1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நிழல்!

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Jun 7, 2016.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    வழக்கம் போல் தாமதமாய் எழுந்து
    அவள் பதற்றத்துடனே கிளம்புகிறாள்.
    காரணமான அவனைக் கடிந்து
    ஒரு புன்சிரிப்புடனே ஓடுகிறாள்.

    இத்தனை தூரம் ஒருவர் பால்
    ஈர்க்கப் பட முடியும் என்றே
    இத்தனை நாளாய் அறியாமல்
    வாழ்ந்திருக்கிறேன் நான் தனியே!

    எண்ணத்தில், சொல்லில், ஏன் செயலில்
    அவனைத் தொடரும் அவள் முகம் கண்டேன்.
    விபரீதப் பித்தோ? என ஒரு நொடியில்
    ஐயுற்றேன்! எனையே கடிந்து கொண்டேன்.

    அவன் நிழலைச் சிறை பிடித்தேனும் நான்
    அவளிடம் ஒப்படைத்திட ஆசை கொண்டேன்!
    அவள் சீற்றம் கொள்வாளோ என்றே தான்
    ஒரு தயக்கத்துடன் தள்ளி இருக்கின்றேன்.

    அவள் எனக்குறவா? என வினவுகிறீர்!
    அதனால் தானே? என முடிவு செய்தீர்.
    அவளை நிழலாகத் தொடர்ந்தவனின்
    அந்நிலையை அறிந்திட மாட்டீர் நீர்!
     
    Last edited: Jun 7, 2016
    Rajiv and jskls like this.
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    வருடத்திற்கொருமுறை படரும் வித்தியாசமான நிழல் - உங்கள் கவிதைத் தலைப்பைச் சொன்னேன் .
    ஒரு தலைப்பு, இரு பார்வை !
     
    rgsrinivasan likes this.
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thats a coincidence Pavithra. But the central metaphor remains the same. Thanks to your keen observation and feedback. -rgs
     

Share This Page