும் உணர்ந்தேனையா!

    உம்மிடம் வேண்டிக் கொள்வாரோ
    பலர் தானெனினும், உமக்கேதும்
    வேண்டுமோ எனக் கேட்பாரோ
    எவரேனும் உண்டோ என்றேனும்?

    சிவமது என்ன எனத் தேடும்
    சித்தரும் இறுதியில் கண்டிடுவார்;
    சிவமே அன்பெனவே உணர்ந்தாரும்
    சிவனில் உருகிப் பின் கரைந்திடுவார்!
     
    3 people like this.
  10. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Jskls, Thank you ! Mayakkam theerath thaan marundhum sivame thaan !
    (you have all the eligibility / knowledge to review my so called poetry, please do not write big words, it really makes me nervous. )
    Regards,
    Pavithra
     
    1 person likes this.

Share This Page