1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நீயிருந்தால் நானிருப்பேன்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Mar 5, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    வானாக நீயிருந்தால்
    நிலவாக நானிருப்பேன்

    வெளியாக நீயிருந்தால்
    ஒலியாக நானிருப்பேன்

    மலராக நீயிருந்தால்
    நறுமணமாக நானிருப்பேன்

    கடலாக நீயிருந்தால்
    அலையாக நானிருப்பேன்

    வழியாக நீயிருந்தால்
    நதியாக நானிருப்பேன்

    நிலமாக நீயிருந்தால்
    மரமாக நானிருப்பேன்

    இரவாக நீயிருந்தால்
    மீனாக நானிருப்பேன்

    காற்றாக நீயிருந்தால்
    தென்னகீற்றாக நானிருப்பேன்

    இசையாக நீயிருந்தால் - அதன்
    அசைவாக நானிருப்பேன்

    உறவாக நீயிருந்தால்
    உயிராக நானிருப்பேன்

    நீயிருந்தால் மட்டுமே நானிருப்பேன் ......
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வேணி,

    ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு.

    எதையுமே நீங்க விட்டு வைக்கல, :thumbsup
    நான் என்ன பண்றது?

    சீரியஸ் ஆக நீ இருந்தால்,
    ஜோக் ஆக நான் இருப்பேன்.

    கணினியாக நீ இருந்தால்,
    ஆப்பரேடிங் சிஸ்டமாக நான் இருப்பேன்.

    ஐபோனாக நீ இருந்தால்,
    நெட் வோர்காக நான் இருப்பேன்.

    டிவி ஆக நீ இருந்தால்,
    சீரியல் ஆக நான் இருப்பேன்.

    அடுப்பாய் நீ இருந்தால்,
    கேஸ் ஆக நான் இருப்பேன்.

    கிரைண்டர் ஆக நீ இருந்தால்,
    மாவாக நான் இருப்பேன்.

    மிக்சி ஆக நீ இருந்தால்,
    சட்னி ஆக நான் இருப்பேன்.

    ப்ரஷாக நீ இருந்தால்,
    பேஸ்ட் ஆக நான் இருப்பேன்.

    கால் ஆக நீ இருந்தால்,
    செருப்பு ஆக நான் இருப்பேன்.

    செடியா ஆக நீ இருந்தால்,
    பூ ஆக நான் இருப்பேன்.

    முடி ஆக நீ இருந்தால்,
    பேன் ஆக நான் இருப்பேன்.

    கதவாக நீ இருந்தால்,
    பூட்டு ஆக நான் இருப்பேன்.

    நிஜம் ஆக நீ இருந்தால்,
    நிழல் ஆக நான் இருப்பேன்.

    பர்ஸ் ஆக நீ இருந்தால்,
    பணம் ஆக நான் இருப்பேன்.

    பஸ் ஆக நீ இருந்தால்,
    பயணி ஆக நான் இருப்பேன்.

    வாழ்க்கைப் பயணத்தில் உடன் இருப்பேன்,
    நீ இருந்தால் மட்டுமே நான் இருப்பேன்......

    வேணி,

    கவிதை ஆக நீ இருந்தால்,
    பின்னூட்டம் ஆக நான் இருப்பேன்.

    அது தான் இங்கு எல்லாருக்குமே நல்லதாக இருக்கும். :biglaugh
     
    Last edited: Mar 5, 2010
  3. Suhania

    Suhania Senior IL'ite

    Messages:
    232
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Ada Ada, kalakkunga Veni & Natpudan.....
     
  4. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    DEAR VENI,

    Idu enna kavi ootru irukka ungalukkulle.

    Kaviyaga nee irundu
    Pinnottamaga Nats irundal-ungal
    Fan aga nan iruppen!!!!!!!

    idu eppdai irukku.


    ganges
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்கு பா.......

    இமையாக நீயிருந்தால்
    இமைக்காமல் பாத்திருப்பேன்

    விழியாக நீயிருந்தால்
    இமை கொண்டு காத்திருப்பேன்

    கதையாக நீ இருந்தால்
    கருவாக நான் இருப்பேன்

    கவியாக நீ இருந்தால்
    கருத்தாக நான் இருப்பேன்

    குழலாக நீயிருந்தால்
    இசையாக நானிருப்பேன்

    ஓடாக நீயிருந்தால்
    வீடாக நானிருப்பேன்

    காடாக நீயிருந்தால்
    கூடாக நானிருப்பேன்

    மழையாக நீயிருந்தால்
    மயிலாக நானிருப்பேன்

    இதெல்லாம் ஓகே. ஆனா, சீரியல், பேன் அப்டீனெல்லாம் எழுதக் கூடாது. சரியா???

    தங்கள் பின்னூட்டம் கண்டு ரசித்து மகிழ்ந்தேன்.
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    வீரியம் மிக்க விதையாய் தங்கள் கவிதை இருக்கும் போது, விருட்சம் போல பின்னூட்டங்கள் எத்தனையோ வரும். எனது கவிதைகளுக்கு வரும் தங்களது பின்னூட்டங்கள் தான் எனது கவிதைக்கு தை.

    நன்றிகள் உங்களுக்கு பல.
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Hey Suja,

    Glad to see you here friend and thank you so much for your kind words. Naan enga kalakkaren. Avarthaan kalakko, kalakko-nu kalakikittu irukkaru.

    Grinder-la maavaiyum, mixi-la chatniyaiyum...:biglaugh
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ரசிகமணி கங்கா,

    கவி ஊற்று உள்ளே இருந்தாலும் - உங்கள்
    பின்னூட்டங்களை படிக்கும் போது உண்டாகும் மகிழ்ச்சி கீற்று
    அதற்க்கு என்றும் இல்லை ஈடு - அதை
    எழுதவும் இல்லை ஏடு

    தரமான பின்னூட்டங்களை என்றும் அள்ளி வழங்கும் கங்கைக்கு நன்றி
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஜக்கம்மா தயவில நானும்,
    கொஞ்சம் மிச்சம் வச்சிருக்கேன்.


    கேணி ஆக நீ இருந்தால்,
    ஊற்று ஆக நான் இருப்பேன்.

    நதி ஆக நீ இருந்தால்,
    நீர் ஆக நான் இருப்பேன்.

    கடல் ஆக நீ இருந்தால்,
    அலை ஆக நான் இருப்பேன்.

    படம் ஆக நீ இருந்தால்,
    திரை ஆக நான் இருப்பேன்.

    விரல் ஆக நீ இருந்தால்,
    மோதிரம் ஆக நான் இருப்பேன்.

    கழுத்து ஆக நீ இருந்தால்,
    செயின் ஆக நான் இருப்பேன்.

    பருப்பு ஆக நீ இருந்தால்,
    சாம்பார் ஆக நான் இருப்பேன்.

    பைக் ஆக நீ இருந்தால்,
    ஹெல்மெட் ஆக நான் இருப்பேன்.

    கார் ஆக நீ இருந்தால்,
    சேப்டி பெல்ட் ஆக நான் இருப்பேன்.

    கேள்வி ஆக நீ இருந்தால்,
    பதில் ஆக நான் இருப்பேன்.
     
  10. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    paravai pola ungal kavithaikku, irakkaiyaai nats in pinnootangal.... aha magaa porutham yella varigalumeee.....

    nats in mixie yil irunthu vandha chutney sema :rotfl
     

Share This Page